வீடியோ எடிட்டிங் உதவி -மரியா.
பெங்களூரு ஒரு காலத்தில் கார்டன் சிட்டி என்று அழைக்கப்பட்டது ஒரு படி மேலே போய் பென்ஷனேர்ஸ் பாரடைஸ் என்றும் கூறப்பட்டது.
ஊட்டிக்கு அடுத்து குளு குளு நகரம் பெங்களூரு என்று தான் இருந்தது .
தற்போது பெங்களூரு செல்வதென்றாலே தலை சுற்றிவிடுகிறது காரணம் மிக பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி .வாகனங்கள் நகர்ந்து தான் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது ,கூட்ட நெரிசல் ,எங்கு பார்த்தாலும் குப்பை .

ஒரு காலத்தில் அழகிய நகரம் கான்க்ரீட் நகரமாக மாறிவிட்டது என்பது வருத்தமான விஷயம் . எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள் தான் . இதில் மெட்ரோ பாலங்களால் பல சாலைகளின் அழகு பறிபோய்விட்டது .
பழைய பெங்களூரை இன்னும் தக்கவைத்து கொண்டிருப்பது இந்த மாநகரில் உள்ள இரண்டு பூங்காக்களான கபன் பார்க் மற்றும் லால்பாக் கர்நாடக மாநில தோட்டக்கலை துறையினரால் பராமரிக்க பட்டுவருகிறது.
இரண்டு பூங்காக்களிலும் நிழல் தரும் மரங்கள் அடர்த்தியாக காட்சியளிப்பது இங்கு மட்டும் தான். சற்று காப்பாற்ற பட்டு வரும் பூங்காக்களுக்கே ஆபத்து வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள் உள்ளூர் இயற்கை ஆர்வலர்கள் .
240 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இயற்கை சூழலை அரவணனத்துக்கொண்டிருக்கும் லால்பாக் மட்டுமே பெங்களுருவில் உள்ள நிம்மதியான இடம் என்கின்றனர் .
கடந்த மாதம் லால்பாக் பொட்டானிக்கல் கார்டெனில் நடைபயிற்ச்சி ,மேற்கொள்பவர்கள்சிறுவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மூத்த குடிமகன்கள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் மற்றும் இந்த பூங்காவில் வீற்றிருக்கும் 3 .3 பில்லியன் வருடங்களுக்கு முன் உருவான மிக பெரிய பாறையை கட்டி தழுவி போராட்டத்தில் குதித்துள்ளனர் .

ஏன் இந்த திடீர் போராட்டம் என்று கேட்ட பொழுது அவர்களின் பதில் நமக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
ஏற்கனவே பெங்களூரு அதிதீவிரமாக வளர்ந்து ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வரும் வேளையில் ஹெப்பாலில் இருந்து சில்க் போர்டு சாலை வரை 17 கிலோமீட்டர் தொலைவுக்கு டன்னல் நிலத்தடி சாலை அமைக்கும் திட்டத்தை அரசு தெரிவித்துள்ளது .இந்த நிலத்தடி சாலையால் பெங்களூரு நகரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை மிக சுலபமாக நேர விரயத்தை குறைத்து பயணம் செய்ய உதவும் என்று கூறப்பட்டதை இயற்கை ஆர்வலர்கள் ஏற்பதாக இல்லை .
இந்த டன்னல் சாலை லால்பாக் கார்டனில் உள்ள பழம்பெரும் பாறை அடியில் சுரங்கம் குடையப்பட்டு கடந்து செல்லும் அப்பொழுது பாறை பகுதி என்னவாகும் பாதுகாக்க பட்ட பாறையும் பூங்காவும் நாசமாகவும் இந்த பூங்காவினுள் உள்ள அழகிய ஏரி காணாமல் போய்விடும் எனவே இந்த சுரங்க பாதை ஐடியாவை வேறு வழியாக மாற்றுவது தான் நல்லது என்கின்றனர் நாம் சந்தித்த பெங்களூரு வாசிகள் .

நாம் லால்பாக் மற்றும் கபன் பார்க் நடைபயிற்ச்சி சங்க தலைவர் உமேஷ் குமாரை பிரஸ் கிளப் வளாகத்தில் சந்தித்தோம் ,

"இந்த லால்பாக் ராக் 3 .3 பில்லியன் வருடத்திற்கு முன் உருவான ஒரு அற்புத பாரம்பரிய பாறை காலகாலமாக இருக்கும் இந்த அழகிய ராக் பகுதியை இந்த அரசு டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ விட்ருங்கோ.இந்த ராக்கை சுற்றி சிறிய அனிமேல்ஸ் மற்றும் பேர்ட்ஸ் இருக்கு ஒரு அழகிய லேக் இருக்கிறது டன்னல் இங்கு அமைத்தால் பெரிய ராக்குக்கும் மற்றும் லேக்குக்கும் டேஞ்சர் தான் .
அந்த இடத்தை விட்டு விட்டு வேறு எங்காவது டெவெலப் பண்ணுங்கோ .ஒரு விஷயம் பெங்களூரின் இரண்டு கண்கள் லால்பாக் மற்றும் கபன் பார்க் . இங்கு தான் டூரிஸ்ட் மற்றும் லோக்கல் மக்கள் ரிலாக்ஸ் பண்ண வராங்கோ .
அந்த ராக்கில் சிறுவர்கள் ஸ்லைடு பண்ணி விளையாடுறங்கோ ராக்கின் மேல் ஏறி இறங்கி தினமும் காலை உடற்பயிற்ச்சி பண்ணறாங்கோ இந்த க்ரீனரியை கெடுக்கவேண்டாம்
டெவெலப் என்ற பெயரில் ஆர்டிபிஷியல் ஆக்காதிங்கோ .
பெங்களூரு என்றால் கார்டன் சிட்டி ,பின் சிலிகான் சிட்டியாச்சி, பின் கான்க்ரீட் சிட்டி ,பின்னர் கார்பேஜ் [குப்பை சிட்டி ]சிட்டி ஆனபின் இப்போ க்ரைம் சிட்டி மற்றும் இப்போ பாம் சிட்டியாயிருச்சி! . இத விட்டுறுங்கோ பெங்களூரு க்ரீன்னா வேணும் கோவிட் சமயத்தில் ஆக்சிஜன் நானே காசு கொடுத்து வாங்கினேன்.
எதிர் காலத்து குழந்தைகளுக்கு சுவாச காற்று லால்பாக் மற்றும் கபன் பார்க்கில் தான் கிடைக்குது . உங்க டெவெலப் எங்கோ பண்ணுங்க இதை விட்டுறுங்கோ . இந்த பிளானை தொடர்ந்தால் மிக பெரிய போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டியிருக்கும் இந்த டன்னல் பணியை தொடர் விடமாட்டோம்" என்று எச்சரித்தார் காட்டமாக .

