வேண்டியதை வழங்கிடும் செல்லப்பிராட்டி பரப்பிரம்ம சக்தி ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை! - ஆரூர் சுந்தரசேகர்.
Comment : The name of the place where Shri Akshara Lalitha Selvambigai temple located is chellapratty which is unique and the rational stating about the temple by Aroor Sundarasekar makes the reader to visit the temple at once. So whoever wants to have and pamper a child can visit chellapratty and undoubtedly gets the anugraham of devi. saimohan Chennai
s.sailakshmi
உலகம் சுற்றும் விகடகவி கரோனாவிற்கு போட்டியாக மலேரியா ?? - ராம்
Plastic கண்டுபிடிப்பு நமக்கு நாமே வைத்துக்கொண்ட ஆப்பு. இதற்கு உண்டா தீர்வு?
விஎல், அமெரிக்கா
உடல் வெப்பத்தை சீராக்கும் காசினிக் கீரை பற்றி தெரிந்து கொள்வோம்!! - மீனாசேகர்.
Is is made us wonder that Coffee chicory is made from this greens only which gives a satisfying compromise about adding chicory in coffee powder. We have come to know that kaasini greens has as many health benefits as the other greens from this article. Thanks to writer.
எஸ். சாய்லக்ஷ்மி
“உண்மையா-பொய்யா” - வெ.சுப்பிரமணியன்
வாக்கு வரது ருக்கு மூலமா வைத்தார் செக்கு.. அவர் கூறியது பலித்தது நால நீங்க அவர கண்டிப்பா நம்பலாம்.
பூமா, பம்மல்
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
மாண்புமிகு மனிதர்கள் தொடரில் உறவுகளிடையே பாசப் பிணைப்பு குறித்து மிக அழகாக விளக்கிவிட்டு, இன்றைய தலைமுறை அவற்றை பற்றி நினைப்பதில்லை எனக் கூறினீர்கள். கடைசியில், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் தீர்ப்பை போல் தீர்க்கமான முடிவை அந்தரத்தில் தொங்க விட்டீரே?!
கேசவமூர்த்தி, அயனாவரம்
வாவ் வாட்ஸப்
சென்ற வார வாட்ஸ் அப் படங்கள் செம 'கிக்' இருந்தது. ஏன்னா, நாங்க ராவா அடிச்சு, விடிய விடிய குரூப்பா 'குத்து' டான்ஸ் ஆடினோம்ல... டக்கர்பா!
தீட்சிதா, கௌஷிக், சூர்யா, சென்னை
உடல் வெப்பத்தை சீராக்கும் காசினிக் கீரை பற்றி தெரிந்து கொள்வோம்!! - மீனாசேகர்.
காசினி கீரை தொடர்ந்து சாப்பிட்டு வர, நோய் தாக்குதல், மருந்து மாத்திரைகளுக்கு காசு இனி தேவையில்லை என்றே தோன்றுகிறது. மிக சிறப்பு.
செல்வகுமார், மதுராந்தகம்
சேனல் டாக்! - 08 - மெகா மாலினி
சென்னை நகரில் பெய்து வரும் தொடர் மழையில் சாப்பிட கிடைக்கும் கரகர, மொறு ஹாட் சிப்ஸ் போல சேனல் டாக் தகவல்கள் அமைந்திருந்தன. சூப்பர்!
செண்பகராமன், குன்றத்தூர்
குட்டியானையின் பாசம்! – ஆர்.ராஜேஷ் கன்னா.
அட்றா சக்கை... குட்டி யானையின் பாசம்! செம கலக்கல் பாஸ்.
குமாரவேலன், திருவல்லிக்கேணி
விரல் ரேகை இல்லாத இளம் தலைமுறை.. - மதுமிதா
விரல் ரேகை இல்லாத இளம் தலைமுறையா? அடக் கஷ்டகாலமே! இதுபோன்று யாருக்கும் எதுவும் நேரக்கூடாது என பிரார்த்திப்போம்.
சார்லி சாப்ளின், திருச்சி
நாய் மீது உயில் எழுதிய விவசாயி... - சௌம்யா வாசுதேவ்
அடப்பாவி மனுஷா... 2 பொண்டாட்டி, 5 பசங்க இருந்தும் செல்ல நாய்க்கு சொத்தை எழுதி வெச்சிட்டாரே! அவருக்கு இனி அஷ்டமத்து சனிதான் உச்சத்துல இருக்கப் போகுது.
