தொடர்கள்
Daily Articles
வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை... - 21 - டாக்டர் எம்.ஏ. வேங்கடக்ருஷ்ணன்

இதிஹாஸங்களில் வெண்ணெய் களவு

20210015094016913.jpeg

கண்ணபிரானுடைய வெண்ணெய்க் களவு பற்றிப் புராணங்களில் அதிகம் சொல்லப்படவில்லை என்பதைப் பார்த்தோம். புராணங்களைக் காட்டிலும் மிகவும் சிறப்புப் பெற்றவை இதிஹாஸங்கள்.

“இவையிரண்டிலும் வைத்துக் கொண்டு இதிஹாஸம் ப்ரபலம்” என்பது பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசனபூஷணத்தில் (3) அருளிச் செய்யும் ஸ்ரீஸூக்தி. அப்படிப்பட்ட இதிஹாஸங்கள் கண்ணனுடைய வெண்ணெய்க்களவு பற்றி கூறுவதைப் பார்ப்போம்.

“நாராயணகதாம் இமாம்” (நாராயணனுடைய கதை) என்று தொடங்கப்பட்டது மஹாபாரதம். ஆனால் அதில் கண்ணனுடைய சரித்திரம் மிகமிகச் சுருக்கமாகவே கூறப்பட்டிருக்கிறது. ஸபாபர்வத்தில் ஐம்பத்திரண்டாவது அத்யாயத்தில் கண்ணனுடைய சேஷ்டிதங்கள் மிகச் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. அதில் ஒரு சுலோகம்:

தத: ஸ பாலோ கோவிந்தோ நவநீதம் ததா க்ஷயம் ஞு
க்ராஸமாநஸ்து தத்ராயம் கோபீபிர்தத்ருசே ததா ஞுஞு
தாம்நா•தோலூகலே க்ருஷ்ணோ கோபீபிச்சநிபந்தித: ஞுஞு57ஞுஞு

(வெண்ணெய் திருடிக் கொண்டிருந்த கண்ணனைப் பார்த்துவிட்ட கோபிகைகள் அவனை உரலோடு கட்டி விட்டார்கள்) என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. வேறு எதுவும் சொல்லப்படவில்லை.

வ்யாஸ பகவான் மஹாபாரதத்தைத் தொடங்கும் போது “நாராயண கதாம் இமாம்” (நாராயணனுடைய கதையைச் சொல்லுகிறேன்) என்று தொடங்கிவிட்டு, கங்கையினுடையவும், பீஷ்மருடையவும், மற்றும் பலருடையவும் உற்பத்திகளையே விரிவாகப் பேசி வர்ணித்தபடியால், அவருடைய நாக்கே தூய்மையை இழந்து விட்டதாகவும், அதை மீண்டும் பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக ஹரிவம்சம் என்கிற கிரந்தத்தை இயற்றுவதாகவும் அவரே கூறுகிறார்.

அஸத்கீர்த்தநகாந்தார பரிவர்த்தந பாம்ஸுலாம் ஞு
வாசம் சௌரிகதாலாப கங்கயைவ புநீமஹே ஞுஞு

(பொருளல்லாதவற்றைப் பேசியமையால் தூய்மையிழந்த நாக்கை, கண்ணனுடைய சரிதங்களைப் பேசுதலாகிய கங்கையினால் புனிதப்படுத்திக் கொள்கிறேன்.) என்று வியாஸ பகவான் பணித்தபடியே இயற்றப்பட்ட ஹரிவம்சம் என்கிற இதிஹாஸத்தில் கண்ணபிரானுடைய வெண்ணெய்க்களவு பற்றிய செய்திகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அவற்றையும் பார்ப்போம்.
அதிப்ரஸக்தௌ க்ரீடாயாம் க்ருஷ்ணஸங்கர்ஷணௌ முஹு: ஞு
க்வசித் வேச்மநி நிர்கத்ய நவனீதம்ச க்ருஹ்ணத: ஞுஞு

