
உச்ச நீதிமன்றம் சொல்லும் உண்மைகள்
நீதிபதிகள் நியமனத்துக்கு உள்ள கொலிஜியம் முறையை தேர்தல் கமிஷனர்கள் நியமனத்திலும் பின்பற்ற உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது அரசியல் சாசன அமர்வு மத்திய அரசை நிறைய கேள்விகள் கேட்டது அதற்கு மத்திய அரசின் பதில் ஏனோ தானோ என்று தான் இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விகள் இதோ :-
தேர்தல் ஆணையம் வலிமையானதாக இருக்க வேண்டும். அது யாருடைய தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையர்கள் தேர்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்களிப்பு இருந்தால் வெளிப்படைத் தன்மை இருக்கும். ஏன் எந்தத் தேர்தல் ஆணையரும் முழு ஆறு ஆண்டுகள் பணியில் இல்லை தேர்தல் ஆணையம் தலையாட்டி பொம்மையாக இருக்கக் கூடாது. இதேபோல் சமீபத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட அருண் கோயல் 19ஆம் தேதி ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வில் செல்கிறார். 24 மணி நேரத்தில் மின்னல் வேகத்தில் ஜனாதிபதி ஒப்புதலுடன் அவர் நியமிக்கப்படுகிறார். மத்திய சட்ட அமைச்சகம் அருண் கோயல் உள்பட நான்கு பெயர்களை பரிந்துரைத்துள்ளது. ஆனால் மற்ற மூவர் பெயர் பரிசீலிக்க படவே இல்லை. தேர்தல் ஆணையராக தேர்வு செய்யப்படுபவர்கள் ஆறாண்டுகள் பதவியில் இருக்கக் கூடாது என்பது போல் இந்த தேர்வு அமைந்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையர் தேர்தல் தலைமை ஆணையர் நியமனத்தில் தலையிட உரிமை இல்லை என்பது மத்திய அரசு வாதம் இதேபோல் ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியுமா என்பது பற்றி கவலைப்பட தேவையில்லை அவர் தேர்தல் கமிஷன் பதவிக்கு தகுதியானவரா என்பது தான் முக்கியம் என்பது மத்திய அரசின் வாதம்.
உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் தலையாட்டி பொம்மையாக இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டது. ஆனால் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்சோரன் சம்பந்தப்பட்ட புகாரில் தேர்தல் ஆணையம் அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்தது தேர்தல் ஆணையம் பரிந்துரைப்படி ஆளுநர் அவரை உடனே தகுதி நீக்கம் செய்து ஆணை பிறப்பிக்கவில்லை காரணம் பாஜக ஆளுங்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் பேரத்தில் ஈடுபட்டது அதற்கு அவகாசம் தரவே ஆளுநர் ஆணை பிறப்பிக்கவில்லை ஆனால் ஜார்க்கண்ட் முதல்வர் தனது கட்சி உறுப்பினர்களை பத்திரமாக பாதுகாத்ததால் அவர்களை விலைக்கு வாங்க முடியாமல் போனது. அதற்குள் அவர் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து வழக்குப் போட்டுள்ளார். எனவே இன்று வரை தேர்தல் ஆணையப் பரிந்துரை ஆளுநர் கிடப்பில் போட்டு இருக்கிறார்.
இதேபோல் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திருணமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தல் ஆணையம் அந்தக் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வி பெற்றதாக அறிவித்தது. அது சம்பந்தமான ஏகப்பட்ட சர்ச்சைகள் நடந்த போது தேர்தல் ஆணையம் மௌனம் காத்தது இதெல்லாம் தேர்தல் ஆணையம் யாருக்கோ தலையாட்டி பொம்மையாக இருந்ததற்கு உதாரணம்.
உச்ச நீதிமன்றம் சொல்லும் உண்மைகள் மத்திய அரசின் காதுக்கு எட்டவில்லை என்பது அவர்கள் வாதத்திலேயே தெரிகிறது. ஆனால் அந்த உண்மைகள் மக்களின் காதுக்கு போய் சேர்ந்து விட்டது இது மத்திய அரசுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

Leave a comment
Upload