தொடர்கள்
அரசியல்
ராசாவின் ராங் ரூட்- விகடகவியார்  ஸ்பெஷல் ரிப்போர்ட்

20220816180419277.jpg

"இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன் "இது பெரியார் திடலில் முன்னாள் மத்திய அமைச்சர் திமுக எம்பி .ராசா உதிர்ந்த முத்துக்கள் இவை. இது மனுஸ்மிருதியில் குறிப்பிட்டுள்ளது இதைத்தான் சொன்னேன் என்கிறார் ராசா.

இந்த மனுஸ்மிருதி என்ற நூலை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்பது நிச்சயம் சந்தேகம் தான். அந்த நூலில் குறிப்பிட்ட படி தான் இந்துக்கள் வாழ்கிறார்களா என்பதும் சந்தேகம் தான்.

மனுஸ்மிருதி என்பது நூலே அல்ல ஸ்மிருதி என்றால் உபதேசம் என்று பொருள் .ராசா குறிப்பிடும் நூல் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் திரித்தி எழுதிய நூல் என்று தமிழக பாரதிய ஜனதா துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிடுகிறார்.

மனுஸ்மிருதியில் குறிப்பிட்டுள்ளது என்று சொன்னா . ராசா கூடவே 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

2022081618071656.jpg

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்த வரை பெரியார் இந்து சூத்திரன் இந்த மூன்றிலும் எப்போதுமே தெளிவான புரிதல் இல்லாமலே இதுவரை இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.

திராவிட முன்னேற்ற கழகம் பெரியார் மணியம்மை திருமணம் செய்வதை கண்டித்து சுதந்திர தினத்தை கருப்பு தினமாக கொண்டாட பெரியார் வேண்டுகோள் விடுத்ததை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் தான் திமுக. பெரியார் கண்ணீர் துளி கட்சி என்று தான் திமுகவை ஆரம்பகாலத்தில் குறிப்பிட்டார்.

விடுதலை இதழில் பெரியார் தன்னை கொலை செய்ய சதி செய்தார் என்று அண்ணாவை மறைமுகமாகக் குறிப்பிட்டு தலையங்கம் 13.7.1949 ல் எழுதியிருக்கிறார். இதற்காக அண்ணா பெரியார் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். பெரியார் அண்ணா உட்பட எல்லோரையும் ஆதரவாளர்கள் என்றுதான் குறிப்பிட்டார். அவர்கள் தொண்டர்கள் அல்ல என்று விளக்கம் வேறு சொன்னார் பெரியார் மணியம்மை பத்தாவது வரை படித்தவர் அவரை விட படித்தவர்கள் இந்த கட்சியில் யார் இருக்கிறார்கள் என்றும் கேட்டார் பெரியார். அப்போது திராவிட கழகத்தில் சட்டம் படித்தவர்கள் முதுநிலைப் பட்டதாரிகள், பட்டதாரிகள் பலர் திராவிட கழக உறுப்பினர்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

20220816180952986.jpg

1967 தேர்தலில் திமுகவுக்கு எதிராக காங்கிரசுக்கு ஆதரவாக கடுமையாக பிரச்சாரம் செய்தார் பெரியார். 1967 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அழைப்பதற்கு முன் தனது அமைச்சரவை சகாக்களுடன் திருச்சியில் சென்று பெரியாரை சந்தித்து ஆசி பெற்றார். பெரியார் முதலில் அண்ணாவை சந்திக்க சங்கடப்பட்டார் அவரை நான் எப்படி பார்ப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னார் பெரியார் வெளிப்படையாக காரணம் அந்த தேர்தலில் பெரியார் அண்ணாவை கடுமையாக சாடி பிரச்சாரம் செய்தார், அதனால் பெரியாருக்கு அண்ணாவை சந்திப்பதில் சங்கடம் அளித்தது. ஆனால் அண்ணாவுக்கு அப்படி எந்த சங்கடமும் இல்லை காரணம் அண்ணா யாரையும் விமர்சிக்க வில்லை அதுவும் குறிப்பாக பெரியார் பற்றி பெரியாரின் விமர்சனத்துக்கு எந்த பதிலும் சொல்லாமல் நாகரீகமான முறையில் அவர் பிரச்சாரம் இருந்தது.

