தொடர்கள்
அனுபவம்
தடுப்பூசி தம்பதிகள்...! துபாயிலிருந்து ஒரு மினி பேட்டி..! - ராம்.

20210008152313617.jpeg

தடுப்பூசி இந்தியாவில் துவங்க இருக்கும் நேரத்தில்... ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடம் அது பற்றி பேசினால், நம்மூரில் த.ஊ. போட்டுக் கொள்பவர்களுக்கு ஒரு தைரியம் இருக்கும் இல்லையா..?

தம்பதிகள் ஜெயந்தி நாகேஷ்...

துபாயில் வசிக்கும் தமிழர்கள். அவர்களின் தடுப்பூசி அனுபவம் எப்படி?

நாகேஷ்: 23ந்தேதி டிசம்பர் துபாய்ல வாக்ஸின் போடத் துவங்குகிறார்கள் என்றதும், நாங்க ரிஜிஸ்டர் பண்ணி 24ந்தேதியே போட்டுக்கிட்டோம்.

ஜெயந்தி: ஆமா. எங்களுக்கு ஒரே எக்ஸைட்மெண்ட். வாக்சின் வந்துருச்சுன்ன உடனே, அதை போட்டுக்கலாம் நல்லதுன்னு தோணுச்சு.

நாகேஷ்: நீங்க வேற... துபாய் அரசாங்கத்துக்கு வரலைன்னாலும், யாராவது பிளாட்பாரத்தில இதான் கரோனா வாக்சின்னா கூட போட்டுக்க நாங்க ரெடியா இருந்தோம்னா பாருங்களேன். வாக்சின் போட்டுக்கற அன்னிக்கு ஒரே டென்ஷன். உனக்கெல்லாம் இப்ப இல்ல... போயிட்டு, அப்புறமா வாங்கன்னு சொல்லிருவாங்களோன்னு ஒரு பயம்.

ஜெயந்தி: எனக்கு, முதல் நாளே ஊசி போட்டுக்க போறோம்னு ஒரே சந்தோஷம். புதுசா ஆப்பிள் ஸ்டோர்ல போன் வந்தா ஓடுவாங்களே, அது மாதிரி எனக்கும் ஒரு ஃபீல் இருந்தது. முதல் நாள் கைய தூக்க முடியலை, ஒரே வலி. ஆனா அடுத்த நாளே சாதரணமா ஆயிடுச்சு. ஒன்னுமே இல்லை.

நாகேஷ்: இவளுக்கு தான் வலி. எனக்கு போடும் போதும் வலியில்ல போட்டப்புறமும் வலியில்ல. ஒன்னுமே தெரியலை. ஜஸ்ட் நார்மலா தான் இருந்தது. போட்டப்புறம் கரோனாவுக்கு எதிரா எனக்கு சூப்பர் மேன், பேட் மேன் மாதிரி ஒரு எண்ணம்!

ஜெயந்தி: உண்மையிலேயே ஊருக்கு போகலாம் அப்படின்னு ஒரு கான்ஃபிடன்ஸ் வந்துருக்கு. இல்லைன்னா ஒரு பயம் இருந்துக்கிட்டே இருக்கும்.

நாகேஷ்: இன்னொன்னு சொல்லணும். இங்க துபாய்ல எங்களுக்கு போட்டது ஃபைசரோட வாக்சின். இரண்டாவது டோஸ் 14ந்தேதி ஜனவரி போடுவாங்க. எம்.ஆர்.என்.ஏ வாக்சின்னு சொல்றாங்க. அது என்னவோ ஒரு சைடு எஃப்கடும் இல்லை.

துபாய்ல, எல்லாருக்கும் ஃப்ரீ வாக்சின் தான். சில இடங்கள்ல சைனாவோட வாக்சின் சைனோவாக்ஸும் குடுக்கறதா தகவல். எனக்கு சுகர் இருக்கறதால, அடிக்கடி நான் ஆஸ்பத்திரிக்கு ஃபாலோஅப் போவேன். எல்லா டாக்டர்ஸும் எங்கிட்ட சொன்னது என்னன்னா... தயவு செய்து எதுக்காகவாவது பயந்து தடுப்பூசி போட்டுக்காம இருந்துடாதீங்க. நிச்சயமா போட்டுக்கங்க. போட்டுக்கணும்... அப்படீங்கறது தான்.

எனக்குப் பள்ளிக்கூடத்தில சின்ன வயசுல ஊசி போட்டுக்கிட்டது தான் ஞாபகம். இப்பத்தான் இப்படி தடுப்பூசின்னு ஒன்னு போட்டுக்கறன்.

என் இனிய இந்திய மக்களே தடுப்பூசிக்கு பயப்படாதீர்கள். தைரியமா போட்டுக்குங்க.

தடுப்பூசி தம்பதிகளின் மகிழ்ச்சியும் நிம்மதியும் தொலைபேசியில் தெறித்தது.