தொடர்கள்
விகடகவியார்
சட்டசபையில் முதல்வர் விஜய் திமுக மீது ஆவேச விளாசல்-விகடகவியார்

20260810191423521.jpeg

போலீஸ் மானிய கோரிக்கைக்கு பதில் அளித்து சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசும்போது "மாநிலத்தின் முன்னேற்றம் என்பது சாலைகள் அமைப்பது, தொழிற்சாலைகள் வருவதால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அல்ல. மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு பாதுகாப்பாகவும் பயமில்லாமல் வாழ்கிறார் என்பதில் தான் முன்னேற்றம் இருக்கிறது "என்றார்"

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தொழில் முதலீடுகள் வரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், சுற்றுலாத்துறை வளரும் பெண்களும் இளைஞர்களும் வேலைவாய்ப்புகளில் பங்கேற்பார்கள் "எனவும் அவர் பேசினார்.

"எந்தவித தடையில்லாமல் நேர்மையாக காவல்துறை இயங்குவதற்கான சூழலை உருவாக்குவதற்கு தனது அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் முதலமைச்சர்" பேசினார். கூடவே, காவல்துறை வெறும் குற்றவாளிகளை கைது செய்யும் அமைப்பு மட்டுமல்ல. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் சமூக அமைதிக்கும் முதலீட்டுச் சூழலுக்கு மக்கள் நம்பிக்கைக்கும் அடித்தளமாக அமையும் முக்கிய அமைப்பாக உள்ளது. ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என கூற முடியாது. அனைத்து குற்றங்களும் கடந்த நூறு நாட்களில் தோன்றியது அல்ல" என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவுகள், போதைப் பொருள் புழக்கம் அதிகரித்தது போன்றவை மக்கள் மத்தியில் நீங்காமல் உள்ளது சட்டம் ஒழுங்கு குறித்து திமுக விமர்சிப்பதற்கு முன்பாக அவர்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு ஒரே பதில் திமுக திமுக தான் "என்றும் குறிப்பிட்டார் முதல்வர்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு சட்டமன்ற திமுக உறுப்பினர், எலும்பு டாக்டர் போல சட்டசபைக்குள்ளேயே விலா எலும்பை முறித்து விடுவேன் என்று பேசி இருக்கிறார். இப்படிப் பேசிப் பேசித்தான் மக்கள் எல்லாம் பார்த்து பார்த்து எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்து விட்டார்கள் "என்று திமுகவை கடுமையாக விளாசினார்.

"சர்க்காரியா கமிஷன் சர்க்காரியா கமிஷன்னு ஒன்னு இருந்துச்சு. பவள விழா கட்சியோட பொன்விழா கண்ட சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை. 1970-களில் திமுக ஆட்சி இருந்தப்போ ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்துக்கான குழாய்கள் தயாரிக்க டெண்டர் தருவதற்கு 2.5 சதவீதம் தரணும்னு கருணாநிதியின் மருமகன் மாறன் கேட்டாராம்.

1970-இல் இருந்து 74 வரை 7 தவணைகளில் 29 லட்சம் கையூட்டு வாங்கி இருப்பதாக சர்க்காரியா கமிஷன் குறிப்பிட்டு இருக்கிறது. இ எம் ஐயில் லஞ்சம் வாங்கிய ஒரே கட்சி திமுக தான். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் எங்கள் அரசியல் பாரம்பரியம் தெரியுமா? எங்கள் சீனியாரிட்டி பற்றி தெரியுமா என்று வீர வசனம் பேசுவாங்களே அவங்க அரசியல் பாரம்பரியம் சீனியாரிட்டி எல்லாம் இதுதான். இதை எல்லாம் சொன்னா எந்திரிச்சு ஓடினாலும் ஓடிருவாங்க "என்று திமுகவின் பழைய கதை எல்லாம் கிளறினார்.

"நான் ,'பார்ட்டி ஃபண்டு' அதாவது கட்சி நிதி என்று சொன்னதும் ஆதாரம் கேட்டாங்க ஆதாரம் பக்கத்திலேயே தான் இருக்கு (உதயநிதி ஸ்டாலின் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த நேருவை சுட்டிக்காட்டி) நகராட்சி நிர்வாகம் தொடர்பான முறைகேடு குறித்து, அமலாக்கத்துறை 100 பக்கத்தில் ஒரு அறிக்கை கொடுத்தார்கள். இந்த அறிக்கை திமுக ஆட்சியில் இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதற்காக தலைமைச் செயலாளருக்கும் டிஜிபிக்கும் கடிதம் எழுதினார்கள்.

அந்த அறிக்கையில் 'பார்ட்டி ஃபண்ட் ' எப்படி வாங்கினார்கள் யார் வாங்கினார்கள் என்ற விவரம் அதில் இருக்கிறது. இந்த கட்சி நிதியின் நேரடி பயனாளிகள், முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் துணை முதல்வர் உதயநிதி மற்றும் கவின் பிரசாத், டி.ரமேஷ், பிரபு மற்றும் அடையாளம் தெரியாத பல நபர்கள் என்று அந்த அறிக்கையில் சொல்லி இருக்கு. இந்த ஒரு டிபார்ட்மெண்ட் மட்டுமல்ல எல்லா டிபார்ட்மெண்ட்டுகளிலும் இந்த பார்ட்டி ஃபண்ட் விஷயம் இருக்கு "என்று திமுகவை குறி வைத்து விளாசினார்.

இவை எல்லாவற்றையும் எடப்பாடி சிரித்தபடியே கவனித்து வந்தார். உதயநிதி ஸ்டாலின் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு ஆவேசமாக எழுந்தார். ஒரு கட்டத்தில் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது முதல்வர் இருக்கை அருகே உட்கார்ந்து கொண்டிருந்த திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எழுந்திருக்க முடியவில்லை. அவருக்கு கை கொடுத்து தூக்கி எழுந்திருக்க உதவி முதல்வர் ஜோசப் விஜய். இதெல்லாம் சட்டசபை நேரலையில் பளிச்சன தெரிந்தது.

உதயநிதி ஸ்டாலினை பொருத்தவரை அவர் வாதம் இது தான் சர்க்காரியா கமிஷன் அறிக்கைக்கு பிறகு மூன்று முறை திமுக ஆட்சிக்கு வந்தது. அமலாக்கத்துறை தந்திருப்பது அறிக்கை தான். அந்த குற்றங்கள் எல்லாம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. வழக்கு விசாரணையில் இருக்கிறது என்பதுதான். தேர்தல் பிரச்சாரத்தில் எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று சொன்னார் ஜோசப் விஜய். இப்போதும் திமுகவை குறி வைத்து போட்டுத்தாக்குகிறார்.