தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
விகடகவி கொலு போட்டி படங்கள் கருத்துக்கள் !!!

20261021071645476.jpeg

கொலு கொண்டாட்டத்தில் (போட்டி என்ற வார்த்தையை தவிர்த்து விடலாம்) முதல் பரிசு.....

சாய் சுதா சென்னை
கொலு போட்டியில் முதல் பரிசு பெற்றதில் மிக்க மகிழ்ச்சி! ✨🏆
இந்த வெற்றியை அளித்த விகடகவி குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.🙏🌸

20261021072023260.jpeg

இரண்டாவது பரிசு வனமாலா ராகவன்

திருமணத்திற்குப் பிறகு இதுவே எனது முதல் கொலு இரண்டாம் பரிசு வென்றதில் மகிழ்ச்சி

20261021072142553.jpeg

மூன்றாவது பரிசு

பவித்ரா நந்தகுமார்

மேலும் பரிசுகள்.... மகிழ்ச்சிகள்.... அனுபவங்கள்.....

கலக்கிய அனைத்து விகடகவி வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள். கலந்து கொண்டதற்கு நன்றிகள்.

20261021072425242.jpeg

20261021072509138.jpeg

வணக்கம்

இன்று ஒரு மறக்க முடியாத நாள் ஆகும்

தீபாவளி தினத்தன்று, நீங்கள் நவராத்திரி கொலுவிற்கான பரிசாக அனுப்பிய விநாயகர் விளக்கு கிடைத்தது

வெளியே மட்டும் அல்லாமல் மனத்துள்ளேயும் (உள்ளொளி) ஒளி பரவ வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது, உங்கள் பரிசு

பல வருடங்களாக சுற்றுச் சூழல் மாறுபாடில்லா விநாயகர் சதுர்த்தி மற்றும் நவராத்திரி கொலு கொண்டாடி வரும் எங்களுக்கு, விநாயகர் விளக்கு எங்கள் இரண்டு பண்டிகைகளுக்கும் கிடைத்த பரிசாக இருக்கிறது (ஏற்றுக் கொள்கிறோம்)

எங்கள் நவராத்திரி கொலுவை பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்த விகடகவி ஆசிரியர், அவர் குழு மற்றும் நடுவர்கள் குழுவிற்கும் மகிழ்ச்சியுடன் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

இறைவன் அருள் உங்களுடன் இருப்பதாக

ஒரு வீடியோவும் இருக்கு......

கொலுபோட்டியை ஒருங்கிணைத்த மரியா சிவானந்தாவின் பணி மக்த்தானது.

பின்னணியின் உழைத்த அனைவருக்கும், நிதியுதவியளித்த நண்பர்களுக்கும் நன்றி.

அடுத்த வருட கொலு போட்டியின் முதல் பரிசாக ஒரு மைக்ரோ வேவ் கொடுத்து விடலாம் என்று விகடகவியார் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.......

இறைவன் அருளிருந்தால் எல்லாம் நடக்கும்.