தொடர்கள்
கதை
மாறிய மனசு - ஆனந்த் ஶ்ரீனிவாசன்

20240320094247651.jpeg

நகரம் மாதிரி இல்லாமல், கிராமம் மாதிரியும் இல்லாமல், இருந்த அந்த ஊரின் போஸ்ட் ஆபிசை திறக்க, மதியம் 1மணி வாக்கில் , தன்

குவார்டஸ்லிருந்து வெளியே வந்த போஸ்ட் மாஸ்டர் சத்யா, ஆபீஸ் எதிர்புரம் உள்ள, டாக்டர் ராகவன் வீட்டின் முன்பு , ,பத்து பதினைந்து பேர்கள் கூட்டமாகக் கூச்சல் போட்டுக் கொண்டு இருந்ததை கவனித்தான். .

"டாக்டர் சார் !கதவை திறங்க, கதவை திறங்க ' இங்கே ஒரு பிஞ்சு உயிர் கொஞ்சம் கொஞ்சமா போய்க் கிட்டு இருக்கு. " வாசல் கேட்டை போட்டு உலுக்கி எடுத்தார்கள்.

டாக்டர் மனைவி முழுச் செவிடு. காதில் கேக்காதே. அதுவும் வீட்டுக்குக் கடை கோடி யில் உள்ள கிச்சன்ல , , சமைச்சி கிட்டு இருக்கிற நேரம். சுத்தமா காதுல விழாது; டாக்டர் கூட இந்நேரம் திருக்குவளையிலே இருப்பவர் ஆச்சே!

.

சத்யாவுக்குச் சட்டென ஒரு யோசனை தோன்றவே சீக்கிரம் ஆபிசை திறந்தவன்,

அடுத்த நிமிடம் திருக் குவளை போஸ்ட் மாஸ்டர் ஐ கூப்பிட்டு' அவர் ஆபீஸ் எதிரில் கிளினிக் நடத்தும் டாக்டரிடம் 'விஷயத்தைச் சொல்லி 'உடனே கிளம்பி வர சொல்லியிருந்தான் சத்யா. . அந்த ஊர் போஸ்ட்மாஸ்டர் மூலம்.

இப்போது மாதிரி ஒவ்வொருவரும் கை பேசியோ 'லேண்ட்லைன் போன் வசதியோ வைத்துக் கொள்ள முடியாத காலம். பெரும் பணக்காரர் வீட்டில மட்டும் அந்த வசதி இருக்கும். ஒரு வீட்டுக்கு போன் வசதி அவ்வளவு சீக்கிரமா கிடைக்காது. அந்தளவிற்கு . அவ்வளவு கட்டுப்பாடு.

தகவல் சொல்ல வேண்டும் என்றால், உள்ளூர் போஸ்ட் ஆபீஸ் மூலம் தான், , வெளியூர் போஸ்ட் ஆபீஸ் கக்கு கூப்பிட்டு பேச வேண்டிய நிலைமை.

ஏன் டாக்டர் க்கு கூட அந்த வசதிககாகக் காத்திருக்கும் நிலைமை.

வரும் கடிதங்கள் எல்லாம் கைராசி டாக்டர் என்று வருமே தவிர டாக்டர் ராகவன் என்று பெயரில் வந்தது கிடையாது. அந்த அளவுக்கு ஊர் மக்கள் , பக்கததில் உள்ள சுற்று புற கிராம மக்களின் நன் மதிப்பையும்

அபிமானத்தையும்

பெற்றவர்.

அந்தத் தெருவில் இவரிடம் மட்டும் சத்யா விற்குக் கூடுதலாக நட்பு.

“நம்ம டாக்டர் வீட்டுக்கும் திருக்குவளைக்கும் 3 கி. மீ தூரம் தான். 10 நிமிஷம் தான் வந்துடுவாரு”.