விளையாட்டுக்களில் மிகவும் வல்லவர்களான கண்ணனும் பலராமனும், வேறொருவர் வீட்டிலிருந்து வெண்ணெயை எடுத்துக் கொண்டு வந்து விட்டார்கள்.
ஸம்க்ஷோப்ய தக்ரம் பஹுசோ தாரகௌ தாரகைஸ் ஸ ஹ ஞு
அந்வபூதாம் ததோ ராஜந் கடாம்ச்ச பரிஜக்நது: ஞுஞு

மோர் வைத்திருக்கின்ற குடத்தைப் பல இடையர்களுடன் சென்று எடுத்துக் கலக்கிக் கீழே போட்டு உடைத்தார்கள்.
ததி பீத்வாது தேவேசௌ தாந்கடாம்ச்ச பிபேஷது: ஞு
சிக்யஞ்ச பரிஜக்ராஹ க்ருஷ்ணோ தாரகவேஷவாந்: ஞுஞு

இடையனாக இருந்த கண்ணன், உறியில் வைத்திருந்த தயிரையும் எடுத்துக் குடித்துவிட்டான்.
ஹ்ருத்வா சித்வாச கோவிந்த: பபௌ க்ஷீராணி ஸர்வச: ஞு
தச்சிஷ்டம் சைவ தேவேச: க்ஷிதௌ ச ஸமவாக்ஷிபத்: ஞுஞு

எல்லாப் பாலையும் எடுத்துப் பருகிவிட்டு மீதம் இருந்தவற்றைத் தரையில் கொட்டிவிட்டான் கோவிந்தன்.
பாயஸம் ச ஸமாநீய க்ருஹாதந்யத்ர விக்ஷிபந் ஞு
தாரகேப்யஸ் ததா க்ருஷ்ணோ ததௌ ஸ்வம் ஸமாசரந் ஞுஞு

இன்னொரு வீட்டிலிருந்து பாயஸம் எடுத்து வந்து தன் தோழர்களான ஆயர்களுக்குக் கொடுத்தான் கண்ணன்.
சிக்யாச்ச கடமாதாய தத்நாம் தாரகஸத்தம: ஞு
நிர்பித்யாச்சித்ய பூமௌது நிஷ்பிபேஷ ஸ: கேசவ: ஞுஞு

உறியிலிருந்து மோர்ப் பானையை எடுத்துவந்து உடைத்து தூர எறிந்தான்.
கேசித்வேச்மநி நிர்கத்ய சிக்யஸ்த்தாந் பயஸோகடாந் ஞு
ஆதாய யுகபத்ஸர்வாந் பய: பீத்வா முதா ப்ருசம் ஞுஞு
அபிஹத்ய தத: ஸர்வாந் நிஷ்பிபேஷ ஹஸந்ஹவி: ஞுஞு

ஒரு வீட்டினுள் நுழைந்து உறியிலே வைத்திருந்த பால் முழுவதையும் ஒரேசமயத்தில் எடுத்துக் குடித்து மகிழ்ந்தான்.
ஆச்சித்ய சிக்ய மந்யத்ர ததோ தத்நோ கடாந் க்ஷிபந் ஞு
யதாகாமம் தத:பீத்வா தாரகேப்யஸ் ததோ ததௌ ஞுஞு

மற்றொரு உறியிலிருந்து தயிர்க் குடத்தையெடுத்து வேண்டியவரை பருகி விட்டுத் தோழர்களுக்கும் தந்தான்.
அத வேகாந்முதா க்ருஷ்ண: க்வசிதந்யத்ர வேச்மநி ஞு
குப்தாந்கடாநுபாதாய த்வரிதோதபபஞ்ஜஹ ஞுஞு

இன்னொரு வீட்டினுள் விரைவாகச் சென்று அங்கு ஒளித்துவைத்திருந்த குடங்களையும் எடுத்துவந்து உடைத்தான்.
க்வசித்க்ருதகடாந்பூர்ணாந் பஹூநாதாய வேச்மநி ஞு
வ்யபஜத் தாரகேப்யஸ்து பக்ஷயந் ஸ்வயமாபபௌ ஞுஞு

