தொடர்கள்
அரசியல்
சட்டமன்ற நிகழ்வுகள்-LIVE- கண்ணாழ்வார்

தமிழக சட்டசபை நிகழ்வுகளை பற்றி தான் ரயில், பஸ் மற்றும் பொது இடங்களில் மக்கள் எங்கு பார்த்தாலும் பேசி சிரிக்கிறார்கள்.2026080920042174.jpeg

தமிழக சபாநாயகர் அனைத்து தரப்பினரையும் அனுசரித்து சபை நடத்தும் லாவகம் பற்றி மிஸ்டர் பொதுஜனம் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே பேசும் போது அவை குறிப்பிலிருந்து நீக்குகிறேன் என்ற வார்த்தையை அடிக்கடி பேசி மகிழ்ச்சி அடைகின்றனர்.

முதல்வர் பேசவில்லை , பதிலளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் தரப்பு குற்றச்சாட்டு எழப்பினார்கள்.

காவல்துறை மானிய கோரிக்கையில் நான்பதிலளிக்கும் போது யாரும் எழந்து ஓடக்கூடாது என்று முதல்வர் கிண்டல் செய்தார்.

20260809200453383.jpeg

திமுகவினர் தங்கள் தரப்பில் பேச அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அவைகுறிப்பில் இருந்து முதல்வரின் வார்த்தைகள் சிலவற்றை நீக்க வேண்டும் என்று திமுகவினர் கேட்டதற்கு இதெல்லாம் அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது என்று சபாநாயகர் தீர்ப்பளித்தார்.

இதற்கு முன்பு சட்டசபை நிகழ்வுகளை பார்க்க சென்னை வாசிகள் விருப்பபடமாட்டார்கள் .தற்போது விஜய் அமைச்சரவை , உதயநிதி , எடப்பாடி ஆகியோரை காண பொதுஜனம் சட்டபேரவை மாடத்தில் நிரம்பி வழிகின்றனர்.

அவைகாவலர்கள் எல்லாம் உஜாலா வெளூப்பில் வெள்ளூடையுடன் பணி செய்வது வியப்பாக இருக்கிறது.

20260809200620474.jpeg

இந்த கூட்டத்தொடர் முழவதும் மக்கள் பிரச்சனையை அதிகமாக தீர்க்கமாகவும் , நகைப்புடன் பேசி தமிழகம் முழவதிலும் இருக்கும் மக்களை கவர்ந்தவர் சௌமியா அன்புமணி.

20260809200705509.jpeg

சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஓளிப்பரப்படுவதால் தமிழகம் முழவதும் தற்போது மக்கள் தொலைகாட்சிகளில் தொடர்கள் பார்க்கப்படுவதை தவிர்த்து விட்டு நேரலை சட்டசபை நிகழ்வுகளை பார்த்து ரசித்து , கமெண்ட் செய்து வருகின்றனர்.

20260809200745635.jpeg

மொத்தத்தில் விஜய் அமைச்சரவை சகாக்கள் பலர் பேசும் போது தடுமாறினாலும் பெண் எம்.எல்.ஏ கனிமொழி முகப்பாவங்கள் ரசிக்கும் படி இருப்பதால் தற்போதைய சட்டசபை ஹைலைட் எம்.எல்.ஏ என்ற பட்டத்தினை தட்டி செல்கிறார்.

20260809200919874.jpeg

தமிழகம் முழுவதும் இந்த கூட்ட தொடரில் 5 ஏக்கர் விவசாய கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் இருந்தனர்.முதல்வர் முழுமையான கடன் தள்ளுபடி அறிவிப்பினை வெளியிடவில்லை …விவசாயிகள் அப்செட்.

முதல்வர் விஜய் இதனை போர்கால அடிப்படையில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

20260809200953260.jpeg

சட்டபேரவை பட்ஜெட் கூட்டதொடர் நேற்று முடிவுற்றதாக அறிவித்தார் எவர்கீரின் சபாநாயகர்.