கிருஷ்ணகிரியிலும் ......
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திக்குப்பம் அருகே தனியார் பள்ளியான கிங்ஸ்லி மெட்ரிக் பள்ளியில் சமீபத்தில் என்சிசி முகாம் நடந்தது. இதில் 17 மாணவியர்கள் தங்கி பயிற்சி பெற்றனர். அவர்கள் இரவு ஆடிட்டோரியத்தில் தூங்குவது வழக்கம். என்சிசி பயிற்சியாளர் சிவராமன் 12 வயதான எட்டாம் வகுப்பு மாணவியை எழுப்பி வெளியே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். சிவராமன் ஏற்கனவே நான்கு மாணவியருக்கு இதே போல் பாலியல் தொல்லை தந்திருக்கிறார்.
ஐந்து மாணவிகளும் இது பற்றி நிர்வாகிகளிடம் புகார் சொன்னபோது வழக்கப்படி பள்ளி நிர்வாகிகள் மாணவிகளிடம் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஒரு மாணவிக்கு பதினாறாம் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட அவர் தாய் விசாரித்த போது அவரிடம் என் சி சி- முகாமில் நடந்த விஷயங்களை அந்த மாணவி சொல்லிவிட்டார். உடனே அந்த தாய் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் சொல்ல என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளி முதல்வர் சதீஷ்குமார் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததாக இதுவரை 11 பேர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
என்சிசி பயிற்சியாளர் என்று சொல்லிக் கொள்ளும் சிவராமன் ஏற்கனவே இதுபோன்று என் சி சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் இருக்கிறதாம். சிவராமன் நாம் தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர். இந்த கட்சி தான் தமிழினத்தின் காவலர் என்று சொல்லிக் கொள்கிறது.
மேற்குவங்கம் போல் இந்த விஷயமும் பூதாகரமாக கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அதிகாரிகள் என்சிசி நிர்வாகம் இது போன்ற முகாம் நடத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை. போலியான ஒரு உத்தரவை தயார் செய்து சிவராமன் இந்த முகாமை நடத்தி இருக்கிறார். இந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை 11 பேர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் போன்ற விவரங்களை முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமையை 15 தினங்களுக்குள் விசாரித்து துரிதமாக நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்திருக்கிறார் தமிழக முதல்வர்.
தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு தமிழக அரசு காவல்துறை மூன்று நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
என்சிசி பயிற்சியாளர் சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டுவிட்டு இறந்துவிட்டார் என்று காவல்துறை செய்திகுறிப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் அவரது தந்தை விபத்தில் மரணமடைந்ததையும், சிவராமன் தற்கொலையையும் பற்றி வதந்தி பரப்புவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறது.
தமிழ்நாட்டிலுமா ? அடப்பாவிகளா.........
Leave a comment
Upload