இந்த பாகத்தில் பல சுவாரசியமான நிகழ்வுகளையும் மனிதர்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் கல்கி மனிதர்களும் சம்பவங்களும் மட்டுமல்ல இயற்கையும் சுவாரஸ்யமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறார்.
கோடியக்கரையின் எழில் கொஞ்சும் கடற்கரை அங்கே தனியே குடி கொண்டுள்ள சுந்தரர் பாடிய குழகர் கோவில் இவற்றின் அமைதியான அழகு மட்டுமல்லாது கந்தகம் கலந்த சதுப்பு நிலங்களில் இருந்து வெளிவரும் வாயு நெருப்பு பிழம்பு போல தோற்றம் தருவது ஆகிய பூகோள அதிசயங்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் விவரித்துள்ளார். இலங்கையின் நகரமாகிய மாதோட்டம் அனுராதபுரம் தம்பள்ளை இவற்றின் வர்ணனையை படிப்பவர்கள் இந்த இடங்களை வாழ்நாளில் ஒரு தடவையாவது சென்று காண வேண்டும் என்ற ஆவலை தூண்டக்கூடியது உறுதி.
நடு நடுவே இலங்கையின் சரித்திர கதைகள் அங்கு நடைபெறும் விழாக்களின் வர்ணனைகள் திருவிழா பற்றிய குறிப்பு நம் கண் முன்னே அந்த விழாவை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும் அது மட்டுமல்லாது அவ்விழாவுடன் தமிழ்நாட்டுக்கு உண்டான தொடர்பு இவற்றையும் எடுத்துச் சொல்கிறார்
குகையில் வரையப்பட்ட சித்திரங்களின் அழகை சொல்லும் அதே நடையில் கடலில் ஏற்படும் சுழற்காற்றையும், சூறாவளியையும் விவரிக்கிறார்பூகோளம் பிடிக்காதவர்கள் கூட இந்த பாகத்தைப் படித்தால் பூகோளத்தையும் இந்த பூமியையும் இயற்கையையும் நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள் இது உறுதி.
இனி உமாவின் பொன்னியின் செல்வன் 2ம் பாகம்.... இங்கே....
Leave a comment
Upload