வேறொரு வீட்டிலிருந்து நெய் நிறைக்கப்பட்டிருந்த குடங்களை எடுத்து வந்து, தன் தோழர்களுக்குப் பங்கிட்டு கொடுத்துத் தானுமுண்டான்.
அந்யதோவேச்மந: சிக்யாத் கடாம்ஸ்தக்ரஸ்ய பூரகாந் ஞு
ஆதாயாதூய பஹுதா தஸ்மிந்நேவ முஹு: க்ஷிபந் ஞுஞு
வ்யஹஸத்விவிதம் ஹாஸம் நநர்த ச ஸ தாரக: ஞுஞு

வேறொரு வீட்டிலிருந்த உறியிலிருந்து மோர் நிறைந்த குடத்தை எடுத்து வந்து பலவாறு போட்டு உடைத்தான். பலவிதமாக சிரித்து நாட்டியமும் ஆடினான்.
தக்ரேஷுச பய: க்ஷிப்ய தக்ரம்ச பயஸி க்ஷிபந் ஞு
பயோ ஜலேஷுஸம்யோஜ்ய க்ருதமக்ளௌஜுஹாவச ஞுஞு

மோரில் பாலைக் கொட்டியும் பாலில் மோரைக் கொட்டியும், பாலில் நீரைக் கொட்டியும், நெய்யை நெருப்பில் கொட்டியும் (விளையாடினான்).
ஏவமத்யந்ததோ கோப்யோ விநேதுர் விஸ்வரம் ப்ருசம் ஞு
காகதிர் வத பத்ரேதி கோப்யஸ் ஸர்வாஸ் ததா ப்ருவந் ஞுஞு

இவ்வாறு இன்னல்களடைந்த கோபிகைகள் "எங்களுக்கு ஏதுவழி" என்று ஓலமிட்டு (யசோதையிடம்) முறையிட்டார்கள்
அத தாப்யோ யதாநஷ்டம் யசோதா தத்தவத்ஸலம் ஞு
ஸமாச்வாஸ்ய தத ஸர்வா: ஸ்வம் ஸ்வம் வேச்ம வ்யகாலயத் ஞுஞு

அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை யெல்லாம் திரும்பக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்து அவர்கள் தத்தம் இல்லம் செல்லும்படி செய்தாள் யசோதை.
ததோ யசோதா ஸம்க்ருத்தா க்ருஷ்ணம் கமலலோசநம் ஞு
உவாச சிசுரூபேண சரந்தம் ஜகத: ப்ரபும் ஞுஞு

பிறகு கோபம் கொண்டவளான யசோதை, உலகுக்கெல்லாம் நாதனும் குழந்தை வடிவில் உலவுபவனும், தாமரைக்கண்ணனுமான கிருஷ்ணனை நோக்கிக் கூறினாள்:
ஏஹி வத்ஸ பிப ஸ்தந்யம் துர்வோடும் மம ஸம்ப்ரதி ஞு
தாம்நாசைவ உதரே பத்த்வா ப்ரத்யபத்நாதுலூகலே ஞுஞு
யதிசக்நோஷி கச்சேதி தமுக்த்வா கர்ம ஸா•கரோத் ஞுஞு

“குழந்தாய்! எனக்கு அடங்காதவனாக இருக்கின்றாயே, முலைப்பால் குடிப்பாயாக” என்று கூற, (முலைப்பால் குடிப்பதற்காக அருகே வந்த கண்ணனை) வயிற்றில் கயிற்றைக் கொண்டு கட்டி, உரலோடு சேர்த்து நன்றாகக் கட்டினாள். “இப்போது முடிந்தால் போ பார்க்கலாம்” என்று சொல்லி விட்டுத் தன் காரியங்களைச் செய்யத் தொடங்கினாள்.
ஆக, இவ்வளவும் ஹரிவம்சத்தில் உள்ளவை. மற்ற இதிஹாஸ புராணங்களை விட ஹரிவம்சத்தில் வெண்ணெய்க் களவு பற்றிய செய்திகள் சற்று விரிவாகவே சொல்லப் பட்டிருந்தாலும், ஆழ்வார்கள் அனுபவித்தாற் போல எந்த ரிஷியுமே அனுபவிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.