தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

2022082409104534.jpg

மோடியின் துணிச்சல்

உக்ரேன் ரஷ்யா போர் ஆரம்ப கட்டத்திலேயே இதனால் உலக அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்று இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்தனர். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியது, ஆனால் இந்தியா வாங்கியது இந்தியாவுக்கு ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கியது. அந்த வர்த்தகம் ரூபாய் மதிப்பில் நடந்தது இதனால் இந்தியாவுக்கு 35ஆயிரம் கோடி லாபம் நிதியமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.

ஒரு பக்கம் ரஷ்யாவை போரை நிறுத்தச் சொல்லி வற்புறுத்திய அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களையும் சப்ளை செய்தது. இந்தியா ரஷ்யா உக்ரேன் போர் விஷயத்தில் ஆரம்பத்தில் நடுநிலை வகித்தது ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கூட யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது. இப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு கோரிக்கையுடன் ஐநா கவுன்சில் கூட்டத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்தது இவை எல்லாமே இந்தியா திட்டமிட்டு செய்ததுதான்.

உஸ்பெகிஸ்தானில் நடந்த ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் அருகில் இருந்தாலும் அதுபற்றி கவலைப்படாமல் பிரதமர் மோடி ரஷ்ய அதிபருக்கு போருக்கான காலம் இதுவல்ல என்று அறிவுரை வழங்கினார். ஏற்கனவே ரஷ்ய அதிபர் தொலைபேசியில் பேசும்போது அப்போதும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தினார் மோடி. இப்போது நேருக்கு நேர் இதை துணிச்சலுடன் சொல்லி இருக்கிறார் மோடி. அதே கூட்டத்தில் ரஷ்ய அதிபர் பேசும்போது உக்ரேன் விஷயத்தில் இந்தியாவின் கவலையை நான் கவனத்தில் கொள்வேன் விரைவில் போரை நிறுத்த நான் நடவடிக்கை மேற்கொள்வேன் என்றும் சொன்னார்.

அமெரிக்கப் பத்திரிகைகள் மோடியின் துணிச்சலை பாராட்டி கட்டுரைகள் வெளியிட்டது அமெரிக்க அதிபர் மாளிகையும் மோடியின் இந்த கருத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டது பிரிட்டன் அரசு மோடியின் அறிவுரைப்படி நடந்து கொள்ளுங்கள் என்று ரஷ்யாவுக்கு ஆலோசனை சொன்னது

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மோடி ஆட்சியில் இதுவரை வெளிப்படையாகத் தான் இருந்திருக்கிறது அதில் எந்த கள்ளத்தனமா மறைமுக திட்டமோ எதுவும் இல்லை ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதை விமர்சித்த போது கூட இரண்டு எண்ணெய் நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம் அது என்றுதான் சொன்னது வெளியுறவுத்துறை அமைச்சகம்.

போருக்கான காலம் அல்ல என்று மோடி சொன்னது ரஷ்யாவுக்கும் மட்டுமல்ல போருக்கு ஆசைப்படும் மற்ற நாடுகளுக்கும் சேர்ந்துதான் என்பதை அந்த மற்ற நாடுகளும் உணர்ந்து தான் இருக்கிறது.