1). பள்ளிக்கூடத்தில் டீச்சரிடம் அடி வாங்கி இருக்கிறீர்களா?
ரொம்ப! ஆனால் வலி தாங்க முடியவில்லை என்பது போல நடிப்பேன். வாத்தியாரே பயந்து விடுவார்.
2).மதன் சார் முன்னால் கடவுள் வந்து நின்றால் என்ன வரம் கேட்பீர்கள்?
வாரப்பத்திரிகை போல வாரம் ஒருமுறை வர வேண்டும். அவ்வப்போது யோசித்து வரம் கேட்க வசதியாக இருக்கும் என்பேன்!
3).ராஜராஜ சோழனிடம் நீங்கள் வியந்தது எது?
தஞ்சை பெரிய கோயில் கட்டியதே வியப்பான சாதனை தான். மற்றபடி 'கல்கி' ராஜராஜனை அருள்மொழி தேவனாக நம்மிடையே உலவ விட்டதிலிருந்து, அவர் மீது ஒரு காதலே ஏற்பட்டு விட்டது!
4).எம்.ஜி.ஆர் , சிவாஜி இப்போது திரையுலகில் நடித்தால் எப்படி படம் இருக்கும்?
பிரமாதமாக நடித்திருப்பார்கள். அவர்களுடைய 'ஸ்டார் அப்பிலை' நினைத்துப் பாருங்கள் .தவிர நிறைய திறமையான இயக்குனர்கள் வந்து விட்டார்கள் அவர்களை வித்தியாசமாக கையாண்டு இருப்பார்கள்.
5).நீங்கள் கால யந்திரத்தில் செல்லும் போது யாரை சந்தித்து பேச விருப்பபடுவீர்கள்?
நான் காலயந்திரத்தை திருப்பித் தர மாட்டேன். கி.மு.வில் இருந்து கி.பி. வரை அதில் சுற்றிக் கொண்டிருப்பேன். சந்திக்க விரும்புபவர்கள் ...அது பர்சனல் விஷயம்!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in
Leave a comment
Upload