மனசு
ஓடிக்கொண்டிருக்கும்
புறநகர்த் தொடர்வண்டிக்குள்
ஒலித்த
பார்வையற்ற யாசகனின்
ஜீவிதமான குழலிசைக்கு
கிடைத்த
பெருங் கௌரவங்கள்
அவன்
கழுத்தில் தொங்கிய
தகரக் குவளைக்குள்
சில்லறைக் காசுகளாய்
உருமாறிக் கிடந்தன.
Leave a comment
Upload