பொன்னுசாமி, மதுரை
கோலப்போட்டி
அடடே... கோலப் போட்டி வெச்சு, லேட்டாக எழும் பெண்களையும் அதிகாலையில் கோலம் போட வெச்ச்சிட்டீங்களே! கலக்குங்க.
வைத்தியலிங்கம், சைதாப்பேட்டை
வரும் பிப்ரவரியில் ஒரு அதிசயம்.... - பத்மஜா
பிப்ரவரி மாதத்தில் வரும் அதிசயம் போல், இந்த வருடம் கொரோனா தொற்று, உயிரிழப்பு அதிகரிக்காமல் ஓடிப்போனாலும் அதிசயம்தான்!
மல்லிகா பரமேஸ்வரன், நெசப்பாக்கம்
இலக்கே... சிறகு ....! - சி. கோவேந்த ராஜா.
கோவேந்தராஜாவின் இலக்கே சிறகுகள் கவிதை மிகவும் அருமை.
சின்னதம்பி, ஐதராபாத்
“உண்மையா-பொய்யா” - வெ.சுப்பிரமணியன்
புருஷனான நாம எது சொன்னாலும் நம்ம பொண்டாட்டிகளுக்கு ஜோசியம் போல பொய்யாதான் தெரியும். ஏன்னா, அவங்களுக்கு எப்பவும் மட்டம் தட்ற வேலைதானே?!
சுகுமாரன், ஜெயக்குமார், வந்தவாசி
மக்கள் கருத்து.. - தில்லைக்கரசி சம்பத்
எங்களிடம் எதுவுமே கேட்காத தில்லைக்கரசியின் மக்கள் கருத்தை இந்த வருஷம் படிக்கக்கூடாதுனு உறுதி ஏற்றேன். ஆனா, 2-ம் தேதி வந்ததும் அவரோட உறுதிமொழி பற்றிய மக்கள் கருத்தை படிச்சதும் என்னோட உறுதி காற்றோடு கலந்து போச்சு!
பங்கஜம் ராஜகோபால், தாம்பரம்
64 வயது மருத்துவ மாணவர்..! - அனிதா சர்மா
64 பயது மருத்துவ மாணவரின் செயல்பாடுகள் படிப்பின்மீது மிகுந்த ஆர்வத்தை தூண்டியது. மிக சிறப்பு.
கிஷோர் ராஜ், அவினாசி
கேரக்டர் - அறியப்படாத மனிதர்கள்... - வேங்கடகிருஷ்ணன்
அறியப்படாத மனிதர்கள் தொடரின் முதல் பெண்மணியின் குணாதிசயமே செம அசத்தல். இந்த 74 வயதிலும் 20 வயது இளம்பெண்ணை போல் சுழன்று வருவது மெய்சிலிர்க்க வைத்தது.
பாத்திமா அஹமது, ராணிப்பேட்டை
புதுசு கண்ணா புதுசு…… - மாலா ரமேஷ்
2020-ம் ஆண்டை முன்னெச்சரிக்கையா வைத்து, 2021-ம் ஆண்டை மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியுடன் கொண்டாடி மகிழ்வோம் என அழகாக விளக்கியுள்ளார் மாலா ரமேஷ்.
மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை
பேசிக்கறாங்க......
பேசிக்கிறாங்க டயலாக்கெல்லாம் செம கிக்காவும் கிளுகிளுப்பாவும் அட்வான்ஸா இருக்கு. கண்டினியு பண்ணு தலீவா...
வீரராகவன், மாதவரம்
ராக தேவதைகள்... - 20 - மாயவரத்தான் சந்திரசேகரன்
அடாணா ராகத்தை போல், அதன் பாடகர்கள் குறித்த தகவல்களும் இன்ப தேனமுதமா இருந்தது. இப்படியாவது தியாகராஜர் வைபவத்தில் உள்ளூர் நல்ல பாடகிகளுக்கு வாய்ப்பு கிடைத்ததே மகிழ்ச்சி.
சுப்புலட்சுமி, நங்கநல்லூர்
உடல் வெப்பத்தை சீராக்கும் காசினிக் கீரை பற்றி தெரிந்து கொள்வோம்!! - மீனாசேகர்.
kasu inivendam..medicalukku! Kasini keeraiye podume..!Article by Sundarasekar kanakachitham. Engal Vazhthukkal!
