தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240325175638553.jpeg

தியாகத்தின் வண்ணம் காவி முதல்வருக்கு தமிழிசை பதில்

ரொம்ப புதுசா யோசிப்பாங்க போல இருக்கு அக்கா

பத்து தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

அந்த நாற்பதும் நமதே நம்பிக்கை எல்லாம் இப்ப இல்ல போல இருக்கு

முப்பத்து ஒன்பது நாட்களுக்கு பின்பு கோட்டை வந்தார் முதல்வர் ஸ்டாலின்

ஞாபக மறதியா அங்கேயும் ஓட்டு கேக்க போறாரு

நாளை முதல் அதிமுக தண்ணீர் பந்தல் எடப்பாடி பழனிச்சாமி

தேர்தலில் மக்கள் தண்ணீர் காட்டாமல் இருந்தால் சரி

கேஜ்ரிவாலுக்கு இன்சுலின் போட்டாச்சு

அப்பாடி வழியா அக்கப்போர் முடிவுக்கு வந்ததா? !!!

வாசிப்பை நேசியுங்கள் ஸ்டாலின் அழைப்பு

தலைவர் படிக்க சொல்கிறார் பா

மோடி மத அரசியல் செய்யவில்லை -ராஜ்நாத் திட்டவட்டம்

அப்படியா தலைவரே? !!!!

மோடிக்கு எதிராக குவியும் கண்டனங்கள்

ஒரு வார்த்தை தான் சொன்னாரு தலைவர் அதுக்கே இப்படி பயப்படுறீங்க? !!!!!

முதல்வர் மு க ஸ்டாலின் திருமாவளவன் முத்தரசன் சந்திப்பு

எப்படியாவது எங்களை எம் பி ஆக்கிடுங்க என்று கேட்டிருப்பாங்க! !!!

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என்ன?

வேற என்ன பண பட்டுவாடா ஒழுங்கா போல அது தான் காரணம் இது கூட தெரியலையா?!!!!

40 தொகுதிகளில் நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் முத்தரசன் அறிவிப்பு

தோழரே அதை உங்க கூட்டணி கட்சி தலைவரை கொஞ்சம் சொல்ல சொல்லுங்க பார்ப்போம் ?!!!

நாலு கோடி பறிமுதல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் சட்டத்தில் வராது-அமலாக்கத்துறை தகவல்

அமலாக்கத்துறைக்கு இன்னொரு பேர் இருக்கு விசுவாசம் !!

ரயிலில் நாலு கோடி ரூபாய் பணம் சிக்கிய வழக்கில் பத்து நாட்கள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் கடிதம்

அதுதான் ஏற்கனவே பணம் அவருடையது இல்லைன்னு சொல்லியாச்சு இல்ல அப்புறம் எதுக்கு வழக்கு விசாரணை? !!!!

தடையில்லா குடிநீர் வழங்குவது குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

அப்ப இன்னொரு 4000 கோடிக்கு திட்டம் போடுகிறார்கள் என்று சொல்லுங்கள்? !!!!!

மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை ஓபிஎஸ்

தலைவரே பலாப்பழம் நல்லா இருக்கு