தொடர்கள்
தொடர்கள்
வாசகர் மெயில்

20220705185624441.jpeg

Heading : முடங்கிய தொழில் நகரம் ! திருப்பூர். ஒரு பரிதாப ரிப்போர்ட். நமது நிருபர்.

Comment : கிட்டத்தட்ட உண்மையே..... கண்ணுக்கு தெரிந்த நூல் விலை ஏற்றம், கண்ணுக்கு தெரியாத மற்ற பல விலை ஏற்றங்கள் ( டையிங், பிரிண்டிங், காம்பேக்டிங், washing, trims, cartons ) இப்படி பல பிரச்சினைகளால் முடங்கி கிடக்கும் நம் திருப்பூரில் இந்த தீபாவளி முடிந்த பிறகு தற்போது இருக்கும் இருக்கின்ற கம்பெனிகளில் 10% மூடி விடுவார்கள் எனும் பரிதாப நிலைமையில் தான் உள்ளோம்.

Gopi, TIRUPPUR

பொன்னியின் செல்வன் - சில நினைவலைகள் - இந்துமதி கணேஷ்.

Comment : உங்களைப் போல் நாங்களும் மிக மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம்.நன்றாகவே இருக்கும்.

R. Chandra Ramakrishna , Chennai.

Heading : வலையங்கம்

Comment : இந்த முறை வளரட்டும்!பெருகட்டும்!! பார்க்கவன்

Heading : ராசாவின் ராங் ரூட்- விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Comment : இந்த சந்தர்ப்பவாதங்களையும் அவர்களுடைய கூட்டங்கள் கேட்டு கைய தட்டும், தங்களைத்தான் முட்டாளாக பாவிக்கிறார்கள்,அந்த பேச்சாளர்கள் என்பதை புரிந்து கொள்ளாமல் / புரிந்து கொள்ள இயலாத நிலையில்(!). இருக்கிற இனிய தங்க தமிழக மக்களே!

Heading : நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் கதி ?? மாலா ஶ்ரீ

Comment : அந்த காலத்துல (1970-1990) கிழக்கு ஜெர்மனிய, ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்ற பலருக்கு இந்தியாவுல மருத்துவ சேவை செய்ய அனுமதிக்கவில்லை. இதை அந்த பெற்றோர்கள் மாணவர்கள் அறிந்திராதவர்களா ?

Heading : நீயும் நானும் -மரியா சிவானந்தம்

Comment : அந்த நிகழ்ச்சி பார்த்தவர்களின் மனதை தொட்டு ,சிந்திக்க தூண்டியது என்கிற வரை, மிக மிக போற்ற தகுந்த ஓன்று! அந்த வகையில் இந்த நிகழ்ச்சிக்காக வாழ்த்துகள் பவ ! பார்கவன்

Heading : ராசாவின் ராங் ரூட்- விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Comment : திராவிட கட்சிகளின் தகிடுதத்தம், பாவம், ஏனோ எதற்கோ அவற்றை பின்பற்றும் வாங்கப்பட்ட தமிழ்மக்களை தடுமாற்றி தரம் மாற்றி தடம் மாற்றி ... மொத்தத்தில் தற்போதைய அவர்களின் நிலை, அதிலும் பாஜக ஊன்ற ஆரம்பித்ததிலிருந்து... சற்றே நிலை உணரச்செய்திருக்கிறது

Heading : பொன்னியின் செல்வன் - சில நினைவலைகள் - இந்துமதி கணேஷ்.

Comment : ஆனால் உலாவரும் சனங்களின் விமரிசனங்கள் வரப்போகும் படத்தை வரலாற்றை கருத்துச் சுதந்திரத்தில் அடிபட்டுப்போகும் என்ற மாதிரியல்லவா சொல்கின்றன

Heading : கண்பதி பப்பா மோரியா - கோலாகலமும் பிரியாவிடையும் மும்பையிலிருந்து பால்கி

Comment : கணபதி பப்பா மோர்யா கணேசனின் பிரியா விடை (விஜர்சனம,) ரொம்ப அற்புதம்.எத்தனை கணேசர் கள். Wonderful.கண்ணுக்கு விருந்து. நாமும் கணேசேரை பிரியா மனமில்லாமல் பிரியாவிடை கொடுக்கிறோம். புகைப்படங்களுடன் கணேசனின் மனதைக்கவரும் வகையில் Fantastic.பதிவுக்கு பால்கனிக்கு நன்றி. வணக்கம்.

