தொடர்கள்
அரசியல்
எடப்பாடி தடாலடி-ஜாசன்

20220817150938533.jpg

வடபழனியில் அதிமுகவின் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

திமுக எம்பி ஆ.ராசா இந்துக்கள் குறித்து அருவருப்பான வார்த்தைகளை சொல்லி இருக்கிறார் அவர் கூறிய கருத்து திருச்செந்தூரில் யாகம் நடத்திய முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரிசனுக்கும் பொருந்துமா என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி.

கூடவே முதல்வரையும் அவர் விட்டு வைக்கவில்லை அவரையும் ஒரு பிடி பிடித்தார். அந்த கூட்டத்தில் பேசும்போது எடப்பாடி திமுக பொறுப்பேற்ற முதல் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. இந்த ஆட்சியில் கமிஷன் கலெக்சன் கரப்ஷன் அமோகமாக நடக்கிறது. 15 மாத சர்வாதிகார ஆட்சியில் தமிழக மக்களுக்கு துளிகூட நன்மை இல்லை. தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது 4 முதல் அமைச்சர்கள் உள்ளனர். ஸ்டாலின் குடும்பம் அதிகார மையமாக திகழ்கிறது முதல்வர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக இருக்கிறார்.திமுக குடும்ப ஆட்சியில் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை மக்கள் பிரச்சனையை திமுக கவனம் செலுத்தவில்லை மக்களுக்கு கிடைத்த முதல் போனஸ் சொத்து வரி உயர்வு திராவிட மாடல் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது. திமுக ஆட்சி கூரை வீட்டுக்கும் வரி போட்டு துன்புறுத்துகிறது திமுக ஆட்சி 500 யூனிட் பயன்படுத்துவோர் இனிமேல் 55% மின் கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும். தமிழகத்தின் நிதி சுமையை ஏழை மக்கள் தலையில் சுமத்தி இருக்கிறார் ஸ்டாலின். சர்வாதிகாரி ஸ்டாலின் வசூல் மன்னனாக இருக்கிறார் தமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல் இப்படி திமுக அரசை விளாசித் தள்ளினார் அந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி.