தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

20220822172815615.jpg

1) அது என்ன சார்! எந்த அரசியல் வாதிங்களோ இல்லை மந்திரிங்களையோ புடிக்கற வரையிலும் பெயிலுக்கு அலையறாங்க. அரெஸ்ட்டான ஒடனேவே ஆஸ்பித்திரியில அட்மிட் ஆயிடறாங்க?

20220822175146546.jpg

ஆஸ்பத்திரி என்றால் வீட்டிலிருந்து டிபன் வரவழைத்து சாப்பிடலாம். நர்ஸ்களை சைட் அடித்துக் கொண்டு படுத்து இருக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்னவோ?

2). அரசியல் உலகில் வெளியே அதிகம் தெரியாமல், இரண்டாம் கட்ட தலைவர்களாகவே இருந்து மறைந்த அன்பழகன் போன்றோரின் நிலை பரிதாபமா அல்லது பாதுகாப்பானதா ?

2022082217414663.jpg

அன்பழகனை பொறுத்தவரையில் பாதுகாப்பானது தான். கருணாநிதியை எதிர்த்து அவரால் அரசியல் செய்திருக்க முடியாது!

3). இவ்வளவு பணம் அந்தஸ்து இருந்தும், வாய்ப்புகள் இருந்தும் நிம்மதியில்லை என்கிறாரே சூப்பர் ஸ்டார் அப்ப என்ன பண்ணினாத்தான் நிம்மதி வரும் ?

20220822174448370.jpg

அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம். பணத்துக்கும் நிம்மதிக்கும் சம்பந்தமே கிடையாது.உலகப் புகழ் பெற்ற நடிகை மர்லின் மன்றோ நிம்மதி இழந்து தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்து கொண்டது நினைவிருக்கும்!

4). வெற்றிலை சீவல் போடுவதை நிறுத்தி விட்டீர்களா ?? கள்.. என்றால் எப்படி எப்போதிலிருந்து ?? ...வில்லை என்றால் எப்போது நிறுத்துவதாக உத்தேசம் ??இளைஞர்கள் தற்போது அதிகமாக வெற்றிலையெல்லாம் போடுவதில்லையே கவனித்தீர்களா ?

20220822174757739.jpg

சில வருடங்களாகவே நிறுத்தி விட்டேன். இப்போது பாக்கு மட்டும் போடுகிறேன். இன்றைய இளைஞர்கள் வெற்றிலை, சீவல் போடுவதில்லையே தவிர ஜர்தா, மாவா போன்றவைகளை போடுகிறார்கள். அது இன்னும் ஆபத்தானது.

5). விமான பயணத்தில் டர்புலன்ஸுக்கு பயப்படுவீர்களா ? இல்லை புன்னகையுடன் சக பயணிகள் முகத்தைப் பார்ப்பீர்களா ?

20220822174934211.jpg

ஒரு சமயம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விமானத்தில் பயணித்த போது, நடுக்கடலில் பயங்கர டர்புலன்ஸ் ஏற்பட்டு இறக்கையின் ஒரு பகுதி டேமேஜ் கூட ஆகிவிட்டது. விமானத்தை தட்டு தடுமாறி சென்னைக்கு திருப்பிக் கொண்டு வந்தார்கள். பிறகு அது பற்றி விவரமாகவே நான் ஒரு கட்டுரை எழுதினேன். நிச்சயம் சாகப் போகிறோம் என்று தெரிந்து விட்டாலும் நான் அமைதியாக ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். எல்லோரும் அலறிக் கொண்டும் பிரார்த்தனை செய்து கொண்டும் இருந்தார்கள். என் மனம் அமைதியாக இருந்தது என்பது சத்தியம்!

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in