அண்ணா தனது கொள்கையை வெளிப்படையாக சொன்னார் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் நான் பிள்ளையாருக்கு பாலும் ஊற்ற மாட்டேன் பிள்ளையார் சிலையை உடைக்கவும் மாட்டேனென்று தனது கொள்கையை தெளிவுபடுத்தினார்.

இந்து பார்ப்பான் பகுத்தறிவு பார்ப்பனியம் இப்படி கொள்கைகளைப் போட்டு குழப்பி கொண்டது கருணாநிதி தான். அந்த தெளிவற்ற தன்மை இன்று வரை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்கிறது.

தேர்தல் நேரத்தில் கருணாநிதி நான் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்ல பார்ப்பனியத்துக்கு தான் எதிரி என்று குறிப்பிடுவார். அவரைப்போல் அவர் மகன் திமுக தலைவர் ஸ்டாலினும் தெளிவற்ற குழப்ப நிலையில் தான் இன்று வரை இருந்து வருகிறார்.

2022081618112463.jpeg

2019 தேர்தலில் கந்த சஷ்டி கவச சர்ச்சை வந்தபோது திமுக அவர்களை கண்டித்தது ஸ்டாலினே கையில் வேல் பிடித்துக்கொண்டு பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தார். ஆர்.எஸ்.பாரதி 90 சதவீதம் திமுக உறுப்பினர்கள் இந்துக்கள் தான். நாங்கள் கோயிலுக்குப் போகிறோம் தட்டில் தட்சணையாக ஐநூறு ஆயிரம் என்று போடுகிறோம் நான் கூட கையில் கயிறு கட்டிக் கொண்டிருக்கிறேன் என்றார். அப்போதெல்லாம் .ராசாவுக்கு மனுஸ்மிருதி இந்து போன்றவையெல்லாம் நினைவுக்கு வரவில்லை.

20220816181240697.jpg

வீரமணியை எத்தனை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு திமுக அழைத்தார்கள் என்று யாரும் கேள்வி கேட்கவில்லை சட்டமன்றத் தேர்தலில் வீரமணியை ஒதுக்கித் தான் வைத்திருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் பெரியார் திடலில் இந்துக்கள் பற்றி இவ்வளவு பேசும் .ராசா அதே மேடையில் அமர்ந்திருந்த திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணியை பார்த்து திமுக தான் சமூக நீதிக்காக போராடிய கட்சி சமூகநீதிக் காவலர் கருணாநிதி தான், ஆனால் சட்டசபையில் ஆமாம் நான் பாப்பாத்தி தான் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் தந்தீர்கள் இது நியாயமா இதற்கு நீங்கள் மன்னிப்பு கேளுங்கள் என்று ஏன் கேட்கவில்லை.

சமஸ்கிருதம் பற்றி விமர்சனம் செய்யும் . ராசா… திருமதி துர்கா ஸ்டாலின் நான் தினமும் மாலையில் பூஜை அறையில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வேன் என்று ஒரு யூடியூப் சேனலில் தனது பூஜை புனஸ்காரம் பற்றி பெருமையாக சொல்லும் போது குறிப்பிட்டார். விஷ்ணு சஹஸ்ரநாமம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது இதுபற்றி என்றாவது துர்கா ஸ்டாலின்டம் . ராசா கேட்டு இருப்பாரா அது பற்றிப் பேசி தான் இருப்பாரா..?! காரணம் தனிமனித சுதந்திரம் என்பார் விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று சட்டசபையில் கேட்ட போது வாழ்த்து சொல்வது என்பது முதல்வரின் தனிப்பட்ட விருப்பம் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அதே தனிப்பட்ட விருப்பம் கோயிலுக்குப் போகும் ஒருவருக்கு சமஸ்கிருதத்தில் மந்திரங்களை சொல்லி திருமணம் நடத்தும் விருப்பம் போல, சட்டசபையில் பாரதிய ஜனதா உறுப்பினர் ஒருவர் முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்மஸுக்கு, ரம்ஜான் மற்றும் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்கிறார், ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது இல்லை ஏன் என்று கேட்ட போது அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு முதல்வர் யாருக்கு வாழ்த்து சொல்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றார் அதே தனிப்பட்ட விருப்பத்துடன் ஒருவர் திருமணத்தில் மந்திரம் சொல்வதை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தது எந்த வகையில் சரி திமுகவில் தனிப்பட்ட சுதந்திரம் என்பதற்கான அளவுகோல் தான் என்ன.

ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையில் கடவுள் இல்லை கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்ற வாசகம் இருக்கிறது. ஆனால் ஸ்ரீ ரங்கநாதரை தரிசிக்க திருப்பதியும் மிஞ்சும் அளவுக்கு ஸ்ரீரங்கத்தில் கூட்டம் அலை மோதுகிறது அறநிலைத்துறை இதை சாக்காக வைத்து வருமானம் பார்ப்பதற்காக விசேஷ தரிசனம் 200, 500 என்று கட்டணம் வசூலித்து பணம் பார்க்கிறது. அங்கிருக்கும் பெரியார் சிலை பரிதாபத்தின் அடையாளம் அவ்வளவுதான்.

20220816181753529.jpg

2019 தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்து கோயில்களுக்கு திமுக ஆட்சியில் அறநிலைத்துறை செய்த அறப்பணி என்று ஒரு தொடரை முரசொலியில் எழுதினார்கள். அதில் பெரியார் வழி திமுக எத்தனை கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தது… திருவாரூர் தேரை ஓட வைத்தது… இப்படி பல சாதனைகளை பட்டியலிட்டு அந்தத் தொடர் வெளிவந்தது அதைப் புத்தகமாக வெளியிட்டு தேர்தல் நேரத்தில் எல்லோருக்கும் வழங்கி இந்து வாக்கு வங்கியை கவர முயற்சி செய்தார்கள் திமுகவினர். அப்போது .ராசா என்ன செய்து கொண்டிருந்தார் அல்லது வீரமணி தான் அதை கண்டித்து அறிக்கை வெளியிட்டாரா எதுவுமே நடக்கவில்லையே

. ராசா இதுவரை எப்போதும் ரிசர்வு தொகுதியில் தான் போட்டியிடுகிறார் ரிசர்வ் தொகுதி என்பது இந்து பட்டியல் இனத்துக்கு மட்டும் தான் அப்படியென்றால் வேட்புமனுவில் நிச்சயமாக .ராசா இந்து என்று தான் குறிப்பிட்டிருப்பார். அவரது மனைவி இறந்து கிறிஸ்தவ முறையில் இறுதிச்சடங்கு நடந்தது, அது அவரது தனிப்பட்ட விருப்பம் அதில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை. திருமாவளவன் கூட ஒரு பேட்டியில் நான் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவன் என்று குறிப்பிட்டார். அவரும் தனித் தொகுதியில் போட்டியிட்டார் வேட்புமனு நிச்சயம். இந்து தான் குறிப்பிட்டிருப்பார் இல்லையென்றால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு இருக்கும்.

இப்போது திமுகவில் இந்து எதிர்ப்பு பிரச்சாரம் என்பது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் செய்யப்படுவது என்பது தான் உண்மை திமுக பலமுறை வெளிப்படையாக சொல்லியிருக்கிறது. அதேசமயம் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி திராவிடர் கழகம் போல ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு சமுதாய இயக்கம் தான் என்று குறிப்பிட்டார் கருணாநிதி. எப்படி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எங்கள் இயக்கத்தோடு ஒப்பிட முடியும் என்று கருணாநிதியை சாடி விடுதலையில் தொடர் கட்டுரை எழுதியவர் தான் வீரமணி, ஆனால் கருணாநிதி அதை கண்டுகொள்ளவே இல்லை.

