கடந்த மாதம் 29 தேதி மாலை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பிறந்தநாளும் பேராலயத்தின் ஆண்டு விழாவும் மிக சிறப்பாக ஆடம்பர கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு 8 ஆம் தேதி மாதாவின் பிறந்தநாள் அன்று மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டு விழா முடிவடைந்தது .

கடந்த பத்து நாட்களாக லட்ச கணக்கில் எல்லா மதத்தை சேர்ந்த பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர் .
மிக சிறப்பு வாய்ந்த திருவிழா உலகத்தையே வியக்கவைக்கும் ஒன்றாக திகழ்ந்தது .பத்து நாள் விழா தினமும் கொடியேற்றத்துடன் நடந்து வந்தது ஆச்சிரியமான ஒன்று,
பேராலயத்தின் திருவிழா சிறப்பே தினமும் பகல் 12 மணிக்கு உபயதாரர்கள் வழங்கும் கொடி ஏற்றப்பட்டது .அந்த வைபவம் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருக்க குருக்கள் கொடியை புனித படுத்தி " அன்னையே ஆரோக்கிய தாயே " ஏ .வி.கோவிந்தனின் குரலில் வரலாற்று சிறப்பிக்க பாரம்பரிய பாடல் இசைக்க கொடியேற்றம் மிக அழகாக நடந்தது .
கொடி கம்பமே சிறப்பு வாய்ந்தது 16 ஆம் நூற்றாண்டில் கடும் புயலில் சிக்கின போர்ச்சுகிசிய மாலுமிகள் பயணம் செய்த கப்பல் அன்னை மரியாளிடம் பிராத்தனை செய்ய புயல் தணிந்து வேளாங்கண்ணி
கடற்கரையில் கரை ஒதுங்கியது .அந்த மாலுமிகள் மாதா கோயிலை புதுப்பித்து கப்பலில் இருந்த கொடிமரத்தை எடுத்து வந்து ஆலயத்தில் பொருத்தி கொடியேற்றிவைத்தனர் அதே கொடி மரம் தான் இன்றுவரை கம்பிரமாக நிற்கிறது .
கடந்த 6 ஆம் தேதி 12 மணிக்கு கொயேற்றத்திற்கான தயாரிப்பு நடக்க கொடிமரத்தில் 11 .30 மணிக்கு திடீர் என்று தேனீ கூட்டம் கொடி மரத்தில் கூடு கட்ட துவங்கி ஆயிரக்கணக்கில் செட்டில் ஆகின .

கொடியேற்ற தயாரான வேளையில் தேனீக்களின் கூட்டத்தை பார்த்து குருக்களும் தன்னார்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கூற , தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் கொடிமரத்தடியில் வந்து தன்னார்வலர்களையும் பக்தர்களை அப்புறப்படுத்தினர் .

அதே வேளையில் சரியாக 12 மணிக்கு கொடியேற்ற வேண்டும் என்று குருக்கள் கூற தினமும் கொடி புனித படுத்தும் இடத்தில் இருந்து வெளியே பேராலய வாயில் அருகில் கொடி புனித படுத்த பட்டு தேனீக்களை பற்றி யாருக்கும் தெரியாமலே கொடி மிக அழகாக ஏற்றப்பட்டது .
" அன்னையே ஆரோக்கிய தாயே "என்ற பாடல் கம்பிரமாக
இசைக்க கொடி சரியான நேரத்திற்கு ஏற்றப்பட்டது .