கூட்டத்தில் இருந்த ஒருவரை என்ன எதுவென்று விசாரிக்க,

"சார் நம்ம வட்டி கடை, வடுகநாதனுடைய 12வயசு பையனை, நல்ல பாம்பு கடிச்சு விஷம் ஏறிடுச்சி. அதான் டாக்டர் அய்யாவை பாக்க வந்தோம். டாக்டர் வீட்டில இல்லே போலிருக்கு.”

“இப்ப என்ன செய்யறதுன்னு தெரியல?. கைராசி டாக்டர். அவர் தொட்டாலே வியாதி குணமாகும். எங்கே இருக்காருன்னு தெரியல. "

அதற்குள் யார் யாரோ தங்களுக்குத் தெரிந்த முதல் உதவியைப் பற்றி சொல்லிகொண்டுருந்தார்கள்.

எலக்ட்ரிகல் ஷாக் வைக்கலாம்; : விஷம் பட்ட இடத்துல துணி கட்டுங்க; :வெள்ளிக்கிழமை விரதம் படத்துல காமிச்சா மாதிரி பாம்பு கடிச்ச இடத்துல , ,வாயை வெச்சு ரத்தத் தை உறிஞ்சி துப்புங்க, விஷம் வெளில வந்துடும் :

“வடுகநாதன், போய்ச் சர்பத் கடையில் ஐஸ் கட்டி வாங்கிட்டு வா. அதை வைச்சா விஷம் இறங்கும்” ஒரு பெரியவர் கட்டளை இட்டார்.

அந்த பெரியவர் சொன்ன விஷயத்துக்காக உடனே தன் டிவிஎஸ்சை எடுத்துக் கொண்டு ஐஸ் வாங்க கிளம்பினான் வடுக நாதன்.

“அந்தப் பையனை இங்கே இருக்கிற பெஞ்ச் மேலே படுக்க வையுங்க”. என்று தன் ஆபீஸில் வெளிய போடப்பட்டுள்ள பெஞ்சில் படுக்க வைத்து டேபிள் பேனை சுற்ற விட்டான் சத்யா.

"நீங்க சொல்ற முதல் உதவி எல்லாம் செய்யக் கூடாது. அது உயிர்க்கு ஆபத்தான செயல். இந்தாங்க வாழை பட்டை ஜூஸ் அதைக் குடிக்க வை யுங்க. இதைக் குடிச்ச பிறகு 8மணி நேரம் உயிர் இருக்கும். கவலை படாதீங்க. டாக்டர்க்கு தகவல் போயீ டுச்சி. டாக்டர் வந்துட்டு இருக்காரு. "

கூட்டத்தில் இருந்த வர்களிடம் சொன்னான் சத்யா

அதற்குள் டாக்டர் வரவே ஒரு ஆள் பையனை எடுத்துகிட்டு டாக்டர் வீட்டுக்கு போகவும், , ஐஸ் வாங்க போன வடுகநாதன் திரும்பி வரவும் சரியா இருந்தது.

"சார் !மதிய சாப்பாடுக்கு இலை நறுக்கிட்டு வரேன்னு போனவனை, , நல்ல பாம்பு கடிச்சிடுச்சு.. .எப்படியாவது காப்பாத்துங்க சார்.! தவம் இருந்து, பெத்த பிள்ளை சார். !என் குல சாமி சார். !!அழுகை யும் விசும்பலுமாக காண பட்டார்கள் வடுகநாதனும் , அவன் மனைவியும்.

"கூட்டத்தைப் பார்த்த டாக்டர் , பயப்படாமா இருங்க. நல்ல பாம்பு தானே கடிச்சு இருக்கு. காப்பாதி விடலாம். கூட்டம் கூடாது. வெளிய போய் இருங்க. "

"ஆமாம் யாராவது முதல் உதவி செஞ்சிகளா? "

"ஆமாம் டாக்டர்! நம்ம போஸ்ட் மாஸ்டர் வாழை பட்டை ஜூஸ் கொடுத்தாரு. " பெரியவர் சொல்லவும் ,

கிடு கிடு என்று டிரீட்மென்ட் ஆரம்பமானது . தேவையான இன்ஜெக்ஷன் காலில் , கடிச்சு இடத்தில் இருந்து மேல அரை அடியில் இருந்து கடிச்ச இடம் வரைக்கும், , கட்டு போட்ட தும், மாத்திரை பத்திய சாப்பாடு முறை எல்லா வற்றையும் தெளிவாகச் சொன்னார் டாக்டர்.

