மோடி பாஜக தேர்தல் அறிக்கை பற்றி பேசுவதே இல்லை - பா. சிதம்பரம்
அட ஆமா இல்ல ?
அரசியல் சட்டத்தை மாற்றும் பாவத்தை ஒருபோதும் செய்ய மாட்டேன் - பிரதமர் மோடி.
லைட்டா கரெக்ஷன் மட்டும் பண்ணுவோம் அவ்வளவுதான் ?
பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் கருணாநிதி.
பசங்க பரிட்சையின் போது சாய்ஸ்ல விட்டிட போறாங்க ?
நைனார் நாகேந்திரன் மட்டுமே ஜெயிப்பார் சுப்பிரமணியசாமி கணிப்பு.
இப்பதெல்லாம் உங்க கணிப்பு கொஞ்சம் சந்தேக கேஸ் தான் !!
எனக்கும் ஐந்து குழந்தைகள் இருக்கு ... மோடிக்கு கார்கே பதிலடி.
இதன் மூலம் தலைவர் இந்த உலகத்துக்கு என்ன மெசேஜ் சொல்றார் உங்களுக்கு ஏதாவது தெரியுதா ?
யார் தாலியையும் காங்கிரஸ் பறித்ததில்லை பிரியங்கா ஆவேசம்.
அப்பப்பா இந்த தேர்தலில் தாலி படும் பாடு சொல்லி மாளாது !!
ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது - பிரதமர் மோடி.
நான் சொல்லல தலைவர் எப்பவும் புதுசா யோசிப்பாருன்னு !!
கோடை வெயிலை விட மோடியின் பேச்சு மக்களை சுட்டெரிக்கிறது - கார்கே குற்றச்சாட்டு.
தலைவர் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஜம்பம் பலிக்காது மம்தா உறுதி.
இந்த அமலாக்கத்துறை வருமான வரித்துறை ஜம்பம் இதெல்லாம் இருக்கே அக்கா !!
காவிரி நீரைப் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் அமைச்சர் துரைமுருகன்
கூட்டணி தர்மம் கூட்டணி தர்மம் கூட்டணி தர்மம் !!
ஜிஎஸ்டி வசூல் இரண்டு லட்சம் கோடியை தாண்டியது மத்திய நிதியமைச்சர் மகிழ்ச்சி
ஆனா மக்கள் மகிழ்ச்சியா இல்லையே சிஸ்டர் !!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதை விட பாஜகவுக்கு வாக்களிப்பது மேல் காங்கிரஸ் எம்பி சர்ச்சை பேச்சு
வேற ஏதோ அண்ணன் பிளான் பண்றாரு !!
பீகார் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏன் ஏதாவது மசோதாவில் கையெழுத்து போடலையா !!
காவிரி விவகாரத்தில் பூனை போல் பதுங்காமல் புலி போல் பாய்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.
நடக்கிறது பேசுங்க தலைவரே !!
Leave a comment
Upload