
ஆறு மாத கால ஆட்சியில் ஜோசப் விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் மௌனத்தில் இருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கிட்டதட்ட தன்னுடைய ஆட்சியில் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் தவிர்த்து வந்துள்ளார்.
ஜெயலலிதாவிற்கு அப்போதைய அவரது அமைச்சர்கள் ஐவர் அணியாக செயல்பட்டனர் . ஜெ கண்ணசைவில் அமைச்சர்கள் அதிர்ந்து போவர்கள்.
தற்போது முதல்வர் விஜய்க்கு அவரது அமைச்சர்கள் அறுவர் அணியாக சுதந்திரமாக வலம் வருகின்றனர்.
- சி.டி .நிர்மல் குமார்

முதல்வர் விஜயின் பிரச்சார பீரங்கி போன்று தற்போது பத்திரிக்கையாளர்களுக்கு அதிக பேட்டி கொடுத்த அமைச்சர் என்ற பட்டத்தினை தட்டி செல்கிறார்.தமிழகத்தில் கடந்த ஆட்சியை விட குற்றம் குறைந்துள்ளது என சொல்கிறார். சட்டத்துறை அமைச்சர் என்பதால் திருப்பரங்குன்றம் தீப வழக்கு முதல் கரூர் கூட்ட நெரிசலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழக்குகளில் அதிக கவனம் செலுத்துகிறார்.விஜய் அரசை எதிர்த்து யாராவது கேள்வி கேட்கும் போது ஆக்ரோஷமாக பதில் அளிக்கிறார்.
- ஆதவ் அர்ஜுனா

சீறி பாயும் இளம் காளையாக சட்டசபை முதல் பொது இடங்களில் எதிர்கட்சிகளை வறுத்து எடுக்கிறார்.ஆதவ் அர்சஜுனா பேசினால் எதிர்கட்சிகளும் சீற்றம் ஆகி எதிர்வாதம் செய்கின்றனர். முதல்வர் விஜய் மௌனம் குறித்து எதிர்கட்சிகள் பேசும் போது சீறிபாயும் அமைச்சர் முதல்வர் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் திட்டமிடுகிறார் என்று எதிர்கட்சிகளை பீதி கிளப்பும் அமைச்சராக வலம் வருகிறார்.
- ராஜ்மோகன்

பள்ளிகல்வி துறை அமைச்சர் தான் தற்போது ஹைலைட். தன் துறையில் நடந்த தகிடுத்தங்களை அலசி ஆராய்ந்து முதல்வர் விஜய்க்கு தெரிவித்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து அசத்தும் அமைச்சர் இவர். இவர் அனைத்து மந்திரிகளுடன் பேசி உடனே முதல்வருக்கு தகவல் சொல்லி பிரச்சனைகளை சரி செய்ய முயல்கிறார்.வாட்ஸ் அப் பிரச்சனை அறிந்து உரிய தனது துறை அதிகாரிகளுக்கு அடுத்த நாள் பாலோ – அப் செய்கிறார். விஜய் ஆஸ்தான மந்திரியாக வலம் வருகிறார்.
- அருண்ராஜ்

அமைச்சராவதற்கு முன்பு 15 வருடங்கள் இவர் IRS அதிகாரியாக செயல்ட்டதால் நிர்வாக திறன் மிக்கவர், அதிகம் பேச மாட்டார். நீட் மற்றும் தாய்மாமன் சீர் திட்டங்களை பட்டை தீட்டி கொண்டிருக்கிறார். பல விமர்சனங்கள் வந்தாலும் அமைதியாக தன் வேலையை பார்ப்பதில் கில்லாடி. தாராப்புரம் இடை தேர்தல் வெற்றிக்கு இவரின் பார்முலா தான் காரணம் என முதல்வரிடம் ஷொட்டு வாங்கியவர்.முதல்வர் விஜய் ரொம்ப கடினமாக பணியாற்றகூடியவர் அத்துடன் துல்லியவாதி(perfectionist) என புகழாரம் சூட்டுகிறார்.
5.செங்கோட்டையன்

முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இவரின் ஆலோசனைகள் முதல்வர் விஜய் கேட்டு கொள்கிறார்.விவசாய கடன் தள்ளுபடியில் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியபடி ரு2 லட்சம் வரை தள்ளுபடி செய்யாமல் ரு 75000 மட்டும் தள்ளுபடி செய்தது தமிழக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். முதல்வரிடம் செங்கோட்டையன் சொல்லியிருந்தால் முழுமையாக கடன் தள்ளுபடி செய்து இருப்பார் என்று தமிழக விவசாயிகள் கவலையாக இருக்கிறது. கிங் மேக்கராக சத்தமில்லாமல் வலம் வருவதாக கட்சியினர் பேச்சாக இருக்கிறது.
6.ஆனந்த்

முதல்வர் விஜயின் நம்பிக்கை பெற்ற போர்படை தளபதி. இவரும் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை பல நேரங்களில் லாவகமாக தவிர்த்து விடுகிறார். ஆனந்த் முதல்வரின் மனசாட்சி என்ற தகவலும் வலம் வருகிறது.
இவ்வளவு பேர் முதல்வர் ஜோசப் விஜய் சுற்றி சுழன்றாலும் தமிழக சட்டம் ஓழங்கு நிலைமை சரி செய்ய முடியாதது. விலைவாசி உயர்வு கட்டுபடுத்த முடியாமல் த.வெ.க அரசு திணறுவது என தொடர்கிறது.

தன்னுடைய கட்சியினர் சிலர் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவது முதல்வரின் ஆறு மாத கால ஆட்சியின் சாதனை துயரமாக இருப்பதாக அவருடன் இருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விஜய் தமிழக தாய்குலங்கள்,இளைஞர்கள் இன்னும் ஆதரவு அளித்துவருவது தான் அவருக்கு ஆறுதல் .
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக நீடிப்பது அவரது கட்சியினர் கையில் தான் இருக்கு என்பது தான் நிஜம்.

Leave a comment
Upload