இருபது நிமிடம் கழித்து, “அப்பா அம்மா” என்று பையன் கட்டி அவர்களை கட்டிக் கொண்டான்.

"டாக்டர் சார் என் ஒரே வாரிசு, என் குல தெய்வம், என் மூச்சு காப்பாத்தட்டிங்க. நான் என்றைக்கும் கடமை பட்டு இருக்கேன். ரொம்ப நன்றி டாக்டர். "

"இத பாருங்க வடுக நாதன் ! தேங்க்ஸ் போஸ்ட் மாஸ்டர்க்கு சொல்லுங்க!. அவர் மட்டும் சம யோசிதமா எனக்குப் போன் பண்ணாமல் இருந்தால், நான் இந்நேரம் நாகப்பட்டினம் கிளம்பி போயிருப்பேன்.

."நல்ல வேளை அங்குக் கிளினிக் மூடி கிளம்பும் சமயம் ,நம்ம போஸ்ட்மாஸ்டர் மூலம் திருக்குவளை போஸ்ட் மாஸ்டர்க்கு போன் வந்து என்னிடம் தகவல் சொன்னாரு. அதை விட முக்கியமா வாழை பட்டை ஜூஸ் போட்டு ஒங்க பையனுக்குக் கொடுத்து அவன் உயிர் போகமா முதல் உதவி செஞ்சு இருக்காரு. அது எப்பேர்ப்பட்ட உதவி தெரியுமா? "

"விபரம் தெரியாம தவறாக ஆள் ஆளுக்கு முதல் உதவி செய்ய நினைத்த போது இவர் தான் சரியான முறையில் முதல் உதவி செஞ்சு இருக்காரு "

"நீங்க மட்டும் இல்லை நானும் அவருக்குத் தாங்க்ஸ் சொல்லணும் " என்று டாக்டர் போஸ்ட் ஆபீஸ் நோக்கி வர கிளம்பினார் .

வடுகநாதன் மனசு சங்கட பட்டது. அவன் கால்கள் தயங்கியது. போஸ்ட் மாஸ்டரை நேருக்கு நேர் பார்க்க முடியமால் கூனி குறுகி நின்றான்.

கடந்த மாதம் நடந்த சம்பவம் அவனுக்கு மனதுக்குள் நிழல் ஆடியது.

போஸ்ட்மாஸ்டர் சத்யா விற்கு வயது 35க்குள் தான்.இருக்கும். 2வயதில் ஒரு பையன். விரல் நுனியில் டிபார்ட்மென்ட் ரூல்ஸ் . சமயத்தில் தலைமை ஆபீசில் ஏற்படும் சந்தேகத்தை கூட நிவர்த்திச் செய்பவன்.

டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுதி, மெரிட்ல் பாஸ் பண்ணி, ஆஃபீஸ்ர் ப்ரோமோஷன்க்கு காத்துக் கொண்டு இருப்பவன். . சரியான நேரத்தில் ஆபீஸ் திறந்து டூட்டி முடிந்ததும் ஆபீஸ் மூடி விடுவான் . அது ஒரு பகுதி நேரம் வேலை உள்ள ஆபீஸ். காலை 0700 -1000: பின் மதியம் 1300 -1700 வரை அதாவது 1மணியில் இருந்து மாலை 5மணி வரை.

கிராமமா இருப்பதால் காலை 10 மணிக்கு மேல் ஆபீஸ் மூடி இருந்தாலும் விபரம் தெரியாமல், நிறையப் பேர் கார்டு கவர் ஏர் மெயில் லெட்டர் வாங்க வருவார்கள். அப்படி , , கதவை தட்டி கேக்கும் போது, , முகம் சுளிக்காமால் கொடுப்பான் சத்யா.