இந்த அழகிய பூங்காவில் நடை பயிற்ச்சி மேற்கொள்ளும் பலர் முப்பது வருடத்திற்கு இயற்கை காற்றை சுவாசித்து கொண்டு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் அரசு எங்களின் உடல் நலத்தையும் இயற்கை சூழல் மற்றும் பாரம்பரிய பாறை மற்றும் ஏரியை அழிக்க விடமாட்டோம் என்கின்றனர் .
லால்பாக் மற்றும் கபன் பார்க் குழுவின் அமைப்பு செயலர் பேராசிரியர் சுமாவை சந்தித்து பேசினோம்,

"பெங்களூரு வாசிகள் போக்குவரத்து நெருக்கடியில் இருந்து சற்று நிம்மதியாக பயணம் செய்ய ஹெப்பால் முதல் சில்க் போர்ட் வரை டன்னல் சாலை அமைக்கும் திட்டத்தை அரசு
மேற்கொள்வதைவரவேற்கும் தருணத்தில் நாங்கள் ஒரு மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசிடம் பணிவாக ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளோம் .அரசின் வளர்ச்சி பணி சிறப்பானதாக இருந்தாலும் லால்பாக் பகுதியை தொந்தரவு செய்ய வேண்டாம்.

பழங்காலத்திலேருந்தே பாரம்பரியமாக இந்த கார்டனில் வந்து போகிறவர்கள் காலையும்,, மாலையும் வாக்கிங் செல்பவர்கள் இலவசமாக ஆக்சிஜன் பெற்று செல்லும் பெங்களூரு வாசிகளின் சிறிய அளவில் தொடரும் ஆரோக்கியத்தை கெடுத்துவிடகூடாது.
அரசு வளர்ச்சி பணிகளை தாராளமாக செய்யட்டும் அதே சமயம் லால்பாக் மற்றும் கபன் பார்க்கை விட்டு விட்டு வேறு பக்கமாக டன்னல் சாலையை அமைத்து கொள்ளலாமே !
* உங்களுடைய போராட்டம் தொடர்கிறதா அரசின் பதில் என்ன?
அரசிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை .இந்த ராக் குறித்த வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் முடிவு தெரியும் காத்திருக்கிறோம் . எங்க போராட்டம் தொடரும் .
* லால்பாகில் உள்ள அந்த பெரிய பாறையை பற்றி என்ன கூறுகிறீர்கள்?
நீதி மன்றத்தால் இந்த பறை காப்பாற்றப்படும் என நம்புகிறோம் .அந்த ராக் மிகவும் பழமையானது மிகபெரியது 8 ஏக்கர் நில பரப்பில் அமைந்துள்ளது . இதில் தினமும் நடைபயிற்ச்சி செய்பவர்கள் மேலும் கீழும் ஏறி இறங்கி பயிற்ச்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது .அந்த ராக்கின் அடியில் டன்னல் அமைத்தால் கால போக்கில் அது உடைந்து மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இயற்கை சூழலே மறைந்துவிடும் .
லால்பாக் மற்றும் கபன் பார்க் தான் இயற்கையுடன் ஒன்றித்துள்ள இடம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இங்கு வந்து விசிட் செய்து பாறையின் மேல் ஏறி இறங்கி மகிழ்கின்றனர் . உள்ளூர் வாசிகளும் நகரின் போக்குவரத்து நெரிசல் டென்ஷனில் இருந்து சற்று விடுபட இங்கு வந்து அமர்ந்து ரிலாக்ஸாகி செல்வது வழக்கம் .ஒரு சின்ன வேண்டுகோள் லால்பாக் , கபன் பார்க் மற்றும் அந்த பழம்பெரும் பாறையை காப்பாற்றி இயற்கையை பாதுகாப்பதே முக்கியம் .என்கிறார் .
ஏற்கனவே மெட்ரோ கட்டுமான சமயத்தில் லால்பாக் சுவர் இடிந்து 400 மரங்கள் விழுந்து காணாமல் போனது .
பழம்பெரும் வரலாற்று சிறப்புமிக்க பெங்களூர் சற்று உயிரோடு இருப்பது லால்பாக் மற்றும் கபன் பார்க்கினுள் தான் இந்த இரண்டு கண்களையும் அழித்துவிடவேண்டாம் என்று போராடுகின்றனர் பெங்களூரை நேசிக்கும் உள்ளூர் வாசிகள் .
இவர்களின் போராட்டத்தை கவனித்த அரசு இந்த டன்னல் பணியை தொடரும் ஐடியாவை சற்று நிறுத்திவைத்துள்ளதாக தகவல் .

Leave a comment
Upload