திரிஷா

நடிகை திரிஷா செல்லப்பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் 'இஸி' எனப் பெயரிடப்பட்ட ஒரு நாய்க்குட்டி ஒன்றை வளர்க்கிறார். அதன் இரண்டாவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில் ' பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது தேவதை பெண்ணே 'என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தனுஷ்

ஒம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சாய் பல்லவி, "இந்த விழாவிற்கு வரும்பொழுது வழியில் நடிகர் தனுஷ் கட்டவுட் வைத்திருந்தார்கள். ஏதோ அரசியல் நிகழ்வில் கலந்து கொள்வது போல் இருந்தது. தனுஷ் அரசியலுக்கு போனால் அவருக்கு என் வாழ்த்து. விஜய் சார் போல் அவர் நடிப்பதை நிறுத்தக்கூடாது தனுஷ் மிக சிறந்த கதைகளை தேடி தேடி நடிக்கக் கூடியவர் " என்று பேசி இருக்கிறார் .
ராதிகா
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்த 'தாய்க்கிழவி' படம் கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'இந்திய பனோரமா’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.
சமந்தா

" எனக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும். என் வீட்டிற்கு முன்னால் ஒரு சிறிய கடை இருந்தது .அந்தக் கடையில் ஒரு ரூபாய்க்கு ஒரு அதிரசம் கிடைக்கும் .அதனால் 50 பைசா 50 பைசாவாக சேர்த்து வைத்து நான்கு ஐந்து முறை அதிரசம் வாங்கி சாப்பிடுவேன். ஆனால், இப்போது அதை சாப்பிட முடியவில்லை. கோடிகளில் சம்பாதித்தாலும், டயட், ஹெல்த் , மயோ சிடிஸ் பாதிப்பு என வந்துவிட்டதால் சாப்பிட முடியாத நிலை " என்கிறார் நடிகை சமந்தா.
ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா ஜோடி, ஹைதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களுடன் தங்கள் தலை தீபாவளியை கொண்டாடினார்கள். பாரம்பரிய உடைகளில் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை நடிகை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார்.
பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் தனது வீட்டை மினி இந்தியாவாக மாற்றி தீபாவளியை கொண்டாடி உள்ளார் பிரியங்கா சோப்ரா.இந்தியா உடைகள் உணவு என்று தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது.
காஜல் அகர்வால்
ராமாயணம் திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். திருமணமாகி குழந்தைக்கு தாயான பின்னாலும் அதே அழகுடன் உடல் கட்டுக்கோப்புடன் இருக்கிறார். ஃபிட்னஸ் விஷயத்தில் காஜலின் அர்ப்பணிப்பு உணர்வு எல்லோருக்குமான பாடம் என்று நெட்டிசன்கள் பாராட்டுகின்றனர்.
தமன்னா

மன அமைதிக்காக பிரசித்தி பெற்ற பல வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார். தமன்னாவின் இந்த மாற்றம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதிதி ராவ்

" எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாக்கு வந்த காரணத்தால், ஒவ்வொரு படத்திலும் எனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்க தயங்க மாட்டேன். அதே வேளையில் எனக்கு விருப்பம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க நான் சம்மதிக்க மாட்டேன் " என்கிறார் நடிகர் சித்தார்த்தின் மனைவியான அதிதி ராவ் .

Leave a comment
Upload