கிராமத்தில் எல்லோருடைய அன்புக்கும் மரியாதை க்கும் பாத்திரமான போஸ்ட் மாஸ்டர் சத்யா வடுகநாதன் பார்வையில் மட்டும் எதிரி. அதற்குக் காரணம் அந்தச் சம்பவம் தான்.

ஒரு மாதம் முன்பு மதியம் 2 .30மணி. டிரான்சாக்சன் நேரம் முடிந்திருந்தது.

வடுகநாதன் பையன் 20 பேருடைய ரெக்கரிங் டெபாசிட் பாஸ் புக்களைக் கொடுத்து, , "அப்பா பணம் வாங்கிட்டு வர சொன்னார். "என்று நீட்டினான்.

"நீ சின்னப் பையன் விபரம் சொன்னா உனக்குப் புரியாது. ஒங்க அப்பாவை வர சொல்லு.என்று திருப்பி அனுப்பினான் சத்யா". "

வடுக நாதன் உள்ளூர் அரசியல் வாதியை கையில் போட்டுக் கொண்டு வட்டி கடை நடத்தி வருபவன் . ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்திக் கொண்டு, மீட்டர் வட்டி, கந்து வட்டி வாங்கி, தோட்டம் , நிலம் வாங்கிச் சொத்து சேர்த்து வைச்சு இருக்கான் என்று டாக்டர் அவனைப் பற்றி ஏற்கனவே சொல்லிஇருந் தார்.

அப்படிப்பட்ட வடுகநாதன் இன்று பையன் மூலம் அனுப்பியிருந்த 20 பேருடைய பாஸ்புக் பார்க்கும் போது , முதிர்ந்த தொகையில் பாதிப் பணம் மட்டும் கொடுத்து விட்டு, மீதி பாதித் தொகை வட்டிக்கு என்று அவர்களிடம் சொல்லியுள்ளான்.

பாவம் அவசர தேவைக்குப் பணம் தேவை பட்டதால் படிப்பு அறிவு இல்லாதவர்களிடம் அவர்கள் பலவீனத்தைப் பயன்படுத்தி இம்மாதிரி செய்து இருக்கிறான் .

பையன் போஸ்ட் மாஸ்டர் சொன்ன செய்தியை மாற்றித் தன் அப்பாவிடம், " போஸ்ட் மாஸ்டர் பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு "என்று சொல்ல,

அடுத்த 10வது நிமிஷம் வடுகநாதன், உள்ளூர் அரசியல் பிரமுகர், இன்னும் சில பேர்களுடன் வந்து சத்தமாக,

"என்ன சார்? ஏன் பணம் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்க? பதில் சொல்லுங்க? "

மிரட்டும் தோரணை யில் பேசவே போஸ்ட் மாஸ்டர் சத்யா,

"இத பாருங்க !இந்த மிரட்டல் வேலை இங்கே நடக்காது. "

"பையன்கிட்ட உனக்கு விபரம் சொன்னா புரியாது. அப்பாவை வர சொல்லுன்னு தான் சொல்லி அனுப்பினேன். "

"இப்போ விபரத்தை நல்லா கேட்டு கொள்ளுங்க.உங்க கிட்டே நான் பணம் தர முடியாது. 20 டெபாசிட்டார்க்களும் நேரில் வரணும். அவங்க கையிலதான், பணம் கொடுக்க முடியும். ஒங்க கிட்ட கொடுக்கச் சொல்லி, அவங்க கை எழுத்து போடல.

இரண்டு இடத்துல அதாவது அப்ளிகேஷன் இடத்துலயும் , பணம் பெறும் போது ரசீது போடற இடத்துலயும் அவங்க கையெழுத்து தான் இருக்கு. அதனால அவங்களை நேரில் கூட்டிகிட்டு வாங்க பணம் தரேன். "

இப்படிச் சொன்னதும் வடுக நாதனுக்குக் கோபம் தலைக்கு ஏறியது.

