தொடர்கள்
அனுபவம்
விவி கிருஷ்ணன் – கிரிக்கெட் போட்டோகிராஃபருடன் - பால்கி

2026102021294419.jpeg

20261020213017956.jpeg
நூற்றுக்கும் மேற்பட்ட டெஸ்ட்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட ஒன் டே மேட்ச்சுகள் ஆடினேன் என கிரிக்கெட் வீரர் சொன்னா தான் மதிப்பா?

இங்கு ஒருவர் அத்தனை மேட்ச்சுகளை தனது காமிராவில் கைப்பற்றியிருக்கிறார் என்றால் பெருமைப்படும் விஷயம் தானே! சமீபத்தில் த ஹிந்துவின் பிரதான போட்டோ எடிட்டராக இருந்து ரிடையரான வி வி கிருஷ்ணன்.

இவர் முதலில் அறிமுகமானது ஆனந்தவிகடனின் 1984ல் ஆரம்பமான மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில். அவர் டெல்லியிலிருந்து தேர்வாகியிருந்தார். நான் அதே பேட்ச்சில் மும்பையிலிருந்து தேர்வாகியிருந்தேன்.

போன வாரம் டெல்லி தூர்தர்ஷன் தனது ஸ்ரீஜன் என்ற காலை நிகழ்ச்சியில் அவரை பேட்டி கண்டது எனக்கு பெருமை. நமக்கும் பெருமைதானே. விகடன் பள்ளியில் என்னுடைய பேட்ச்மேட் இல்லையா?

கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக இந்த பணியில் இருந்திருக்கிறார்.

1986ன் அகமதாபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் என்ற புகழ்மிக்க கல்வி நிலையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் ஒருவராக சேர்ந்து பட்டம் பெற்றார்.

1987ல் த ஹிந்துவில் சேர்ந்தார்.

1989ல் இந்திய கிரிக்கெட் டீமுக்கு ச்சீக்கா கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேப்டனாக சென்ற அணியில் சச்சின் டெண்டூல்கர் அறிமுகமான அதே டெஸ்ட் சீரீஸுக்கு இவரை த ஹிந்து அனுப்பி வைத்தது. கராச்சி டெஸ்ட் தான் இருவருக்குமே முதல் டெஸ்ட். சீக்காவுக்கு கேப்டனாக முதல் டெஸ்ட்டும் அது தான். நானும் சீக்காவும் 1975-76 விவேகானந்தா கல்லூரியில் பியூசி சேர்ந்து படித்திருக்கிறோம்.

ஒரு விதத்தில் இவருக்கும் அது தான் கிரிக்கெட்டை கவர் செய்ய அறிமுகமானதும் கூட.

கலர் போட்டோக்கு ட்ரான்ஸ்பரன்சி ஃபிலிம், மற்றதுக்கு பிளாக் & வொயிட் ரோல் தான் உபயோகிக்க வேண்டியிருந்தது என்கிறார்.

ஷூட் செய்த ஃபிலிமை தானே தான் டெவலப்பும் செய்திருக்கிறார்., தங்கியிருக்கும் ஹோட்டல் பாத்ரூம் டார்க் அறையாக்கிவிடுவாராம். சாதாரணமாக பாத்ரூம்களில் துணிகள் தொங்கும் ஆனால் இவரது பாத்ரூமில் ஃபிலிம்கள் தொங்கும்.

இந்த பணிகளுடன் கூடவே அந்த படங்களை தலைமையகத்துக்கு அனுப்புவது என்பது பெரிய சேலஞ்ச் எங்கிறார். மோடம், ஸ்கேனர் லேப் டாப் என ஒரு குட்டி ஆபீஸே வைத்திருப்பாராம். இது இருந்தும், மைதான நிலையங்களில் கிடக்கும் இன்டர்னெட், டெலிபோன் கனெக்ஷன் ஸ்பீட் பொறுத்து தான் இவரது பணி நிறைவாகுமாம். சில சமயங்களில் மேலே சொன்ன இத்தியாதிகள் மக்கர் செய்தால் அன்று டென்ஷன்தானாம்.

தரைக்கு இணையாக காற்றில் பறந்தபடியே பாகிஸ்தானின் இஞ்சமாம் வுல் ஹக்கை கேட்ச் பிடிக்கும் தென்னாப்பிரிக்க சூப்பர் மேன் ஜான்டி ரோட்ஸ்ஸை இவர் எடுத்த போட்டோ இன்றும் ஒரு க்ளாசிக்கல் போட்டோ எனலாம்.

2026102021260891.jpeg

ஆஸ்த்திரேலியாவில் நடந்த 1992 உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா Vs பாகிஸ்தான் ஒன் டே மேட்ச் இது. இதை அவர் கவர் செய்ய வேண்டுமென்று பணி நிர்பந்தமில்லை. அடுத்த ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக க்ளிக்கியது என்று அசால்ட்டாக சொல்கிறார். இத்தனைக்கும் அங்கு உலக பிரசித்தி பெற்ற டீவீ கேமராக்கள் பணியில் இருந்திருக்கின்றன. அன்று அங்கிருந்த உலக போட்டோகிராபர்களில் இவரது இந்த போட்டோ சிலாகிக்கப்பட்டது. அடுத்த முறை தென்னாப்பிரிக்காவில் சீரீஸ்ஸுக்காக செல்கையில் இவரை அங்கு ஹீரோவாகவே பாவித்தார்களாம்.

