கடந்த 10, 11 ஆம் தேதிகளில் தமிழக சமூக நீதி துறை அமைச்சர் வன்னியரசு தன் குடும்பத்துடன் விசிட் செய்து மசினகுடி பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் முதுமலை புலிகள் காப்பக வனத்தினுள் சென்று சுற்றியுள்ளனர்.

அமைச்சர் தன் வன ரௌண்டப்பை தன் சமூக வலை தள பக்கங்களில் ரீல்ஸாக பதிவு செய்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார்.
அமைச்சர் வன்னியரசு குடும்பத்துடன் ஜஸ்ட் சஃபாரி சென்றிருந்தால் ஓகே.
அதே சமயம் தேசிய வன சட்டத்தை மீறி புலிகள் காப்பகத்தினுள் ட்ரெக்கிங் சென்று எதோ புல் மைதானத்தில் ஓடுவது போல சென்றுள்ளார்.
அவருடன் குடும்பத்தினர் மற்றும் மசினகுடி வன கோட்ட துணை இயக்குநர் வித்யாதர்,வனசரகர்கள் அதிகாரிகள் புடைசூழ சஃபாரி வாகனத்தில் அமர்ந்து கொண்டும் புல்வெளியில் ஓடியிருக்கிறாரகள்.

இதை விட அமைச்சர் ஆயாக ரெஸ்ட் எடுத்து கொண்டிருந்த புலியை பார்த்து ஓடி செல்ல அது சற்று மிரண்டு காட்டிற்குள் ஓட அதை அமைச்சர் வன்னியரசு துரத்தி கொண்டு சென்றது தான் தில்லானா உச்சக்கட்டம் !.
அதே போல பந்திப்பூர் புலிகள் காப்பகத்தினுள் நுழைந்து சஃபாரி வாகனத்தில் சென்று யானைகளின் அருகில் சென்று அவைகளை மிரளவைத்துள்ளார்.
இவை அனைத்தையும் வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டுள்ளார் அமைச்சர்.
காட்டினுள் நுழைந்து புலியை துரத்தின முதல் தமிழக அமைச்சர் வன்னியரசு என்பது குறிப்பிடத்தக்கது என்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.

முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலே மிக பெரிய சரணாலயம் 688 சதுர கி. மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு புலிகள், யானைகள், கரடி, சிறுத்தை, செந்நாய்கூட்டம், என்று வனவிலங்குகள், தேக்கு, சந்தனம், ஈட்டி, என்று அரிய வகை தாவரங்கள் உள்ளன.
பாதுகாக்க பட்ட வன பகுதி மற்றும் வன விலங்குகளின் தாக்குதல்கள் ஏற்படும் என்பதால் யாரும் அத்து மீறி நுழைய தடை சட்டம் உள்ளது.
முதுமலை மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தினுள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் எந்த வாகனமும் நிறுத்த கூடாது, புகை படம் எடுக்க கூட தடை இருக்கிறது.
கடந்த வருடம் காரை விட்டு இறங்கி படம் எடுத்த சுற்றுலா பயணிகளை யானை தாக்கி உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.
கூடலூரில் புலி தாக்கி இருவர் இறந்துள்ளனர். அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வன துறையினர் படாதா பாடுபட்டார்கள்
இப்படி பல ஆபத்துகள் நடந்து வன துறை அதிகாரிகள் அமைச்சர் குடும்பத்தை காட்டினுள் ட்ரெக்கிங் கூட்டி சென்றது ஏன் என்ற கேள்வி குறி எழுந்துள்ளது.
புலிகள் காப்பகத்தினுள் சுற்றுலா சார்ந்த எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல் சட்டமாக இருந்தும் இந்த அமைச்சர் விசிட்டில் வன துறை அதிகாரிகள் வன சட்டத்தை மீறியுள்ளனர் என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.
புலியை துரத்தின அமைச்சர் வன்னியரசு வீடியோ இந்தியா முழுவதும் அதிர்ச்சியையும் கண்டன குரல்களை எழுப்பியுள்ளது.
வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் அறங்காவலர் சாதிக் அலியை தொடர்பு கொண்டு பேசினோம்,
" முதுமலை புலிகள் காப்பகத்தினுள் யாரும் அத்து மீறி நுழைவது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய சட்டத்தின் படி குற்றம்.
அப்படியிருக்க ஒரு அமைச்சர் வனத்தினுள் நுழைந்து ட்ரெக்கிங் போய் எதோ கார்டர்ன் புல் தரையில் ஓடுவது போல ஓடி நடந்து வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்டது மிக பெரிய தவறு.
அதுவும் வன்னியரசு வன துறை அமைச்சருமில்லை.
சமூக நீதி துறை அமைச்சர் அத்து மீறி வனத்தினுள் சென்று ஓடி ஓய்வில் அமர்ந்த புலியை துரத்தியது வன சட்டத்தின் படி குற்றம் தான்.

