தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

2022081620010063.jpeg

யார் தலைவராக வந்தாலும் மையப்புள்ளியாக ராகுல் காந்தி தான் இருப்பார் திருநாவுக்கரசர் எம் பி.

அதாவது தலைவர் பதவி டம்மி பதவி என்கிறார் எம்பி.

தனியார் பஸ் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை போக்குவரத்துறை அமைச்சர்.

ஏன் அவங்க ஓசில அழைச்சிண்டு போறாங்களா

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது வைகோ கருத்து.

சமூக நீதி திராவிட மாடல் இதெல்லாம் இருக்கு இல்ல இது போதும்.

சேலம் பசுமை வழி சாலை அமைப்பது மத்திய அரசுப் பணி அமைச்சர் ஏ வா வேலு

அப்புறம் மத்திய அரசின் நிர்பந்தம் என்று மாற்றி பேச கூடாது அமைச்சரே

பங்கு சந்தை சரிவு எதிரொலி ஒரே நாளில் அதானிக்கு 29,480 கோடி இழப்பு

இந்த இழப்பை மத்திய அரசு எப்படி ஈடுகட்ட போறாங்கன்னு தெரியல

திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கியதே அதிமுக தான் எடப்பாடி

அடடா இதிலேயும் ஸ்டிக்கர் ஒட்டி விட்டார்களா

சட்டம் ஒழுங்கு சீர் குலைந்தால் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்படும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணன் இன்னும் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறார்.

ஆளுநர் செயல்பாட்டில் பாஜக ஆர்எஸ்எஸ் ராகுல் காந்தி

வரவர தலைவர் ஆர்எஸ்எஸ் பற்றி பேசி விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

டைம் இதழில் இளம் தொழிலதிபர்கள் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியர் ஆகாஷ் அம்பானி மட்டுமே

இதுவும் வாரிசு அரசியல் மாதிரிதான் போல இருக்கு

திக்கற்றர்களுகாக திமுக அரசு செயல்படுகிறது முதல்வர் ஸ்டாலின்

அதாவது கை காட்டுவதோடு வேலை முடிஞ்சது என்று சொல்றாரு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அறிவு ஜீவி தேவையில்லை கேரளா காங்கிரஸ்

உண்மையை தெளிவா சொல்றாங்க

தேசிய விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அரசியல் விளையாட்டு நினைச்சு வந்திருப்பார்.