தொடர்கள்
கவர் ஸ்டோரி
திருப்பரங்குன்றம் !! தீபத்திற்கு அரோகரா !! தொடரும் சர்ச்சை !! -விகடகவியார்

20261021065445324.jpeg
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில், சிக்கந்தர் தர்கா தரப்பில், பொதுநல வழக்கு தொடர்ந்த தொடரப்பட்டவர் சார்பில் என்று மூன்று தரப்பு வாதங்களையும் உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் சார்பாகவாதாடிய மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் "தர்கா அருகே உள்ள கல்துண் தீபத்தூண் கிடையாது .அது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிலங்களை அளவீடு செய்வதற்காக அமைக்கப்பட்ட எல்லைகல்

.தமிழகத்தின் பல்வேறு மலைப்பகுதிகளில் இது போன்ற நில அளவீட்டு கற்கள் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்தூணும் இன்று வரை நில அளவீட்டு கல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது .

கல்தூண் பகுதிக்கு செல்வதற்கான வழி தர்கா நிர்வாகத்துக்கு சொந்தமானது " என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், "அந்த கல்துண் அமைந்துள்ள இடம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானதா இல்லையா ?என்று நேரடியாக கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மாவட்ட ஆட்சியர் சார்பான வழக்கறிஞர்,' அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்கிறோம் ' என்று பதில் சொன்னார்.

இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள் "'மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் அந்த கல்தூண் இருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமானதா இல்லையா ஒரு ஒரு வார்த்தையில் அதாவது ஆம் இல்லை என்று பதில் சொல்லுங்கள் ' என்று கேட்டார்கள்.

அப்போது வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், அந்த இடம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது தான் என்று தெரிவித்தார் .


சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹசீஃபா அகமதி, மன்னர்கள் காலம் தொடங்கிஆங்கிலேயர் ஆட்சி மற்றும் இந்திய அரசாங்கத்தின்காலம் வரையிலான ஆவணங்களில் தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 1862 முதல் 1923 ஆம் ஆண்டு வரையிலான உத்தரவுகள் தற்போதைய வழிபாட்டு நடைமுறைகளை உறுதிப்படுத்துகின்றன. நெல்லித்தோப்பு முதல் தர்கா வரையிலான பகுதி, படிக்கட்டுகள், தர்கா அமைந்துள்ள இடம் மற்றும் கொடியேற்றும் ஆகியவை தர்காவுக்குச் சொந்தமானவை மேலும் கல்தூணுக்கும் தர்காவுக்கும் 20 மீட்ட தொலைவு தான் உள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் எங்களது தரப்பு தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதம் செய்தார்


திருப்பரங்குன்றம் மலை கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ,ஹிந்து தமிழ் கட்சியை சேர்ந்த மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் அவரது வழக்கறிஞர்,

மலை உச்சியில் உள்ள கல் தூணில் நெய் ஊற்றி, திரி வைத்து விளக்கேற்றும் வகையில் குழிவான அமைப்பு உள்ளது. அதில் லிட்டர் கணக்கில் நெய் ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றலாம்.

இரண்டு மணி நேரம் வரை தீபம் அணையாமல் எறிய வாய்ப்புள்ளது .ஆண்டுக்கு ஒரு நாள் இரண்டு மணி நேரம் மட்டும் இந்த குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சனை ஏற்பட்டு விடப் போகிறது என்று கேட்டார்.

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றஅனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை.

ஒருமுறை நடவடிக்கையாக, நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் தொடர்பான இறுதி அங்கீகாரமாக இந்த தீர்ப்பு கருதப்படக் கூடாது.

திருக்கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற செல்ல அனுமதி. பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி இல்லை.

பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் தேவைப்பட்டால் சி.ஐ .எஸ் எப் படையினரை பணியில் ஈடுபடுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.


நமது சந்தேகம் இதுதான் கார்த்திகை தீபத்துக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில் தீவிரம் காட்டிய மாநில அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்கா தரப்பு சென்ற மாதமே இந்த வழக்கை துரிதப்படுத்தி தீபத்திருநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு தேவையற்ற சர்ச்சை பரபரப்பை தவிர்த்திருக்கலாமே .

உதாரணமாக முஸ்லிம்களாக மதம் மாறிய இந்துக்களுக்கு சலுகைகள் கிடையாது என்ற தீர்ப்புக்கு எதிராக அவசர அவசரமாக மேல்முறையீடு செய்த அரசாங்கம் இந்த விஷயத்தில் நத்தை வேகத்தில் செயல்பட காரணம் என்ன? .

தவிர ஆரம்பத்தில் தர்கா தரப்பு எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை இந்த வழக்கில் அவர்கள் மனுதாரராகவும் இல்லை.

மதச்சார்பற்ற கொள்கை என்ற பெயரில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் தர்கா தரப்பு தங்களை மனுதாரராக இணைத்துக் கொண்டது.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற ஞகதையாக இந்த அரசும் இந்துக்களுக்கான அரசு முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் வாக்கு வங்கிகளுக்கு அவர்களை மகிழ்விக்க இரண்டு மணி நேரம் தீபத்தூரில் தீபம் ஏற்றுவதை கூட கோடிக்கணக்கில் வழக்கிற்கு பணம் செலவு செய்து மக்கள் வரிப்பணத்தை விரையம் செய்வது வேடிக்கையாக தான் இருக்கிறது.

ஆங்கிலேயர்கள் தான், தங்களது சுயலாபத்திற்காக இந்து முஸ்லீம் பிரச்சினையை ஊதி ஊதி பெரிதாக்கி குளிர் காய்ந்து சென்றார்கள் என்றால், தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.!!