தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

திருத்தும் தீர்ப்புகள்

20220816082719189.jpg

குடிபோதையில் மூன்று பாதசாரிகள் மீது மோதிய வழக்கில் ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா கூடவே ஒரு வித்தியாசமான ஒரு சரியான நிபந்தனையை விதித்தார் குற்றவாளிக்கு. அதாவது இரண்டு வாரம் குடிபோதையில் வாகனம் ஓட்டி மோதிய அந்த குற்றவாளி காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை குடிபோதையில் வண்டி ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்து பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அந்த குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினார் நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா.

இது உண்மையில் வரவேற்க வேண்டிய ஒரு தீர்ப்பு பொதுவாக குற்றவாளிகள் தண்டனை பெற்று விடுதலை ஆனாலோ அல்லது ஜாமீனில் விடுதலை ஆனாலும் அந்தக் குற்றங்களை தொடர்ந்து அவர்கள் செய்கிறார்கள் என்று போலீஸ் பலமுறை சுட்டிக்காட்டுகிறது. அதாவது சிறைச்சாலை தவறை உணர்ந்து திருத்தும் இடமாக இன்னும் மாறவில்லை என்பதுதான் போலீஸ் மறைமுகமாகச் சொல்கிறது.

ஆனால் நீதியரசர் ஜெகதீஷ் சந்திராவின் இந்த தீர்ப்பு நிச்சயம் அந்த குற்றவாளி இனிமேல் குடிப்பதைப் பற்றிய யோசனை அவருக்கு நிச்சயம் வராது காரணம் அவரே விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி மக்களுக்கு அறிவுரை சொல்லும் இடத்துக்கு நீதியரசர் அவரை நிறுத்தி இருக்கிறார். எனவே மீண்டும் அவரை அந்த தவறு செய்ய அவரது மனசாட்சி இடம் கொடுக்காது இது தவிர துண்டுப் பிரசுரத்தை படிக்கும் வாகன ஓட்டிகளும் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது பற்றிய யோசனையை நினைத்துப் பார்ப்பார்கள். எனவே இதுபோன்ற நிபந்தனை தீர்ப்புகள் சமூகத்தில் மாற்றங்களைக் நிச்சயம் ஏற்படுத்தும் தீர்ப்புகள் திருத்தப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறது இப்படி சமூக சிந்தனையோடு தீர்ப்பு வழங்கிய நீதியரசரருக்கு விகடகவி தலைவணங்கி வாழ்த்துகிறது.