Chandra Ramakrishna., Chennai.

Heading : வலையங்கம்

Comment : நீதியரசர் ஜெகதீஷ் சந்திராவின் இந்த தீர்ப்பு நிச்சயம் அந்த குற்றவாளி இனிமேல் குடிப்பதைப் பற்றிய யோசனை அவருக்கு நிச்சயம் வராது. காரணம், அவரே விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கி மக்களுக்கு அறிவுரை சொல்லும் இடத்துக்கு நீதியரசர் அவரை நிறுத்தி இருக்கிறார். எனவே மீண்டும் அவரை அந்த தவறு செய்ய, அவரது மனசாட்சி இடம் கொடுக்காது என்ற வரிகள் நிஜம். பாராட்டுகள்.

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

Heading : பட்டாம் பூச்சி பேசுது - 24 என்.குமார்

Comment : என்.குமாரின் பட்டாம்பூச்சி பேசுது ஆடியோவில் வரும் வார்த்தை வரிகள், அதன் அர்த்தத்தில் பொதிந்து கிடக்கும் மகிழ்ச்சி எங்களின் மனதில் ரீங்காரமிட்டபடி உள்ளன. தொடரட்டும் அவரது சொன்னால் கவிதைகள்!

சவுந்தர்யா பாலசந்தர், மயிலாடுதுறை

Heading : ராசாவின் ராங் ரூட்- விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Comment : நாத்திகம் பற்றிய எந்தத் தெளிவும் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களுக்கு தெரிந்தது, வெறும் இல்லை என்பது மட்டும்தான். ஆனால் அதுதான் உண்மை. ஆ.ராசாவும் கி.வீரமணியும் சுயநலவாதிகள். கழுதைக்கு அரிப்பு ஏற்பட்டால் குட்டி சுவரில் முதுகை தேய்த்து கொள்வது போல் இந்துக்களை தூற்றுவார்கள். இந்து கடவுளை விழுந்து வணங்குவார்கள். அது, அவர்களின் தனிமனித உரிமை என்பார்கள். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் தமிழ்நாட்டிலே! வெளியூரில் விலை போகாத பச்சோந்திகள்!

சிவகாமி மைந்தன், ஆல்பர்ட், நாகர்கோவில்

Heading : முடங்கிய தொழில் நகரம் ! திருப்பூர். ஒரு பரிதாப ரிப்போர்ட். நமது நிருபர்.

Comment : திருப்பூர் மீண்டும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் புத்துணர்ச்சி பெற்று, அனைத்து மக்களும் வளமாக வாழ, திராவிடர்களின் நடமாடும் கடவுளாக திகழும் தமிழக முதல்வர் அருள் செய்யட்டும்.

பரந்தாமன், கார்த்திக், சங்கரன்கோவில்

Heading : நீயும் நானும் -மரியா சிவானந்தம்

Comment : 'நீயா நானா என்று வாழ்வதில்லை வாழ்க்கை. நீயும் நானும் என்று கை கோர்த்து செல்வதே இயற்கை! மற்றபடி எதையும் சரி என்றோ, தவறு என்றோ நீதி, தீர்ப்பு சொல்ல இங்கு நாம் யார்?' என்பதை பங்கேற்பவர்கள் யோசிக்க வேண்டும். பப்ளிசிட்டி பைத்தியங்கள் இருக்கும்வரை, மற்றவர்கள் வார்த்தை விளையாடலில் பணம் பார்க்க நினைப்பதில் தவறில்லையே!

ஆதர்ஷ், கோமளவல்லி, திருப்பெருந்துறை

Heading : எடப்பாடி தடாலடி-ஜாசன்

Comment : 'உள்கட்சி பூசல், இரட்டை தலைமை, ஓபிஎஸ்சின் எகிறலையே தாக்கு பிடிக்காமல், அதிமுகவை ஒருங்கிணைத்து செயல்பட முடியாத இபிஎஸ், தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் செயல்பாடுகளை பேச என்ன தகுதி இருக்கு? தேசத் துரோகி' என ஆ.ராசா எகிறப் போகிறார்!