அதிலும் அன்றைய சிறப்பு மாதாவின் மூன்று புதுமைகளான "பால் சிறுவனுக்கு காட்சி கொடுத்தது , சப்பாணி சிறுவனுக்கு மாதா காட்சி கொடுத்து நடக்க செய்தது மற்றும் போர்த்துகிசிய மாலுமிகளை புயலில் இருந்து காப்பாற்றியதை குறித்து மூன்று முறை கொடி ஏற்றி இறக்க பட்டது தான் முக்கியம் .
அதன் பின் எந்த சலசலப்பும் இல்லாமல் பக்தர்களை அங்கிருந்து விலகி செல்லவைத்து காவல்துறையும் தீயணைப்பு துறை வீரர்கள் அந்த தேனீக்களை அப்புறப்படுத்தினார்கள் என்பது மிக சிறப்பான விஷயம் .
நாம் வேளாங்கண்ணி தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பக்கிரிஸ்வாமியை தொடர்பு கொண்டு பேசினோம் ,
" இந்த வருடம் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு அதிகமான பக்தர்களின் கூட்டம் மொய்த்து வந்தது .6 ஆம் தேதி பகல் 11 .30 மணிக்கு பேராலய நிருவாகத்திடமிருந்து அழைப்பு வந்தது கொடிமரத்தில் தேனீக்களின் கூட்டம் கூடு கட்டியுள்ளது என்று . உடனே நாங்கள் எங்களின் வாகனத்துடன் சென்று பார்த்தோம் .
தேனீக்கள் அந்த கொடிமரத்தை சூழ்ந்திருந்தது உடனே அப்புற படுத்த முடியவில்லை காரணம் பக்தர்கள் லட்ச கணக்கில் கொடியேற்றத்தை கண்டு வணங்க மொய்த்து கொண்டிருந்தனர் .
ஆலயத்தில் இருந்து தினமும் கொடி எடுத்து வந்து கொடிமரத்தடியில் குருக்கள் புனிதப்படுத்தும் இடத்தில் இருந்து வெளியே பேராலய முற்றத்தின் அருகில் கொடியை பிரித்து புனித படுத்திய பின் அதே கம்பீர பாடலுடன் லாவகமாக தேனீக்களின் மேல் அந்த பெரிய அழகிய கொடி படாமல் ஏற்றப்பட்டது , அதிலும் மூன்றுமுறை ஏற்றி இறக்கி ஏற்றப்பட்டும் ஒரு தேனீ கூட கலையவில்லை . பின்னர் அனைத்து பக்கதர்களையும் அங்கிருந்து மெதுவாக கலைத்து அனுப்பிவிட்டு பேராலய கதவுகள் சன்னல்களை மூடிவிட்டு கொடிமரத்தில் ஏணியை நிறுத்தி புகை மருந்து போட்டு தேனீக்களை அப்புற படுத்தினோம் .
நிறைய தீயணைப்பு போராட்டங்களை சந்தித்த நமக்கு இது சற்று சவாலாக தான் இருந்தது .தேனீக்களை தொந்தரவு செய்யாமல் கொடியை ஏற்றினோம் .பெரிய ஆர்பாட்டம்மில்லாமல் லட்சக்கணக்கில் குவிந்திருந்த பக்தர்களை கலைந்து செல்ல செய்தோம் .ஒரு தேனீ கூட யாரையும் தொந்தரவு செய்யவில்லை என்பது ஆச்சிரியமான விஷயம் .
பேராலய வரலாற்றில் இது ஒரு புதிய ரிஸ்க்கான அனுபவம் மாதாவின் அருளும் எங்களுடன் இருந்தது மிக சிறப்பான ஒன்று "என்கிறார்,
கொடிமரத்தின் மேல் ஏறி லாவகமாக புகை அடித்து எல்லா தேனீக்களையும் அகற்றினார் தீயணைப்பு வீரர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது .
தேனீக்கள் ஒவ்வொன்றாக கூலாக பறந்து வந்து கொடி கம்பத்தின் மேல் செட்டில் ஆக பேராலய நிர்வாக குருக்கள் அச்சத்தில் உடனே காவல் துறைக்கு தகவல் அளித்தனர் ,உடனே ஸ்பாட்டுக்கு வந்து துரிதமாக நடவடிக்கை எடுத்தார் வேளாங்கண்ணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செல்வி .
நாம் இன்ஸ்பெக்டர் செல்வியை தொடர்பு கொண்டு பேசினோம் ,
" தகவல் கிடைத்தவுடன் கொடிக்கம்பத்தின் முன் சென்று பார்த்தபோது சற்று ஷாக்கிங் தான் தேனீக்களின் கூட்டம் கம்பத்தில் நீட்டமாக செட்டில் ஆகியிருந்தது .உடனே தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் அழைத்து ரெடியாக நிற்க வைத்து .குழுமியிருந்த பக்தர்களை அமைதிகாக்க செய்து தடுப்பு போட்டு எங்க போலீஸ் குழுவை நிற்கவைத்து பின் கொடிக்கம்பத்தை சுற்றி ஒருவர் கூட நிற்காமல் செய்து கொடியை அந்த இடத்தில் இருந்து பேராலய முற்றத்தின் அருகே கயிறை இழுத்து கொடி புனித படுத்தப்பட்டபின் மிகவும் சாதுரியமாக மூன்று முறை கொடி ஏற்றி இறக்கி அழகாக தேனீக்களை டச் பண்ணாமல் ஏற்றிவைத்தோம் . பின்னர் எந்த சலசலப்பும் சப்தமும் இல்லாமல் அனைத்து

பக்தர்களை மெதுவாக அப்புறப்படுத்தி திருப்பலிக்கு செல்பவர்களை பேராலயத்தினுள் அனுப்பி கதவுகள் மற்றும் ஜன்னல்களை அடைத்துவிட்டு தீயணைப்பு படை வீரர் ராஜா ஏணியில் மேலே ஏறி புகை செலுத்தி ஒரு தேனீ விடாமல் அப்புறப்படுத்தி பின் தண்ணீர் பீச்சி சரிசெய்த பிறகு தான் நிம்மதியானது லட்சக்கணக்கான பக்தர்கள் மூவ்மெண்ட்டில் இருக்க தேனீக்களால் விபரீதம் ஏற்படலாம் அல்லவா? நாங்களும் தீயணைப்பு வீரர்களும் இணைந்து எங்களின் கடமையை செய்திருந்தாலும் மாதாவின் அருள் தான் தேனீக்கள் கலையாமல் கொடியேற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டது"
என்று கூறினார் இன்ஸ்பெக்டர் .
அன்று லட்சக்கணக்கில் குவிந்திருந்த பக்தர்களின் கூட்டத்தில் தேனீ கூட்டம் கலைந்திருந்தால் நிலைமை நினைத்து பார்க்கவே சற்று நடுக்கம் தான் .
ஒரு பெரிய சவாலான விஷயத்தை சைலெண்டாக வேளாங்கண்ணி தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் முடித்து கொடுத்தது பாராட்டுக்குரிய ஒன்று சபாஷ் அதிகாரிகளே !.

Leave a comment
Upload