தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

ருக்மணி வசந்த்

20260809203115807.jpeg

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கும் பான் இந்தியா படம் டிராகன் இதில் தற்சமயம் பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாகித் கபூர் ,ஆலியா பட் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்கள்.

நயன்தாரா

20260809211546443.jpg

'டாக்ஸிக்' படத்தைப் பார்த்து நயன்தாரா ஹீரோவுக்கு அக்கா மாதிரி இருக்காங்க என்ற ஒரு கருத்து பரவினாலும் மீண்டும் அதே ஹீரோவுடன் நடிக்க விரும்புகிறார் நயன்தாரா.

ரைசா வில்சன்

20260809214612453.jpg

ஒரு படத்தில் வசனமே இல்லாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரைசா வில்சன்." பார்வை உடல் மொழியாலேயே நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறேன். இதில் நான் கவனிக்கப்படுவேன் "என்று நம்பிக்கையோடு இருக்கிறார் நடிகை.

மாளவிகா மோகன்

20260809211746458.jpg

தமிழில் இதுவரை மாளவிகா மோகன் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. சர்தார் 2 படத்தை தான் அவர் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்றால் தமிழில் எனக்கென்று ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் நடிகை.

நிமிஷாசஜயன்

20260809212707388.jpg

என்ன விலை என்ற படத்தில் கருணாஸ் ஜோடியாக நிமிஷாசஜயன் நடித்திருக்கிறார் .கருணாஸ் நடிப்பை பாராட்டி நடிகை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாராம். இதைப் பெருமையாக எல்லோரிடமும் சொல்கிறார் கருணாஸ்.

பிரியங்கா மோகன்

20260809212049334.jpg

ஜெய் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் ஒரு படத்தை இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ஸ்ரேயா

சண்டைக்காரி என்ற படத்தில் விமல் ஸ்ரேயா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படம் காதல் காமெடி மோதல் குடும்ப உணர்வு என அனைத்து அம்சங்களும் கலந்த படமாம்.

திரிஷா

20260809214305144.jpg

திரிஷா ஒரு படப்பிடிப்புக்காக தான் லண்டன் சென்று இருக்கிறாராம். இயக்குனர் ராஜா கிருஷ்ணன் மேனன் தமிழில் உளவியல் திகில் படத்தை எடுக்கிறார். இந்தப் படத்தில் திரிஷா, ராதிகா சரத்குமார், அபர்ணா பால முரளி ஆகியோர் நடிக்கிறார்கள். நீங்க நினைக்கிற அந்த மேட்டர் இல்லையாம். சினிமா ஷூட்டிங் தானாம்.