சுப்ரமணியன்
“உண்மையா-பொய்யா” - வெ.சுப்பிரமணியன்
இதே போல் உள்ள வாக்கு வரதராஜர்கள் இங்குள்ள மனிதர்கள் பலரின் வாழ்க்கையை தங்களின் வாக்கால் மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் இறைவனால் எழுதப்பட்டதை எவராலும் மாற்ற முடியாது என்பதே நிதர்சனமான உண்மை...
சூர்யா
‘அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு’ சித்த டாக்டர் வீரபாபு சவால்!! – ஆர்.ராஜேஷ் கன்னா.
சித்த மருதுவர் வீரபாபுவின் தன்னம்பிக்கை பாராட்டுக்கு உரியது. தமிழக மக்கள் வரும் பிப்ரவரி மாதம் இறுதிவரை கண்டிப்பாக முக கவசம் அணிவதும், சமூக இடைவெளி விட்டு அமர்வதும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்தால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பது மக்களின் கையில் உள்ளது.
செந்தில் பாலாஜி, பூந்தமல்லி
ச்சும்மா அதிருதுல்ல.. - தில்லைக்கரசி சம்பத்
நான்கு தோழிகளும் திருமணத்தின்போது சாதி, மதம் பார்க்கக்கூடாதுனு பேசினீங்க, கேட்க நல்லாயிருந்தது. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் அந்தந்த மாவட்டங்களில் எந்தெந்த சாதிக்கு அதிக செல்வாக்கு உள்ளது, எவ்வளவு ஓட்டு விழும்னு நடக்கிற வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு மட்டும் சரியா? நாங்களும் 'ச்சும்மா' அதிரவிடுவோம்ல!
குலசேகரன், மதுரை
உழந்தும் உழவே தலை.. - சரோஜா குமார்.. - மரியா சிவானந்தம்
சரோஜா குமாரின் 'மனிதர்கள், சூழ்நிலை, காலநிலை, பருவமழை என்னும் இயற்கை காரணிகளை ஒட்டி நடத்தும் வாழ்வியல்' மற்றும் மாற்றம் என்பது சொல் அல்ல, செயல்... என்ற வார்த்தைகள் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. மிக மிக சிறப்பு.
சுகுணா வாசுதேவன், ஶ்ரீபெரும்புதூர்
“உண்மையா-பொய்யா” - வெ.சுப்பிரமணியன்
வாழ்வில் நடந்ததை மாற்ற முடியாது. நடந்துகொண்டிருப்பதை ஓரளவிற்கு நாமே மாற்றிப் பார்க்கலாம். ஆனால், நடக்கப் போவதை அறுதியிட்டு கூறும் அறிவு பூமியில் இல்லை. Sometimes, Astrology may be predicted to the closest proximity, But, not accurately. So " ஜோசியத்தை நம்பாதே"
கண்ணன்
ஒரு வீடு.. இரு சமையல்… – பா.அய்யாசாமி
அய்யாசாமியின் ஒரு வீடு, இரு சமையல் சிறுகதை செம சூப்பர்! இன்றும் பலர் சொகுசாக வாழ செல்வம் சேர்ப்பதில் இல்லறத்தில் எலியும் பூனையுமாக சண்டையிடுகின்றனர். தங்களது கருத்து அதிகளவு பகிரப்படும்போது, அவர்களின் மனதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் என்பது உறுதி.
அம்புஜம் ராமநாதன், மதுராந்தகம்
"கடந்து போன 2020..... அப்படி..! பிறந்த 2021.. எப்படி?" - ஸ்வேதா அப்புதாஸ்.
2020-ம் ஆண்டு எப்படி இருந்தது, 2021-ல் எப்படி இருக்கும் என கேட்டால், அவரவர் துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை பலர் கூறினர். ஆனால், பல்வேறு இடங்களில் கூட்டு குடும்ப வாழ்க்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு, கூட்டாஞ்சோறு மகத்துவத்தை வெளிபடுத்தியே உண்மை என கூறலாம். மிக சிறப்பான கட்டுரை!
