சன் டிவியிருந்து சமீபத்தில் விலகியிருக்கும் மற்றொரு பிரபல தொடர் தயாரிப்பாளர், இயக்குநரும் நடிகருமான திருமுருகன். இவரது கல்யாண வீடு சீரியல் முதலில் டைமிங் மாறியது. அப்புறம் என்ன காரணமோ, புதிய ஸ்லாட்டில் நீண்ட நாள் தாக்கு பிடிக்காமல் தன் தயாரிப்பை ஒரேயடியாக நிறுத்திக்கொண்டது. நாம் அத்தனை சீக்கிரத்தில் அதன் உள் காரணம் அறியாமல் விட்டு விடுவோமா?!. புலனாய்ந்ததில் இங்கேயும் யூடியூப் ரைட்ஸ் தொடர்பாக சேனலுடன் தயாரிப்பு தரப்புக்கு நிறைய பிரச்னைகள் ஆரம்பத்திலிருந்தே இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அதெல்லாமே சீக்கிரம் செட்டிலாகி தொடர் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது.
ஆனால் மற்ற சேனல்களில் இதே டைம் ஸ்லாட் தொடர்கள் சூடு பிடிக்கத் தொடங்கியதும், கதை விவாதங்களில் வழக்கம் போல ஏகமாகவே மூக்கை நுழைக்கத் தொடங்கியது சன் டிவி. இதை திருமுருகன் அவ்வளவாக ரசிக்கவில்லை என கூறப்படுகிறது. அதே சமயத்தில் தன்னை வளர்த்து பிரபலமாக்கிய சன் டிவியுடன் சண்டை போடவும் விரும்பாத திருமுருகன் தற்காலிகமாக தன் தொடர் பங்களிப்பை நிறுத்திக்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இன்னொரு காரணம் அவர் மீண்டும் வெள்ளித்திரை பட தயாரிப்பு ஒன்றில் ஈடுபடப் போகிறார் என்பது! எது எப்படியோ, கல்யாண வீடு தொடரின் யதார்த்த டிராமாவையும் அந்த ஊர்க்கார அழகிய லொகேஷன்களையும் (திருவாரூர் ஏரியா) சன் நேயர்கள் நிச்சயம் மிஸ் செய்வார்கள் என்பது உறுதி!
இந்த வார கிசுகிசு:
ஜீ தமிழில் கொடி கட்டிப் பறந்த அர்ச்சனா பிக்பாஸ் அழைப்பினை ஏற்றதற்கு ஒரே காரணம் அவருக்கான நிதித் தேவைதான் என கூறப்படுகிறது.
சன் டிவியின் காமெடி டைமுக்கு பிறகு கல்யாணமாகி வடக்கே வாழ்ந்த காரணத்தால் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய் டிவியே அவருக்கு முதலில் தொகுப்பாளினி வாய்ப்பினை அளித்தது. ஆனாலும் தங்களது ஆஸ்தான தொகுப்பாளிகளான டிடி, பாவ்னா மற்றும் பிரியங்கா அளவிற்கு அர்ச்சனாவுக்கு அங்கு வாய்ப்போ அந்தஸ்தோ விஜய் டிவி அளிக்கவில்லை என்பதே உண்மை. விஜய் டிவியிலிருந்து பிரிந்த தமிழ்தாசன் ஜீ தமிழ் சேனலின் நிகழ்ச்சிகள் தலைவராக பொறுப்பேற்றதுமே அர்ச்சனாவின் திறமைகளை நன்கு அறிந்த தமிழ்தாசன் அவருக்கு ஜீ தமிழில் அற்புதமான வாய்ப்புகளை அளித்தார். கிட்டத்தட்ட ஜீ தமிழ் சேனலின் நட்சத்திர தொகுப்பாளினி எனும் அளவுக்கு அந்தஸ்துள்ள உச்சகட்ட முகம் அது!
ஆனால் ஜீ தமிழின் இன்றியமையாத தொகுப்பாளினி எனும் வெற்றியை ருசிக்கத் தொடங்கியதுமே அர்ச்சனாவின் நடவடிக்கைகளில் சற்று மாறுபாடுகள் தோன்றத் தொடங்கியது. உடன் ஒரு தொகுப்பாளர் நிகழ்ச்சியில் இருப்பின், தனக்கே தனி ட்ரீட்மென்ட் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவருக்கு இணையாக எவருக்கும் மதிப்போ மரியாதையோ வழங்கப்படுவதை அர்ச்சனா என்றுமே விரும்பியதில்லை. இருப்பினும் அவருக்கான தனியான முதலிட அந்தஸ்தை தொடர்ந்து வழங்கியது ஜீ தமிழ். இப்படி தன்னை பெரியதொரு இடத்துக்கு வளர்த்து விட்ட சேனலை மறந்து விட்டுத்தான் இன்று பிக் பாஸ் களத்தில் குதித்திருக்கிறார் அர்ச்சனா. இந்த நிகழ்ச்சி அவரை அடுத்த கட்ட வெற்றிக்கு அழைத்துச்செல்லும் என நினைத்து அவர் இந்த முடிவினை எடுத்திருக்கலாம்! ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படும் அவரது நிஜ முகத்தால் அது உண்மையில் சாத்தியமாகுமா என்றுதான் தெரியவில்லை!
எப்படியோ தனது போட்டி சேனலின் நட்சத்திர தொகுப்பாளர் மவுசை குறைத்து விட்ட குஷியில் திளைக்கிறது விஜய் டிவி!
Leave a comment
Upload