தொடர்கள்
பொது
பழங்கள் காய்த்து தொங்கும் பழங்கால பலாமரம்! - மாலா ஸ்ரீ

2022901075242703.jpg

தெலுங்கானா மாநிலத்தின் மெகபூப் நகர் மாவட்டத்தில் சுமார் 8000 வருட பழமையான ஆலமரத்தைத்தான், ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலமரங்களில் ஒன்றாக முன்பெல்லாம்
இந்திய மக்கள் அதிசயித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான பலாமரத்தில் இன்றும் நூற்றுக்கணக்கான பலாப்பழம் காய்த்து தொங்கும் வீடியோ காட்சிகளை அபர்ணா கார்த்திகேயன் வெளியிட… அது, கடந்த சில நாட்களாக பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

'அது எங்கே?' எனக் கேட்கிறீர்களா? தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில்தான் அந்த அதிசய பலாமரம் உள்ளது. 'இதில் என்ன அதிசயம்?' என்கிறீர்களா? அதன் வயதுதான்! இந்த 200 வருட பழமையான பலாமரம், இன்றுவரை வேர், கனத்த தண்டு, கிளைகளில் நூற்றுக்கணக்கான பலாப்பழங்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பதுதான்!

பொதுவாகவே பலாப்பழங்கள் காலம் செல்ல செல்ல பெரிதாகிக் கொண்டே வருவது இயல்பு. அத்தகைய கனமான பழங்கள், இந்த பழமையான ராட்சத தண்டுடன் கூடிய பலாமரத்தில் ஏராளமான பழங்கள் காய்த்து தொங்குவதை மக்கள் அதிசயமாகப் பார்த்து வருகின்றனர்.

ஏனெனில், இந்த ராட்சத பலாமரத்தை சுற்றிப் பாரக்கவே 25 நொடிகளுக்கு மேலாகும். அதனால் இம்மரத்துக்கு 'ஆயிரம் காட்சி' என இந்திய மக்கள் பெயரிட்டு அழைக்கின்றனர்.

மரந்தான் மனிதன் மறந்தான் என்பது நல்ல வேளையாக இந்த மரத்துக்கு பொருந்தாது.