அவர் எடுத்த அசத்தல் போட்டோக்கள் சில இதோ:

2026102021280424.jpeg

[ஜிம்பாப்வே நாட்டில் ஷிவ்நாராய்ன் சந்திரபோலின் பறக்கும் பேட், விக்கெட் சரிந்து பறக்கும் பெயில்கள்]

சென்னை டெஸ்ட்டில் ஆஸ்த்திரேலியாவுடனான மேட்ச்சில் ஷேன் வார்ன்.

20261020212908662.jpeg

ஏதோ ஓவியர் வரைந்த படம் போல எடுக்கப்பட்ட படம் போல இல்லை!!!.

20261020213226247.jpeg

1994 பிப் 8 அன்று, அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் மேட்ச்சில் கபில் தேவின் 432 ஆவது விக்கெட், ஸ்ரீலங்காவின் பேட்ஸ்மேன் ஹஷன் திலகரத்னேவை சஞ்சய் மாஞ்ச்ரேகர் கேட்ச் பிடிக்க ஒரு வரலாறு முறியடிக்கப்பட்டது. இதன் மூலம் ரிச்சர்ட் ஹேட்லீயின் 431 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார் கபில் தேவ். இதற்கென அன்று மூன்று காமிராக்களை தயார் நிலையில் வைத்திருந்திருக்கிறார்.

கொல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்த்திரேலியாவிடம் படு உதை வாங்க இருந்த டெஸ்ட் மேட்ச்சில் வி வி எஸ் லக்ஷ்மணும் ராஹுல் திராவிடும் அபாரமாக ஆடி இந்தியாவிற்கு நினைத்துப் பார்க்கவே முடியாத வெற்றியைத் தேடித் தந்த போது எடுத்த படம் இதோ:

20261020213407101.jpeg

புதிய பத்திரிகை போட்டோகிராஃபர்களுக்கு அவர் கொடுக்கும் வெற்றி ரகசியம் இதுதான்:

பணத்துக்காக என்று இல்லாமல் பேரார்வம் என்ற குறிக்கோளுடன் செயல்படுங்கள் என்று சொல்கிறார். கையில் இருக்கும் கேமிராவை நமது உடலின் ஒரு பகுதி போன்றே கருதி அதை நன்கு புரிந்துகொள்ளுதல் மிக முக்கியமானது என்றும் தொடர்கிறார்.

20261020213805244.jpeg

இவரிடம் கிட்டத்தட்ட 130க்கும் மேல் கேப்ஷன் டைரிகள் இருக்கின்றன. “அதில் ஒவ்வொரு பிலிம் ரோலின் ஒவ்வொரு ஃபிரேமில் எடுத்த மேட்டர், அது நல்ல ஃபிரேமா அல்லது உபயோகம் இல்லாமல் போனதா என்று எழுதிவிடுவேன். இது எனக்கு பிலிமை டெவலப்மெண்ட் செய்கையில் எந்த போட்டோ உடனே பிரிண்ட் போடணும் என்ற உடனடி விவரம் தருகிறது” என்ற தனது பணியில் இம்மாதிரியான ஒரு ஒழுக்கம் மிகவும் உதவியாக இருந்தது என்று பெருமிதம் கொள்கிறார். பின்பற்றவேண்டிய ஒரு செயல் இது.

சச்சினின் அறிமுகத்தின் போதே அவர் நன்றாக பரிமளிப்பார் என்று அவர்து பாவனையில் தெரிந்தது தான்.

இப்போது கூட வைபவ் சூர்யவாண்ஷி கூட ஒரு பெரிய ஸ்டார் ஆவார் என்பதில் சந்தேகமே இல்லை. அவரது பேட் பிடிப்பது, பேட் கட்டுவது, மைதானத்திற்குள் நுழையும் கெத் என்பதிலிருந்தே தெரிகிறது என்று அவரது கருத்தை பதிவிடுகிறார்.

காட்டு விலங்குகள் வேட்டையாடல், ஐ மீன், wild life photographyயும் இவரது பொழுது போக்குதான்.

கிரிக்கெட் டூர்களின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் இவரது ராஜ்மா, சாவல் உணவை விரும்பி சாப்பிடுவார்களாம். இன்று இவர்கள் இரண்டு பேர் என்று இரண்டிரண்டாக இந்திய வீரர்களை உண்ண அழைத்திருக்கிறேன் என்று தனது நள பாகத்தின் பாண்டித்யத்தையும் கூறுகிறார்.

தனது பணி ஓய்வின் போது தந்தையை கவனித்துக்கொள்ளும் கடமைக்காக சச்சினின் அழைப்பை ஒரு வாரம் ஒத்திவைத்திருக்கிறார். சச்சினும் காத்திருந்து இவருக்கு ஒரு தனிப்பட்ட ட்ரீட்டையே தந்திருக்கிறார்.

நேற்று கூட, கிச்சா! அப்பா கூப்புடறார்! மீண்டும் கூப்புடறேனே! என்று சென்றுவிட்டார் !!

தொலைபேசி பேட்டியிலிருந்து.......