தொடர்கள்
மருத்துவம்
அதிரிகரிக்கும் ஃப்ளு காய்ச்சல் -வேங்கடகிருஷ்ணன்

20220817082657722.jpg

கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி இருக்கும் நேரத்தில் குறிப்பாக குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் கேரளாவில் இது வேகமாக பரவி வரும் நேரத்தில் சென்னையில் இதன் தாக்கம் துவங்கியிருக்கிறது. இது காய்ச்சல் காலம் என்ற எடுத்துக் கொண்டாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
நமது தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களின் கூற்றுப்படி கடந்த வியாழக்கிழமை வரை 282 H1N1 பாதிப்பு மற்றும் 243 டெங்கு சில பாதிப்பு அது தவிர மற்ற வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஃப்ளூவையும் சேர்த்து இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
இது கடந்த காலங்களை கணக்கில் கொண்டு பார்க்கும் போது அபாய அளவு இல்லை என்று அவர் சொன்னாலும். மருத்துவ மனைகளில் குறிப்பாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்த மருத்துவமனை 837 படுக்கைகள் கொண்டது. தமிழகம் முழுவதிலிருந்தும் குழந்தைகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். புதன்கிழமை வரை 129 குழந்தைகள் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களில் 18 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது.‌யாருக்கும் H1N1 இல்லை.
கடந்த வருடங்களில் கோவிட் பெருந்தொற்றினால் நாம் கடைபிடித்த முக கவசம், கைகளை கழுவுவதல், சுத்தமாக இருத்தல் ஆகியவற்றால் இதன் தாக்கம் அதிக அளவு இல்லை. இப்போது மக்கள் யாரும் அதனை கடைபிடிப்பதில்லை. அதனால் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கிறது. மக்கள் முக கவசம் அணிவதையும், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுவதையும் தொடர்ந்தால் இது மேலும் அதிகரிக்காமலும், பரவாமலும் தடுக்க முடியும் என்று குழந்தைகள் நல மருத்துவமனை தலைமை மருத்துவர் சீனிவாசன் தெரிவித்தார்.

எல்லா அரசினர் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கான மருத்துவ சிகிச்சை முறை காண விதிமுறைகள் அரசினால் வெளியிடப்பட்டு கடைபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது அதே நேரம் அரசு கடைகளுக்கு மருத்துவ சீட்டு இல்லாமல் சுரத்திற்கான மருந்துகள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தலும் செய்யப்பட்டு இருக்கிறது அதிகாரப்பூர்வமாக இறப்புகள் எண்ணிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இறப்புகள் இருக்கின்றன என்பது நிச்சயமான உண்மையாகும் மக்கள் தொடர்ந்து பொது இடங்களுக்கு செல்லும்போது கூட்டமான இடங்களில் இருக்கும் போதும், முகக்கவசம் அணிவதை தொடர வேண்டும். வெளியில் போய்விட்டு வந்த பிறகு கை கால்களை கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தமாக கழுவுதலும் தொடர வேண்டும். இது மட்டுமே தற்போதைய பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.