சென்னை வேளச்சேரி பரங்கிமலைக்கு இடையே உள்ள புழுதிவாக்கம், உள்ளகரம்பகுதிகள் தென் சென்னையில் மிக வேகமாக வளர்ந்து வரும் மக்கள் குடியிருப்புபகுதிகளாகும்.இங்கு வசிக்கும் மக்கள் போக்குவரத்து வசதிகளின்றி மிகவும்அவதிப்படுகிறார்கள்.அவர்கள் தங்கள் போக்குவரத்து வசதி மேன்மைப்பட மிகவும்நம்பியிருப்பது வெகு நாள் கிடப்பில் போடப்பட்டுள்ள புழுதிவாக்கம் இரயில்நிலையத்தைதான்.இது எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதே பொதுமக்களின்நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் தொடங்கப்பட்டது. தற்போது 15 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில்,இத்திட்டத்தின் மதிப்பீடு பல கோடிகள் அதிகரித்திருக்கும்.சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரங்கிமலை வரை இந்த வழியில் 167 தூண்கள் கட்டப்பட்டு மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.
இதில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலத்தைகையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, மேம்பாலப் பணி 10 ஆண்டுகள்கிடப்பில் போடப்பட்டது.நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, தற்போது மீண்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இப்படி ஒருபுறம் பணிகள் நடக்க, மறுபுறம் இங்கு கட்டப்பட்ட புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையம் முறையான பராமரிப்பின்றிகாணப்படுகிறது. மேலும் இந்த ரயில் நிலைய கட்டிடம் நன்கு கட்டப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. மக்களின் வரிப் பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட இந்த ரயில் நிலைய கட்டிடம் திறப்பு விழா நடக்கும் முன்பே பல வருடங்களாக பயன்பாட்டுக்கு வராமல், பாழாகி வருவது வேதனைக்குரியது.
சென்னை கடற்கரையில் இருந்து – வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனை பரங்கிமலை வரை நீட்டிப்பது சாத்தியமான ஒன்றாகவே பொது மக்களால் கருதப்படுகிறது. அப்படி சிக்கல்கள் இருந்தாலும் அவைகள்அரசால் தீர்க்கப்படக்கூடியவையாகத்தான் இருக்கும்.இது நீட்டிக்கப்படும் பட்சத்தில் பெரும்பாலான மக்கள் இதனால் பயன்பெறுவார்கள். அரசுக்கும் கூடுதல் வருமானம் கிடைக்கும்.
புழுதிவாக்கம் பேருந்து நிறுத்தத்திலிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்குஇயக்கப்படும் மாநகரப் பேருந்துகளும் மிகக் மிகக் குறைவே. இதனால்,இப்பகுதியிலிருந்து சென்னை நகரின் பிறபகுதிகளுக்கு செல்ல மக்கள் தனியார்வாகனங்களையே நம்பியுள்ளனர். தமிழக அரசு மக்களின் இப்பிரச்னையில் தனிக் கவனம் செலுத்துவது நல்லது. பொது மக்கள் தனது மாத வருமானத்தில் கணிசமான பகுதியைதமது அன்றாடப் பயணங்களுக்காகவே செலவு செய்ய வேண்டியுள்ளது.சாலைகள்பராமரிப்பும் சரியாக பராமரிக்கப்படாததால், மழைக்காலங்களில் மக்களின் அன்றாட வாழ்வு மிக அதிகமாக பாதிக்கப்படுகிறது.
தென் சென்னையைச் சேர்ந்த ஆலந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்பூதூர் தொகுதி வாக்காளர்கள் இப்பகுதியில் வசிக்கிறார்கள். வாக்காளர்கள் அதிகம் பேர், குறிப்பாக பெண் வாக்காளர்கள் வாக்களிக்க முன் வராததற்கு இதுவே ஒரு முக்கியக் காரணமாககருதப்படுகிறது.
பொதுத் தேர்தலுக்கு முன்பே பறக்கும் ரயில் பணி தொடங்கும் என பொது மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பதவியில் உள்ள இந்தப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முனைப்பு காட்டுவார்கள் என்றும் பொது மக்கள் எதிர்பார்த்தார்கள். இனி அடுத்த ஐந்து வருடத்திற்கு இதைப் பற்றி இங்கு வாழும் மக்களைத் தவிர வேறு எவரும் கவலைப்பட போவதில்லை என்றே மக்கள்உணர்கின்றனர். சமூக ஊடகங்கள் இந்த ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டு மத்திய, மாநில அரசு ஒரு வெளிப்படையானஅறிக்கையை சமர்ப்பித்தால் பேருதவியாக இருக்கும்.
பொதுத் தேர்தல் 2024ல் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் இப்பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.இல்லையெனில் வரும் தேர்தல்களில் வாக்களிக்கும் ஆர்வம் மக்களுக்கு மேலும் குறையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.
Leave a comment
Upload