தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் ! G 20. உலக பீடத்தில் இந்தியா ! பெருமைமிகு தருணம்

20221103001621446.jpeg

ஜி 20 தலைமை பொறுப்பை டிசம்பர் முதல் தேதி இந்தியா ஏற்று இருக்கிறது. இது பற்றி பெருமிதமாக பிரதமர் மோடி குறிப்பிடுகிறார். இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒன்றே என்ற உணர்வை மேம்படுத்த நாம் பாடுபடுவோம். என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி நமது கருப்பொருள் ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்று சொல்லி இருக்கிறார். இது வெறும் முழக்கம் அல்ல நாம் கூட்டாக மேற்கொள்ளத் தவறிய மனித சூழல்களில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு இந்த கருப்பொருள் உருவாக்கப்பட்டது என்று சொல்லி இருக்கிறார் பிரதமர்.

மேலும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட உலகம் என்ற புதிய முன் உதாரணத்தை நாம் வடிவமைக்க ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என்று சொல்லி இருக்கிறார். நமது ஜி 20 தலைமை பொறுப்பின் போது நாம் இந்தியாவின் அனுபவங்கள் கற்றல்கள் மற்றும் மாதிரி செயல்பாடுகளை அனைவருக்கும் வழங்க முடியும் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அவற்றை வழங்க இயலும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டு இருப்பது உண்மைதான்.

இதை இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் முன்னிறுத்து இந்த கோஷத்தை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு பல்வேறு மதம் பல்வேறு மொழி என்று மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டாலும் நாம் ஜனநாயகம் என்ற நேர்கோட்டில் ஒன்றாக பயணிக்கிறோம். இந்த உலகத்துக்கான அடையாளம் நாம் தான். ஜனநாயகம் என்பதற்கான அர்த்தமே இந்தியா தான் இதில் இந்த உலகத்திற்கு நிச்சயம் எந்த சந்தேகம் இருக்காது. இந்தியாவின் ஜனநாயகம் என்பது மக்கள் தலைமையிலான மக்கள் இயக்கம்.

20221103073910441.jpeg

( இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக ஜி20 உள்ளது.)

2022110300174705.jpeg