துபாயில் வரவிருக்கும் நிலவு வடிவிலான நவீன சொகுசு ரிசார்ட்!
நிலவில் சென்று காலடி வைத்தவர்கள் ஒரு சிலரே… ஆனால், 'நிலவில் என்றாவது ஒருநாள் கால் வைக்க மாட்டோமா?' என பல நாட்கள் ஏங்குபவர்கள் உலகெங்கும் பலர் உள்ளனர். துபாய் நகரில் வசிக்கும் 7 லட்சம் மக்களின் கனவை நனவாக்கும் வகையில், விரைவில் நவீன சொகுசு வசதிகளுடன் கூடிய பிரமாண்ட வட்ட வடிவிலான ரிசார்ட்டை, கனடாவின் பிரபல கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவனமான மூன் வேர்ல்டு ரிசார்ட் நிறுவனம் அமைக்கவிருக்கிறது.
இந்த நிலவு வடிவ ரிசார்ட் மற்றும் பல்வேறு பிரமாண்ட நவீன கட்டிடங்களின் வரவு மூலம் வருடந்தோறும் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை மூலம் அன்னிய செலாவணி அதிகரிக்கும் . நவீன நிலவு ரிசார்ட்டுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு துபாய் அரசு தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
துபாய் நகரில் 10 ஏக்கர் பரப்பளவில், 735 அடி உயரத்தில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் (இந்திய ரூபாயில் ₹39,838 கோடி!) இன்னும் 4 ஆண்டுகளில் நிலவு கோள் வடிவிலான நவீன சொகுசு ரிசார்ட் கட்டி முடிக்கப்படும். கட்டிட சுவர்களில் கண்ணாடிகள் பொருத்தப்படுவதால், இரவு நேரங்களில் எந்நாளும் நிலவு போல் ஜொலிக்கும்! இதனால் வருடத்துக்கு 25 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருவர் இந்த நிலவு வடிவிலான ரிசார்ட்டின் உச்சியில் 300 தனியார் ஸ்கை வில்லால் அமைக்கப்படும்.
இதற்காக எங்கள் நிறுவனம் சார்பில் அடுத்த ஆண்டு சர்வதேச அளவில் நிலவு கோள் வடிவிலான ரிசார்ட் லைசென்ஸ் பெறுவதற்காக, துபாய் உள்பட மேற்கண்ட நாடுகளில் ரோடு ஷோ நடத்துவதற்கு திட்டமிட்டு வருகிறோம். துபாய் நகரில் குறிப்பிட்ட இடத்தில் நிலவு வடிவிலான ரிசார்ட்டுக்கு லைசென்ஸ் கிடைத்ததும் கட்டுமானப் பணிகள் துவங்கி நடைபெறும். ஒரு வருடம் முன்களப் பணிகள் முடிந்ததும், 4 வருடங்களில் நிலவு வடிவ நவீன சொகுசு ரிசார்ட் கட்டிடப் பணிகள் முடிந்து, வரும் 2027-ம் ஆண்டு துபாய் நகரில் நிலவு வடிவ நவீன சொகுசு ரிசார்ட் வெளிச்சம் மக்களின் மனதில் இடம்பிடித்து விடும் என மூன் வேர்ல்டு ரிசார்ட் நிறுவன இணை நிறுவனர் மைக்கேல் ஆர்.ஹென்டர்சன் தெரிவித்தார்.
Leave a comment
Upload