கோமளவல்லி ஜெயராமன், ஆத்தூர், சேலம்
அழலாமா? - ஆர்னிகா நாசர்
ஆர்னிகா நாசரின் அழலாமா சிறுகதையில், கடைசி நான்கு வரிகள் நெஞ்சை தொட்டது. இறந்து போன சிட்டுக்குருவியை மண்ணை தோண்டி அடக்கம் செய்து, அவரது மகன் விட்ட கண்ணீர் துளிகள் பல்லாயிரம் விஷயங்களை வெளிப்படுத்தியது.
ஹேமாவதி, அரும்பாக்கம்
குட்டியானையின் பாசம்! – ஆர்.ராஜேஷ் கன்னா.
good one
எஸ். பார்கவன், அமெரிக்கா
ச்சும்மா அதிருதுல்ல.. - தில்லைக்கரசி சம்பத்
பல்வகை கோணங்களில், பிரச்சினைகள் குறித்து விரிவாகவே விவாதங்கள் ...நன்றாக இருக்கிறது
எஸ். பார்கவன், அமெரிக்கா
ஒரு வீடு.. இரு சமையல்… – பா.அய்யாசாமி
இந்த மாதிரி பிரச்சினைகள் பல இடங்களில் இப்போது ஆரம்பித்து இருக்கலாம்... அதற்கு எல்லாம் தீர்வு காண வேண்டும், கிடைக்கும்.
எஸ். பார்கவன், அமெரிக்கா
வேண்டியதை வழங்கிடும் செல்லப்பிராட்டி பரப்பிரம்ம சக்தி ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை! - ஆரூர் சுந்தரசேகர்.
செஞ்சி அருகே செல்லபிராட்டி ஶ்ரீ அக்ஷ்சர லலிதா செல்வாம்பிகை கோயிலின் தல வரலாற்றை படித்ததும் நாங்க பார்க்க கிளம்பியாச்சு. நீங்க குறிப்பிட்ட நபரை பார்த்து சொன்னதும் சந்தோஷமாயிட்டு, நாங்க சாமி தரிசிக்க உதவினார். சுந்தரசேகரின் கைவண்ணமே அலாதி!
செல்வராணி சுகுமார், கோவிலம்பாக்கம்
வேண்டியதை வழங்கிடும் செல்லப்பிராட்டி பரப்பிரம்ம சக்தி ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை! - ஆரூர் சுந்தரசேகர்.
செஞ்சி அருகே செல்லபிராட்டி ஶ்ரீ லலிதா செல்வாம்பிகை கோயிலின் தல வரலாறு படித்து மகிழ்ந்தோம். அக்கோயிலுக்கு விரைவில் சென்று சாமி தரிசனம் செய்வதற்கு, சுந்தரசேகரின் தகவல்கள் மிக பயனுள்ளதாக இருக்கிறது.
பாகீரதி சுந்தரம், வேளச்சேரி
வாசகர் விஷுவல் - புதிய பகுதி.
வாசகர் விஷுவல் பகுதி ஆரம்பமே கலக்கலாக உள்ளது. புகைப்பட ஜாம்பவான் மேப்ஸின் மிக துல்லியமான போட்டோக்கள் பிரமிக்க வைக்கிறது. இதை பார்த்து நாங்களும் டிரை பண்ணா என்ன என்ற ஆவலை தூண்டியது. வெல்டன்!
கௌஷிக், தீட்சிதா, மயிலாடுதுறை
குறுந்தொகை துளிகள் - 1 - மரியா சிவானந்தம்
மரியா சிவானந்தத்தின் குறுந்தொகை துளிகள் ஆரம்பமே அட்டகாசமாக - நெய்தல் நிலத்தில் தலைவனை காண விரும்பும் தலைவியின் ஏக்கத்தை வெளிப்படுத்தியது.
சிவகுமார், பார்த்திபன், காரைக்கால்
2020 இந்திய போட்டோ டைரி !!
2020 - இந்திய போட்டோ டைரி... ச்சும்மா'நச்'சுனு இருக்கு. கீப் இட் அப்!
