தொடர்கள்
follow-up
ஆடுகள் நலம் !! ஃபாலோஅப் கட்டுரை ! - பால்கி

பழைய டெல்லியில், பக்ரீத் சமயத்தில் பலியாகாமல் காப்பாற்றப்பட்ட ஆடுகள் உ.பி.யில் ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றன.

ஜைனர்களால் காப்பாற்றப்பட்ட சுமார் 700 ஆடுகள் அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாக்பத் பக்ராஷாலாவில் (ஆடுகள் தங்குமிடத்தில்) ஆடம்பரமாக வாழ்கின்றன.

https://static.theprint.in/wp-content/uploads/2024/07/peeking-goat-696x392.jpg?compress=true&quality=80&w=800&dpr=1.5

முதலில், அவர்கள் ஆடுகளின் முகங்களைக் கழுவுகிறார்கள், பின்னர் பிட்காரி அல்லது படிகாரத்தால் வாய் கொப்பளிக்கிறார்கள். அதன் பிறகு, அவர்கள் பளிங்கு தொட்டிகளில் குடிநீரை ஊற்றி, தீவனத்தை போட்டு சிற்றுண்டி பரிமாறுகிறார்கள், காலை 9 மணிக்கு அளவில், ஆடுகளை மூன்று மணி நேர காலை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

உத்தரபிரதேச பக்ரசாலா நாள் முழுவதும் பரபரப்பாக இருக்கும். கடந்த மாதம் "மீட்கப்பட்ட" ஆடுகள் வந்ததில் இருந்து வேலைப்பளு அதிகரித்துள்ளது.

திங்கட்கிழமை நண்பகல், 65 வயதான காவலாளி முகமது இக்பால், காலை நடைப்பயிற்சியை முடித்துத் திரும்பும் நூற்றுக்கணக்கான ஆடுகளை வரவேற்க வாயிலைத் திறக்கிறார். சின்ன மெல்லிய மரக்கிளை குச்சிகளை ஏந்தியபடி அரை டஜன் வேலையாட்கள் அவைகளை மெதுவாக கொட்டகைக்குள்ளே செல்ல வழிநடத்துகிறார்கள்.

"இது அவர்களின் மதிய உணவுக்கான நேரம்," என்று அறிவித்த இக்பால் ஆட்டுத்தீவனத்தால் நிரப்பப்பட்ட இரும்பு டஸ்லா எனப்படும் ஆழமான கிண்ணங்களிலிருந்து அவைகள் உணவருந்துகின்றன. அதன் பிறகு, மாலை 6 மணிக்கு நடைபயிற்சி வரை ஆடுகளுக்கு ரெஸ்ட்.

https://static.theprint.in/wp-content/uploads/2024/07/walk2-1024x679.jpg?compress=true&quality=80&w=800&dpr=1.5

[நூற்றுக்கணக்கான ஆடுகள் தங்கள் காலை ஊர்வலத்திற்குப் பிறகு தங்குமிடம் திரும்புகின்றன]

பக்ரஷாலா (ஆடு தங்குமிடம்) சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயின் சமூகத்தால் நடத்தப்படும் ஜீவ் தயா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இறைச்சி மண்டிகளில் இருந்து "மீட்கப்படும்" ஆடுகளை வாங்கி அவர்களை சுகமாக இருக்கவைப்பதே இதன் நோக்கம்.

இந்த தங்குமிடம் 2018 இல் 50 ஆடுகளுடன் தொடங்கியது. இன்று, 700 ஆடுகளை வைத்திருக்கிறது, அதில் 500 ஆடுகள் மேற்கு உ.பி மற்றும் டெல்லியில் இருந்து இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.

https://static.theprint.in/wp-content/uploads/2024/07/water-2-1024x683.jpg?compress=true&quality=80&w=800&dpr=1.5

[ஆடுகள் புத்துணர்ச்சியூட்டும் குளிர்ந்த நீரின் தினமும் பருகுகின்றன. தினமும் காலையில் தண்ணீர் மாற்றப்படுகிறது]

“இங்கு ஆடுகளை மேற்பார்வையிட நான் பணம் எதுவும் வாங்குவதில்லை. எங்கள் குரு விரும்பியபடி சேவா பாவத்துடன் செய்கிறேன். உயிரைக் காப்பாற்றுவது மிகப்பெரிய வெகுமதி” என்று பெருமையுடன் கூறுகிறார் பக்ரசாலா மேற்பார்வையாளராய் பணிபுரியும் சச்சின் ஜெயின்,

“உன் வயிற்றை நிரப்புவது எதுவோ அதுவே உன் கடவுள். இப்பொழுதெல்லாம் இந்த ஆடுகள்தான் எங்கள் கடவுள்.

https://static.theprint.in/wp-content/uploads/2024/07/16-1024x659.jpg?compress=true&quality=80&w=800&dpr=1.5

https://static.theprint.in/wp-content/uploads/2024/07/feeding-1024x678.jpg?compress=true&quality=80&w=800&dpr=1.5

[அறங்காவலர் சச்சின் ஜெயின் ஒரு ஆட்டுக்கு கையால் வாழைப்பழம் ஊட்டுகிறர்]

ஆடு காப்பகத்தின் அறங்காவலர்களில் ஒருவரான சச்சின் ஜெயின், இந்த வசதியை நடத்துவதற்கு இந்தியா முழுவதும் உள்ள சமூக உறுப்பினர்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறுகிறோம் என்றார்.

https://static.theprint.in/wp-content/uploads/2024/07/fodder-1024x649.jpg?compress=true&quality=80&w=800&dpr=1.5

சுவரில் மஞ்சள் மற்றும் சிவப்பு சுவரொட்டி தொங்குகிறது.

இந்தி வாசகத்தின் பொருள்....எவ்வளவு காலம் ஆட்டின் தாய் தன் குழந்தைகளைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும்?

அதற்கு பதில், முயற்சி நேர்மையாக இருந்தால், ஆட்டின் தாய் தன் குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும்.