சண்முகம், தெய்வசிகாமணி, விழுப்புரம்

Heading : கண்பதி பப்பா மோரியா - கோலாகலமும் பிரியாவிடையும் மும்பையிலிருந்து பால்கி

Comment : பால்கியின் கண்பதி பப்பா மோரியா, புட்ச்(சி)யா வர்ஷி லௌகர் யா - கோலாகலமும் பிரியாவிடையும் கட்டுரை சூப்பர்ப்! நானே நேரில் பார்த்து ரசித்தேன், கணவரின் நண்பர் குடும்பத்தின் உதவியால். மிகச் சிறப்பு.

ரேணுகா ஹரி, மும்பை

Heading : பொன்னியின் செல்வன் - மீண்டும் - பாகம் 2 உமா

Comment : உமாவின் பொன்னியின் செல்வன் பாகம்-2 கல்கியின் முழு தொடரையும் அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டியது. அதற்கான படங்களும் மிகச் சிறப்பு. வரைந்தது ம.செ-வா?!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை

Heading : நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் கதி ?? மாலா ஶ்ரீ

Comment : உக்ரைன் பல்கலைக்கழகங்களில் படித்த மருத்துவ மாணவர்களின் வாழ்க்கையை இப்படி சுற்றலில் விட்டது பெற்றோர்கள் தான் என்று சொல்லலாம். மருத்துவப் படிப்பு மேல் அவர்களுக்குள் இருக்கும் பேராசை. இனியாவது திருந்துவார்களா?

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை

Heading : பொன்னியின் செல்வன் - சில நினைவலைகள் - இந்துமதி கணேஷ்.

Comment : நாவலில் பொன்னியின் செல்வன் நம் மனத்தில் வேரூன்றி நின்றதை போல, மணிரத்னத்தின் திரைப்படத்திலும் நிலைத்து நிற்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

ஜமுனா பிரபாகரன், அண்ணாநகர்

Heading : சர்க்கஸ் - சத்யபாமா ஒப்பிலி

Comment : 'சில சமயம் ஒரு குழந்தைக்கு உள்ள உணர்வு திறன், நமக்கு இல்லாமல்தான் போகிறது. இன்றைய தலைப்பு செய்திக்கு காரணம் குழந்தைகள்தான். அவர்களை பத்திரமா பாத்துக்க வேண்டும். நம் எதிர்காலம் அவர்கள்' என்ற சத்யபாமா ஒப்பிலியின் சர்க்கஸ் கதை வரிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கலா கார்த்திக், அரும்பாக்கம்

Heading : கடல் மனம் –என்.குமார்

Comment : என்.குமாரின் கடல் மனம் கவிதை வரிகள், ஆழ்கடலின் அமைதி போல், அடக்கமாக 4 வரிகளில் மிளிர்கிறது. தொடரட்டும் அவரது குறுங்கவிதை!

கௌஷிக், தீட்சிதா, பெங்களூரு

Heading : தொலைக்காட்சி கொத்தடிமைகள்- எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

Comment : நிலா டிவி, அஜய் டிவி நிகழ்ச்சிகள், அதில் வரும் 2 நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் அலம்பல்களை ஆர்னிகா நாசர் தொலைக்காட்சி கொத்தடிமைகள் கதை பிரித்து மேய்ந்தது மிகப்பெரிய அப்ளாஸ்!

தனசேகரன், குமாரதேவன், செஞ்சி கோட்டை

Heading : நிலவு வடிவிலான நவீன சொகுசு ரிசார்ட்! - மாலா ஸ்ரீ

Comment : துபாய் நகரில் 4 வருடங்களில் நிலவு வடிவ நவீன சொகுசு ரிசார்ட் கட்டிடப் பணிகள் முடிந்து, வரும் 2027-ம் ஆண்டு துபாய் நகரில் அதன் வெளிச்சம் மக்களின் மனதில் இடம்பிடித்து விடும் என்ற வரிகள், அதை கண்ணார ரசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.

சுமதி ஆனந்த், பெருங்குடி

Heading : கருத்து கதிர்வேலன்

Comment : செம காமடி...

Heading : தேன்தமிழ் துளிகள் -10-மரியா சிவானந்தம்

Comment : எளிய நடையுரை.... வாழ்த்துக்கள்

Heading : விறன்மிண்ட நாயனார்-ஆரூர் சுந்தரசேகர்.

Comment : அருமை.. திருச்சிற்றம்பலம் ஆருராரே