தொடர்கள்
ஜோதிடம்
செப்டம்பர் 07 முதல் செப்டம்பர் 13 வரையிலான பஞ்சாங்க குறிப்புகள் மற்றும் வார பலன்கள்.... - பெருங்குளம் ராமகிருஷ்ணன்

2020080420003759.jpeg

செப்டம்பர் 07 - 2020

இன்று கீழ் நோக்கு நாள்
இன்று பிதுர் கடன் இயற்றுதல் நன்று.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்கக்கேடய சப்பரம், இரவு பல்லக்கில் பவனி.
திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் அபிக்ஷேகம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

திதி: பஞ்சமி
சந்திராஷ்டமம்: சித்திரை.



செப்டம்பர் 08 - 2020

இன்று கீழ் நோக்கு நாள்.
கார்திகை விரதம்.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் காலை பூங்கோயில் சப்பரம், இரவு தங்க முத்துக்கிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
பழனி ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.
இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

திதி: ஷஷ்டி.
சந்திராஷ்டமம்: சுவாதி.



செப்டம்பர் 09 - 2020

இன்று கீழ் நோக்கு நாள்.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் தங்க முத்துக்கிடா வாகனம், வெள்ளி யானை வாகனம், அம்பாள் வெள்ளிசரபவனி.
பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் உலா.
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

திதி: ஸப்தமி.
சந்திராஷ்டமம்: விசாகம்.



செப்டம்பர் 10 - 2020

இன்று மேல் நோக்கு நாள்.
மத்யாஷ்டமி
மஹாவிய தீபாதம்.
பாஞ்சராத்திர ஜெயந்தி.
மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி உற்சவாரம்பம்.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திதி: அஷ்டமி.
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.



செப்டம்பர் 11 - 2020

இன்று சம நோக்கு நாள்.
அவிதவா நவமி.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி சேஷ வாகனத்தில் உறியடி உற்சவம்.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் கோரதம், இரவு வெள்ளி தேர், அம்பாள் வெள்ளி இந்திர விமான பவனி.
நைனா வரதாச்சியார் திருநக்ஷத்திரம்.


திதி: நவமி.
சந்திராஷ்டமம்: அனுஷம்,கேட்டை.



செப்டம்பர் 12 - 2020

இன்று மேல் நோக்கு நாள்.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி காலை ஊஞ்சலிலில் வீணை மோகினி அலங்காரம்.
இரவு இராமவதாரம்.
சிறிய திருவடிகளில் பவனி.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்ட சேவை.
திருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: தசமி.
சந்திராஷ்டமம்: கேட்டை,மூலம்.



செப்டம்பர் 13 - 2020
இன்று சம நோக்கு நாள்.
ஸர்வஏகாதசி.
கரிநாள்.
திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி சப்பரம், இரவு வெள்ளை சாற்றி வெள்ளி குதிரை பவனி.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி கன்றால் விளா எறிந்த லீலை.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் அலங்கார திருமஞ்சனம்

திதி: ஏகாதசி.
சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.


மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள்.


தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும்.


குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.


பெண்களுக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும்.


மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கவனமுடன் படிப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.


பரிகாரம்: முருகப் பெருமானை கந்த சஷ்டி கவசம் சொல்லி வணங்கி வர அனைத்து நலன்களும் வளங்களும் உண்டாகும்.



ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய ரிஷப ராசி அன்பர்களே, இந்த வாரம் காரிய தடைதாமதம் ஏற்படலாம் கவனமாக செயல்படுவது நல்லது. பயணங்கள் ஏற்படும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். பொருள்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.


தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.


குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் நிதானம் தேவை.


பெண்கள் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும்.


மாணவர்கள் திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.


பரிகாரம்: மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லி வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.



மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

தோல்வியை வெற்றி படிகளாக ஆக்கிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய மிதுன ராசி அன்பர்களே, இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.


தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த இழுபறியான நிலை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவை தொகை வந்து சேரலாம். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.


குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.


பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும்.


மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.


பரிகாரம்: ஸ்ரீநிவாசப் பெருமாளை சேவித்து வர மனகுழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.



கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

எப்போதும் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் கடக ராசி அன்பர்களே உங்கள் மீது மற்றவர்கள் கோபப்பட முடியாத அளவு நடந்து கொள்வீர்கள். இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சனையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும்.


தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.


குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.


பெண்களுக்கு அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.


மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.


பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.



சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


எந்த நேரத்தில் எதை பேச வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த சிம்ம ராசி அன்பர்களே, நீங்கள் உலக அனுபவம் பெற்றவர். இந்த வாரம் திடீர் டென்ஷன் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.


தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.


குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.


பெண்களுக்கு மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும்.


மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.


பரிகாரம்: மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.



கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

நல்லது கெட்டது என்று இரண்டையுமே சந்திக்க தயங்காத கன்னி ராசி அன்பர்களே, நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம்.


தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.


குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது.


பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.


மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக படிக்க வேண்டி இருக்கும்.


பரிகாரம்: உத்திரமேரூர் ஸ்ரீசுந்தர வரதராஜப் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும்.