பாரதிய ஜனதாவுடன் திமுக ஆட்சியில் பங்கு பெற்றது பகுத்தறிவு திமுக தேர்தல் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் சேர்ந்து விட்டார்கள் என்பதற்காக பாரதிய ஜனதா ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் தங்கள் தொடர்பை துண்டித்துக் கொள்ளவில்லை. இந்துத்துவா கொள்கையை கைவிடவில்லை ராமர் கோயில் பற்றி பேசாமல் இருந்ததில்லை இதுதான் பாரதிய ஜனதா. இரண்டு முறை திமுக ஆட்சியைக் கவிழ்த்தது காங்கிரஸ். திமுக அரசை டிஸ்மிஸ் செய்தால் எங்கள் ஆதரவு உங்களுக்கு என்று ஜெயலலிதா நிபந்தனை விதித்த போது வாஜ்பாயை அதை ஏற்றுக் கொள்ளவில்லை இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாஜ்பாய்க்கு எதிராக அதிமுக வாக்களித்தது ஒரு ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார் வாஜ்பாய். திமுகவுக்காக தனது ஆட்சியை இழந்தது பாரதிய ஜனதா.

ஒருமுறை நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரையில் நாத்திகன் தான் கொண்ட கொள்கையில் தெளிவாக இருக்கிறான். ஆத்திகன் தான் தடுமாறுகிறான் நாத்திகன் கடவுள் இல்லை என்பதை உறுதியாக சொல்கிறான் ஆனால் ஆத்திகனால் கடவுள் இருக்கிறார் என்பதை ஒழுங்காக விளக்கம் சொல்லமுடியவில்லை என்று நாவலர் நெடுஞ்செழியன் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் கட்டுரை ஒன்றை கண்ணதாசன் எழுதினார். இல்லை என்று சொல்பவருக்கு எந்த புத்தியும் தேவையில்லை எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்ல முட்டாள்களால் கூட முடியும் என்று சொல்பவர்கள் அதை நிலை நாட்ட போதுமான அறிவு தேவைப்படும். பாத்திரம் செய்ய பல நாள் வேலை பாத்திரம் உடைக்க ஒரு நிமிடம் வேலை. நாத்திகர் எப்போதும் தெளிவாகத்தான் இருப்பான் எதைக் கேட்டாலும் இல்லை இல்லை என்று மட்டும் தான் சொல்ல வேண்டும். நன்றாக தலையாட்ட தெரிந்த கோயில் மாட்டை விடவா அவன் உயர்ந்தவன், ஆனால் ஆத்திகன் விபூதிக்கு ஒரு விளக்கம் குங்குமத்திற்கு ஒரு காரணம் திரு மண்ணுக்கு ஒரு காரணம் என்று சொல்லவேண்டும் சொல்வது மட்டுமல்ல எதிரியை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் அதற்கு தகுந்த பக்குவம் தேவை நாத்திகன் எல்லாமே இயற்கையாக நடக்கின்றன என்று சொல்ல தெரிகிறது. ஆனால் அந்த இயற்கை என்னவென்று சொல்ல தெரியவில்லை கடவுளே இல்லை என்று வாதிடும் எவனும் எனக்கு மரணமில்லை என்று வாதிட முடியவில்லை மரணம் என்று உணரும் போது தான் சிலருக்கு பக்குவம் வருகிறது என்று அந்த பதிலில் குறிப்பிட்டு இருந்தார் கண்ணதாசன்.

20220816181938691.jpg

அது உண்மைதான் கருணாநிதி கூட தனது கடைசி காலத்தில் தான் ராமானுஜர் பற்றி தொலைக்காட்சியில் தொடர் எழுதினார். மதத்தில் புரட்சி செய்த மகான் என்று ராமானுஜரை குறிப்பிட்டார் கருணாநிதி. அப்போது வீரமணி அல்லது .ராசா பெரியார் பற்றி ஒரு தொடர் எழுதி டிவியில் ஒளிபரப்புங்கள் என்று கேட்கவில்லை இன்று வரை அவர்களுக்கு நாத்திகம் பற்றிய எந்தத்தெளிவும் இல்லை என்பதுதான் உண்மை அவர்களுக்கு தெரிந்தது வெறும் இல்லை என்பது மட்டும்தான் ஆனால் அதுதான் உண்மை.