"என்ன சார் பேச்சு இது? "

"அவங்க ஊர் ஊருக்கு ஆட்டுக் கடா நடத்தி ஒவ்வொரு வயலுக்கும் உரம் போடறவங்க. நாடோடியா ஊர் ஊரா சுத்தி கிட்டு இருக்கறவங்க. எங்கே போயீ தேட முடியும்?

"ஏதோ அவங்க பாஸ்புக் வாங்கி அடமானம் வைச்சு கிட்டு, மொடைக்குப் பணம் கொடுத்து இருக்கேன். இப்போ பணம் கொடுக்கப் போறீங்களா இல்லையா?"

அதற்குள் லோக்கல் அரசியல் பிரமுகர் குறுக்கிட்டு,

"சார் இது கிராமம் சார். நீங்க ரூல்ஸ் எல்லாம் பாக்க கூடாது சார். "

"இத பாருங்க கிராமம் , டவுன் எதுவா இருந்தாலும் போஸ்ட் ஆபீஸ் ரூல்ஸ் இந்தியா பூரா ஒரே மாதிரி தான். "

"நான் சட்டப்படி தான் செய்வேன். இன்னும் சொல்ல போனால், பணம் பெற்றுக்கொண்டேன் என்கிற இடத்தில் டெபாசிடர் ஏற்க்னவே

கையெழுத்து போட்டு இருக்காங்க. அவங்களுக்கு பணம் கொடுத்தாச்சுன்னு, என்னாலே சொல்ல முடியும். உங்களால் ஒன்னும் பண்ண முடியாது. ஆனா நான் அப்படிச் செய்ய மாட்டேன். எனக்கு நேர்மை தான் முக்கியம். "

"ஒன்னு அந்த 20பேரையும் நேர்ல ஆஜர் படுத்துங்க. பணம் கொடுத்து விடறேன். இல்லாது போனா, வேற பாரம் தரேன். அவங்களே கண்டு பிடிச்சி, உங்களுக்குக் கொடுக்கச் சொல்லி கை எழுத்து வாங்கிட்டு வாங்க. பணம் கொடுக்கிறேன். "

"இந்தாங்க ஒங்க 20 பேருடைய பாஸ் புக்."

"இனி ஒங்க கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. வீணா பிரச்சனை கொடுக்குறீங்கன்னு அஞ்சல் கண் காணிப்பாளர் ஆஃபீசில் பேசனும். கால் புக் பண்ணுங்க. "

அந்த அரசியல் பிரமுகர் சொல்ல

அட்வான்ஸ் பணம் வாங்கி வைத்துக் கொண்டு கால் புக் செய்தான் சத்யா

அடுத்தப் பத்தாவது நிமிஷம், கால் கனெக்ட் பண்ணபட்டது. துணை கண்காணி ப்பளார் லைன்ல வரவே, அந்த அரசியல் பிரமுகர் போஸ்ட்மாஸ்டர் பற்றி, பணம் கொடுக்க மறுக்கிறார், என்று புகாராகச் சொல்லவும், நடந்த எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்ட பிறகு போனை

போஸ்ட்மாஸ்டர்கிட்டே கொடுங்க என்று சொல்லவும்,

"சார் லைன்ல இருக்காங்க ஒங்க கிட்ட பேசணுமாம். "

"என்ன சத்யமூர்த்தி வாட்ஸ் த ப்ரோப்ளம்?"

நடந்த விஷயம் முழுவதையும் விவரித்த பின் திருப்தி ஆன ஆஃபீஸ்ர்,

"வெல்டன் சத்யா. "

திரும்பவும் போன்ல அரசியல் பிரமுகர் ஐ பேச சொல்ல, அவரிடம் போஸ்ட்மாஸ்டர் செய்தது, சரியான நடவடிக்கை. அவர் அறிவுரை படி நடந்து கொள்ளுங்க.என்று சொல்லி போன்ஐ கட் பண்ணுவிட்டார் அந்தமேலிட அதிகாரி.

