மக்கள் பார்வையில் கம்பர்
அனைவருக்கும் அன்பு வணக்கம்.
பாலகாண்டம்
நாட்டுப்படலத்தின் பாடல்
கூற்றம் இல்லை ஓர் குற்றம் இல்லாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தனையின் செம்மையால்
ஆற்றல் நல்அறம் அல்லது இல்லாமையால்
ஏற்றம் அல்லது இழித் தகவு இல்லையே
கோசல நாட்டு மக்களிடம் குற்றம்
இல்லாததால் கூற்றுவன் அதாவது
எமனின் கொடுமை இல்லை
மரணமே இல்லை என்று கம்பர்
கூறவில்லை
இயற்கை மரணமின்றி குற்றங்களால்
வரும் சண்டை சச்சரவுகளால்
துர்மரணம் அகால மரணமில்லை
என்கிறார் கம்பர்
குற்றம் இன்மையால் மனத்தூய்மை
அடைகிறது
அதனால் மக்களிடம் கோபம் இல்லை
இதனால் நற்சிந்தனை தோன்றி
நல் அறம் தழைப்பதால் தீய
செயல்கள் இல்லை
குற்றமற்ற வாழ்வு வளமானது
நலமானது அமைதி தர வல்லது
என்ற அறநெறியை நீதியை
சாதாரண பாமர மக்களுக்கும்
எளிதில் புரியும்படி மிக எளிமையாக
காட்சிப் படுத்திய கம்பரின்
சொல் நயம் குடி மக்கள்
மத்தியில் அற உணர்வைத் தூண்டி
நற் சிந்தனை மேலோங்க
வழி வகுக்கிறது
குற்றம் அழிவைத் தரும்
துன்பத்துக்குக் காரணம் குற்றம்
என உரைத்த கம்பரை
போற்றுவோம் பாராட்டுவோம்
மீண்டும் சந்தித்து சிந்திப்போம்
Leave a comment
Upload