தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

கன்னடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

20240325180618465.jpg

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் டாலி தனஞ்சியாநடிப்பில் தயாராகி வரும் உத்தர காண்டா படம் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகம் ஆகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் அவர் டாலி தனஞ்செயாவுக்கு ஜோடி

பேபி & பேபி

20240325180919179.jpeg

அறிமுக இயக்குனர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் சத்யராஜ் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் பேபி &பேபி. இது குழந்தைகளை மையமாக வைத்த குடும்ப பின்னணி படம். இந்தப் படத்தில் ஜெய் ஜோடியாக பிரக்யா நாக்ராநடிக்கிறார் .நடிகை கீர்த்தனா ஜெய் அம்மாவாக சத்யராஜ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படம் மூலம் மீண்டும் களம் இறங்கினார் கீர்த்தனா.

கூலி

20240325181413228.jpg

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்திற்கு கூலி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பட டைட்டிலோடு டீசர் ஒன்று ரிலீசாகி இருக்கிறது. கூலி என்ற பெயரில் அமிதாப்மற்றும் சரத்குமார் நடித்த படம் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. பொதுவாக ரஜினி படத்துக்கான படத்தலைப்பு இரவலாக இருக்காது. படத்தின் தலைப்பு இரவல் கதை எங்கே சுட்டதோ என்று இப்போதே விமர்சனம் வரத் தொடங்கி இருக்கிறது

அஸ்வத்தாமன் அமிதாப்

20240325181546346.jpeg

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கல்கி 2898ஏடி.இந்தப் படத்தில் துரோணாச்சாரின் மகனான அஸ்வத்தாமன் வேடத்தில் அமிதாப் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் கமலஹாசன் நடித்திருக்கிறார். இது பான் இந்தியா படம் 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகமாக வெளியாக இருக்கிறது

குண்டூர் காரம் நாயகி

20240325181738410.jpg

நடிகர் அஜித் தற்சமயம் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் நடிக்கும் படம் 'குட் பேட் அக்லி'இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத் இசை. அஜித்துக்கு இந்த படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்க இருக்கிறாராம் அவருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ரீ லீலா படங்களில் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமான ஒரு நடிகை

10 கோடி

20240325181917275.jpg

இப்போது பழைய படங்களைரீ ரிலீஸ் பண்ணி பணம் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. விஜய் திரிஷா நடித்த கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. மூன்று நாட்களில் 10 கோடி வசூல் செய்து தந்திருக்கிறது கில்லி

14 வருடங்களுக்கு பிறகு .....

20240325182341629.jpeg

மீண்டும் 14 வருடங்களுக்கு பிறகு தக்ஃலைப் படத்தில் சிம்பு- திரிஷா ஜோடியாக நடிக்கிறார்கள். மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் கமல் நடிக்க வேண்டிய பகுதிகளை தவிர மற்ற நடிகர்கள் நடிக்க வேண்டிய பகுதிகளுக்கான படப்பிடிப்பு இப்போது தீவிரமாக நடந்து வருகிறது

திருமணம் நடந்தது

20240325182626905.jpg

மஞ்சு மேல் பாய்ஸ் புகழ் தீபக் பரம்- அபர்ணாதாஸ் திருமணம் ஏப்ரல் 24ஆம் தேதி விமர்சையாக நடந்தது.இது காதல் திருமணம் ,குருவாயூரில் நடந்த திருமணம் .