மேலிடத்தில் சொல்லி, தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொண்டு, போஸ்ட்மாஸ்டர் முகத்தில் கரியை பூசலாம் என்று நினைத்த வடுக நாதனுக்கு, தன் எண்ணம் நிறைவேறாமல், நீறு பூத்த நெருப்பு ஆனதால் ,

சத்யாவை தாறு மாறாகப் பேசி, விட்டுப் போனான்.

"நாளைக்குக் கடை தெரு வந்துதானே ஆகணும். அப்ப பாத்துக்கிறேன்.என்று மிரட்டல் விட்டான் "

வடுக நாதன்.

"இத பாருங்க ! இப்ப கூட, ஒரு போன் போதும். மத்திய அரசாங்க ஊழியரை, வேலை செய்யவிடாமல் , கொலை மிரட்டல் விடுகிறார் வடுக நாதன், இதற்கு உங்களோட வந்தவங்க சாட்சின்னு சொல்லி எங்க மேலிடத்துக்கும், போலீஸ்க்கும் புகார் கொடுத்தேனன்னு வை ச்சுக்கோ, நீ கம்பி என்ன வேண்டிய நிலைமை வரும். " எச்சரிக்கை விடுத்தார் போஸ்ட்மாஸ்டர்.

இப்படிச் சொன்னதும், வடுக நாதனுடன் வந்த எல்லோரும், துண்டை காணும், துணியைக் காணும், என்று ஓட்டம் எடுக்கவே, அரசியல் வாதி அவனை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.

அன்று எவ்வளவு கேவலமா,. மரியாதை குறைவாக

தன் சுயநலத்துக்காகப் போஸ்ட் மாஸ்டர் ஐ கண்ட படி பேசி இருப்பேன்”.

ஆனால், அவர் எதையும் மனசுல வைச்சுக்காம, தக்க சமயத்தில், உதவி செஞ்சு, என் பையன் உயிரே காப்பாத்தி இருக்காரு.”

"சார் !! என்னை மன்னிச்சுடுங்க! என்னிக்கும் மேன் மக்கள் மேன் மக்கள் தான். என்பதை நீங்க

நிரூபிச்சுடீ ங்க "

"டாக்டர் சாருக்கும், ஒங்களக்கும் ஊரில் எவ்வளவு மதிப்பும் மரியாதையும், . பிறர்க்கு உதவி செய்யற மனசையும் பார்க்கும் போது, நான் தூசி சார்.

என் கோபம், அறியாமை எல்லாத்தையும் விட்டுட்டு , வட்டி கடையையும் மூட போறேன் சார். என் ஒரே வாரிசுக்காகத் தான் இவ்வளவும் செஞ்சேன். ஒரு வேளை நீங்க முதல் உதவி செய்யாமல் இருந்தால் என் பையன் உயிர் போயீருக்கும். என் மனசாட்சி கொல்லுது சார். "

"இனி இந்தப் பாவ செயல் செய்ய மாட்டேன் சார். !ஒரு மளிகை கடை திறந்து மொத்த விலைக்கு, பொருள்கள் கொடுத்து, நான் இது வரைக்கும் செஞ்ச பாவத்துக்கு, பாப விமோசனம் தேடிக்கிறேன் சார்!. இது என் பையன் மேல் சத்தியம்," என்று சொல்லி பையன் மேல் சத்தியம் செய்தான் வடுக நாதன்.

"நீங்க இரண்டு பேரும் செஞ்ச உதவியை மறக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார். "

அடுத்த வாரம் நான் திறக்க போறே மளிகை கடையை , நீங்க இரண்டு பேரும் வந்து திறந்து, குத்து விளக்கு ஏத்தணும்..

அடாவடியா, வட்டிக்கு கடன் கொடுத்து, ஏழை பாளைங்க, பணத்தைக் கொள்ளை அடித்த வடுக நாதன், மனம் மாறியது கண்டு சந்தோச பட்டர்கள் டாக்டர் ராகவனும் போஸ்ட்மாஸ்டர் சத்யாவும்..