தொடர்கள்
தொடர்கள்
நியூஸ் நியூஸ் நியூஸ் பொடியன்

அரசுக்கு அபராதம்

2022901072528335.jpg

தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. தமிழகத்தில் அரசு ஊழியர் சிலருக்கு பென்ஷன் வழங்குவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா.கிருஷ்ணமுராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில் இத்தகைய மனுவை அரசு தாக்கல் செய்திருக்க கூடாது. ஒரு பென்ஷன் விவகாரத்தில் நீதிமன்றம் வரை வந்த விஷயம் முடித்து வைத்து விட்டபிறகு சம்பந்தப்பட்டவர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என்று வாதிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே 5 லட்சம் ரூபாயை அபராதமாக நீங்கள் 4வாரத்தில் உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்று வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்கள் நீதிபதிகள்.

சீ இந்த டீச்சர் ரொம்ப மோசம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத் தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி கணிதப்பாடம் முதுநிலை ஆசிரியர் சாந்தி பிரியா இவர் பள்ளியில் பாடம் நடத்துவதை தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுவது தான் இவரது ஆசிரியர் பணி. மாணவி ஒருவரை வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்து தீண்டாமை வேலை இது போதாதென்று இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட சம்பந்தமாக பேசவேண்டும் என்று சொல்லி ஆரம்பித்து பாடத்தை தவிர மற்ற விஷயங்களை எல்லை மீறி பேசுவது வாடிக்கை. இதற்கு பயந்து மாணவிகள் செல்பேசி எடுக்காவிட்டால் மறுநாள் வகுப்பில் இரு உனக்கு பெயில் மார்க் போடுறேன் என்று மிரட்டுவது இது தவிர பெரும்பான்மை பள்ளி ஆசிரியர்களுடன் வம்பு சண்டை போட்டு பழிக்குப் பழி என்று பெருமையாக கரும்பலகையில் எழுதி வேறு வைப்பாராம். :மாணவிகளிடம் இரவு தூங்கும் போது தனது கணவரை நினைத்துக் கொண்டு தூங்க வேண்டும் என்று போதனை வேறு இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட மாணவியை மருமகளே என்று அழைப்பார் கூடவே தனது மகனுடன் இரவில் செல்பேசியில் பேச வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார். இந்த விஷயம் மாவட்ட கல்வித்துறை அதிகாரி வரை போக அதிகாரிகள் பள்ளிக்கு வந்து நேரில் விசாரித்து உண்மைதான் என்று தெரிந்ததும் அவரை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு போட்டது கல்வித்துறை பாவம் அந்த பள்ளி இந்த மாதிரி விஷயங்களுக்கு மாற்றல் தான் தண்டனையா வேறு தண்டனை கிடையாதா என்று கேட்கிறார்கள் பாவப்பட்ட மாணவிகள்

அவசர படேல்

2022901072814959.jpg

அதிமுக உட்கட்சி சண்டை மேல்முறையீடு கீழ் கோர்ட்டு மேல் கோர்ட்டு உச்சநீதிமன்றம் என்று தீர்ப்பு அப்பீல் மேல்முறையீடு என்று எடப்பாடி ஓபிஎஸ் தரப்பு பாவம் நீதி மன்றத்தை பாடாய்படுத்தி வருகிறது. இப்போது நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருக்கிறார். எடப்பாடி தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்து எங்களைக் கேட்டு முடிவு செய்யுங்கள் என்று மனு தந்திருக்கிறது. தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தசரா விடுமுறைக்கு பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் சொன்ன போது ஓபிஎஸ் தரப்பு துள்ளிக்குதித்து அச்சச்சோ அவங்க பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டாங்க என்று உடனே நீதிபதிகள் எடப்பாடி தரப்பு வழக்கறிஞரிடம் இப்போதைக்கு நீங்கள் தான் பொறுப்பில் இருக்கிறீர்கள் அப்புறம் எதற்கு அவசரம் பொதுச் செயலாளர் தேர்தல் எல்லாம் நடத்த கூடாது என்று தடைவிதித்து தசரா விடுமுறைக்கு பிறகு விசாரணை என்று தள்ளி வைத்தது இப்போதைக்கு எடப்பாடி இடைக்காலம் தான் என்கிறது ஓபிஎஸ் தரப்பு.

ஆர் எஸ் எஸ் ஆர் எஸ் எஸ் ஆர் எஸ் எஸ்

2022901073043937.jpg

தமிழ்நாட்டில் இப்போது அடிக்கடி அரசியல் தலைவர்கள் பேசும் வார்த்தைகள் பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் இந்த இரண்டு வார்த்தை தான். சமீபத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று திருமாவளவன் டிஜிபியிடம் மனு தந்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசும் போது ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தரக்கூடாது. அவர்கள் ஊர்வலத்தில் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லிக்கொண்டு போவார்கள் இதனால் சட்டம் ஒழுங்கு கெடும் என்றார். ஜெய் ஸ்ரீராம் என்பது கெட்ட வார்த்தையா அல்லது தடை செய்யப்பட்ட வார்த்தையா அதனால் எப்படி சட்டம் ஒழுங்கு கெடும் என்று யாரும் கேட்கவில்லை. ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்தது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோதும் அரசுத்தரப்பு அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றார்கள். அப்போது வேறு தேதியில் பேரணி நடத்த அனுமதி தருகிறீர்களா என்று கேட்க அதற்கு அரசு வழக்கறிஞர் தருகிறோம் என்று சொல்ல இதைத் தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த இந்த மாத இறுதிக்குள் அனுமதி தரவேண்டும் அப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆளாக நேரிடும் என்று சொல்லி இந்த வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்.