துலாம்: (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளை உடைய துலா ராசி அன்பர்களே, நீங்கள் சுறுசுறுப்பானவர். இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். விரும்பிய பொருள்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும்.


தொழில் துறையினர் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்தேறும். தடைபட்டிருந்த தொழில் சிறப்பாக நடைபெறும். வர வேண்டிய ஆர்டர்கள் தங்கு தடையின்றி வந்து சேரும்.


உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வந்தே தீரும். அலுவலகத்தில் உங்களுக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள் மாறுதலாகி சென்று விடுவார்கள் அல்லது உங்களைக் கண்டால் அமைதி ஆகி விடுவார்கள்.


குடும்பத்தில் கூடுதல் செலவு உண்டாகும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.


பெண்களுக்கு பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.


மாணவர்கள் கல்விக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். விளையாட்டில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் வழிகாட்டுதல்படி நடப்பது நன்மைதரும்.


பரிகாரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.



விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

எதிர்பார்த்த சூழல் அமையாவிட்டாலும் திறமையுடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த வாரம் தாயாரின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். கடன்கள் ஓரளவிற்கு அடைபடும். எதிரிகளின் தொல்லை அறவே நீங்கும். பிள்ளைகளால் பெருமை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.


தொழில் துறையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக எந்தப் பாதிப்பும் இருக்காது. சிலர் எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைப்பது சற்று தள்ளிப் போகலாம். வியாபாரத்தில் இருந்த தடைகளை உடைப்பதற்கு நீங்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டி வரும்.


உத்தியோகஸ்தர்களுக்கு மனநிம்மதி கிடைக்காமல் அவதிப்படுவீர்கள். சிலரது தகுதியின்மை உங்களுக்கு தெரிய வருவதினால் மனதில் வருத்தம் ஏற்படும். உங்கள் ஆதங்கத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம். அது உங்களுக்கு பிரச்சினைகளாக உருவெடுக்கும்.


குடும்பத்தில் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடும் அளவிற்கு சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உடன்பிறந்தவர்கள் நல்ல ஒற்றுமையுடன் உங்களுக்கு நல் ஆதரவை கொடுப்பார்கள்.


பெண்மணிகள் கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரித்து காணப்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் ஏற்படும்.


மாணவ மணிகள் மேற்கல்வி பயில விரும்புபவர்கள் சிறு தடங்கல்களைச் சந்திக்க நேரலாம். கவனத்தைச் சிதற விடாமல் கல்வியில் நாட்டத்தைச் செலுத்துங்கள்.


பரிகாரம்: தினமும் தாமரை மலர் கொண்டு மகாலட்சுமியை பூஜியுங்கள்.



தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

வாழ்க்கையில் சோதனைகளையும் தடைகளையும் தாண்டி வெற்றி நடைபோடும் தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.


தொழில் வியாபாரம் சீராக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் அலுவலக வேலைகளை செய்து முடிப்பீர்கள்.


குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும்.


பெண்கள் எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.


மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டு படிப்பது நல்லது.


பரிகாரம்: விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.



மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)


சிக்கனம் வீட்டை காக்கும் சேமிப்பு நாட்டை காக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப சிக்கனமாக இருக்க முயலும் மகர ராசி அன்பர்களே, இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும்.


தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.


குடும்பத்தில் இருப்பவர்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மறைமுக மனவருத்தம் இருக்கும். ஏதாவது ஒரு காரணமாக வாக்குவாதம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.


பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பயணம் செல்ல நேரலாம்.


மாணவர்கள் பாடங்களை ஒருமுறைக்கு பலமுறை மனதில் வாங்கி படிப்பது வெற்றிக்கு உதவும். அலைச்சல், காரிய தடை, மனகுழப்பம் ஏற்படலாம். கவனம் தேவை.


பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள மணிமங்கலம் ஸ்ரீராஜகோபால பெருமாளை தரிசித்து வணங்கிவர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.



கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)


கற்பனை கோட்டை கட்டினாலும் அதிலேயே சஞ்சரிக்காமல் சமயத்திற்கு தக்கவாறு செயல்படும் புத்திசாலிதனம் நிறைந்த கும்ப ராசி அன்பர்களே, இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். நற்பலன்கள் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.


தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.


குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.


பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும்.


மாணவர்களுக்கு பாடங்கள் எளிதாக புரியும். படிப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கும்.


பரிகாரம்: அருகிலுள்ள முருகன் கோவிலுக்குச் சென்று வர மன அமைதி கிடைக்கும்.



மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


எதை செய்தாலும் அதில் லாபம் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய மீன ராசி அன்பர்களே, நீங்கள் பார்த்தால் பசு, பாய்ந்தால் புலி போன்றவர். இந்த வாரம் வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.


தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அலைய வேண்டி இருக்கலாம்.


குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சு தலைதூக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்படும்.


பெண்கள் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன் பிறகு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.


மாணவர்களுக்கு கல்வியில் சீரான நிலை காணப்படும். நட்பு வட்டம் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.


பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசத்தை தினமும் படித்து வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.