ரவீந்திரன், பிருத்விராஜ், கோட்டயம், கேரளா
எடப்பாடியாருடன் ஸ்பெஷல் சந்திப்பில் மிஸ்டர் ரீல்...! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
மிஸ்டர் ரீலுக்கே அல்வா கொடுத்துட்டாரா தமிழக முதல்வர்?! அவர் தேர்ந்த அரசியல் தலைவரா மாறிட்டாருனு சொல்லுங்க. இதே மாதிரி பாஜவுக்கும் கோ(ந்)துமை அல்வா கொடுத்துட்டு, மீண்டும் முதல்வரா வருவார், பாருங்கனு மீனவ நண்பன் கூவ ஆரம்பிச்சிட்டாரு!
சவுந்தரராஜன், ஜெயக்குமார், திருவொற்றியூர்
வந்தார்கள்... வென்றார்கள்... - 20 - மதன்
மதனின் வந்தார்கள் வென்றார்கள் தொடரின், கேலிக்கூத்தான மன்னிப்புகள் பகுதியை படித்தேன். சேஸிங், பைட் சீன் இருந்தாலும், ஹுமாயூன் நிலையை எண்ணி வேதனைப்பட வைத்தது. அவர் சிறந்த வீரராக இருந்தாலும் சகோதரர்களிடம் விவேகமாக செயல்பட முடியவில்லை. ஏன்னா, தந்தைக்கு கொடுத்த சத்தியம் என்பது நெகிழ வைக்கிறது!
மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை
விகடகவியார் பராக்!
விகடகவியாரின் அரசியல் கிசுகிசு என்ட்ரியே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' பட ரிலீஸ் போல் அமர்க்களமா இருக்கு! ஆரம்பமே ரஜினி, கமல், எடப்பாடி, அழகிரி, சசிகலா என ஹைவோல்டேஜ் ஷாக் செய்தியுடன் கலக்கிட்டீங்க!
ராதா வெங்கட், பிரதீப்குமார், கோவை
வலையங்கம்
கொரோனா தடுப்பு ஊசி போடப்படுவது பற்றி வெளிப்படை தன்மை வேண்டும். அதன் சாதக-பாதகங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வலையங்கத்தில் அழகாக எடுத்து கூறினீர்கள். இவ்விஷயத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுக்காதது ஏனோ?!
செந்தமிழ் செல்வன், திருவெறும்பூர்
வேண்டியதை வழங்கிடும் செல்லப்பிராட்டி பரப்பிரம்ம சக்தி ஸ்ரீ அக்ஷ்ரலலிதா செல்வாம்பிகை! - ஆரூர் சுந்தரசேகர்.
Aboorva deivam kurithu arputhamagha alithull Aroor.Sundarasekar..kku Engal Nandrigal.
சுப்ரமணியன்
வாசகர் விஷுவல் - புதிய பகுதி.
ஊக்கம் தருகின்ற உங்கள் முயற்சிக்கு நன்றி. சாதாரண மொபைல் ஷாட் கூட போதும். திறபையை ஊக்குவிக்கும் உங்களை பாராட்டியேத்தான் ஆக வேண்டும்.
மரு. வெங்கட்ராமன். கோபி
விகடகவியார் பராக்!
விகடகவியாரின, ப்ராக நல்ல அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும்.அலசல. அலுமை.
மரு. வெங்கட்ராமன், கோபி.
புதுசு கண்ணா புதுசு…… - மாலா ரமேஷ்
Inviting the new year in wonderful with rewind of passing year is fabulous
சுர்யா, சென்னை.
குறுந்தொகை துளிகள் - 1 - மரியா சிவானந்தம்
இவ்வாசகனின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தொட் ஆசிரியருக்கு நன்றிகள். ஆரம்பமே அசத்துகிறது. தொடரட்டும் அவர் பணி. சிவா, வேலூர்.
சிவாநந்தம்
அழலாமா? - ஆர்னிகா நாசர்
A delicate, sensitive issue...well presented
எஸ். பார்கவன், அமெரிக்கா
எடப்பாடியாருடன் ஸ்பெஷல் சந்திப்பில் மிஸ்டர் ரீல்...! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
கற்பனையில் தான் இது போன்ற சில அனுபவங்கள்! மெச்சதகுந்ததே.
எஸ். பார்கவன், அமெரிக்கா
விகடகவியார் பராக்!
நல்ல ஒரு ஆரம்பமாக உள்ளது.
எஸ். பார்கவன், அமெரிக்கா
வாசகர் விஷுவல் - புதிய பகுதி.
pictures were really great..looking forward to see more
எஸ். பார்கவன், அமெரிக்கா
Leave a comment
Upload