புலிகள் சரணாலயத்தினுள் பயணிப்போர் கூட இயற்கை உபாதைக்கு கூட வாகனத்தை நிறுத்தி இறங்க கூடாது.
எனக்கு சஃபாரி செல்வதே பிடிக்காத ஒன்று வன விலங்குகளை டிஸ்டர்ப் செய்யும் வேலை அது.
அப்படியிருக்க எப்படி காட்டினுள் ட்ரெக்கிங் சென்று ஓடி ஆடி புலியை விரட்டி வீடியோ எடுத்து ரீல்ஸ் போட்ட அமைச்சர் மேல் வன சட்டத்தின் படி வழக்கு தொடர வேண்டும். இதுவே சாதாரண மக்களாக இருந்தால் அவரின் நிலைமை கைது செய்திருப்பார்கள் !.

ஒரு வேளை அந்த புலி திரும்பி அமைச்சர் மேல் பாய்ந்து தாக்கியிருந்தால் மனித மிருக மோதல் ஏற்பட்டு அமைச்சரை காப்பாற்ற வன அதிகாரிகள் புலியை சுட்டு கொன்றிருப்பார்கள்.
நல்ல நேரம் அந்த புலி காட்டினுள் ஓடிவிட்டது.
ஒரு புலிகள் காப்பகத்தினுள் அத்து மீறி நுழைந்து ட்ரெக்கிங் சென்று புலியை துரத்தி பந்திப்பூரில் சஃபாரி சென்று யானைகளை தொந்தரவு செய்து உடன் வீடியோ கிராபரடன் சென்று படம் பிடித்து ரீல்ஸ் போட்ட அமைச்சர் மேல் சட்டப்படி வழக்கு தொடரவேண்டும் " என்று காட்டமாக கூறினார்.
இங்கிலாந்து அரசியின் கணவர் பிரின்ஸ் பிலிப் டியூக் ஆப் எடின்பெர்க் முதுமலை வந்த போது வன சட்டங்களை மதித்து நடந்து கொண்டார். யானை சவாரி மற்றும் யானைகள் முகாமை சந்தித்து அவைகளுக்கு கரும்பு ஊட்டி விட்டார்.
அதே போல நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி வன சட்டத்திற்கு உட்பட்டு வன விலங்குகளை தொந்தரவு செய்யாமல்
யானைகள் முகாமுக்கு சென்று கரும்பு ஊட்டி பின்னர் சஃபாரி சென்று விசிட் செய்து சென்றார்.
ஊட்டி அருகே உள்ள எப்பநாடு வன பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்க அதை நேரில் சென்று புகை படம் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம், முக நூலில் பதிவு செய்த மாணவர்கள் இயற்கை ஆர்வலர்களை தேடி பிடித்து மிரட்டி கூட்டி சென்று வழக்கு பதிவு செய்து 25000 அபராதம் அபகரித்த கூத்தை நடத்தினார்கள் வன துறை நேர்மை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment
Upload