
சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 250.
அப்ப இனிமேல் வெங்காயம் சாம்பார் கிடையாது ! அவ்வளவுதானே, பரவால்ல !!
1614 புதிய அரசு பஸ்களின் வண்ணம் மாற்றம்.
என்ன ? தமிழக வெற்றிக் கழக கொடி கலர்ல மாற்றி இருப்பாங்க அவ்வளவு தானே ?
தவறு செய்த யாரும் தப்ப முடியாது அமைச்சர் ராஜ்குமார் எச்சரிக்கை.
அதாவது எதிர்க்கட்சிகள் இப்படி தெளிவா சொல்லுங்க அமைச்சரே !!
காவிரி உரிமை குறித்து கர்நாடக முதல்வரிடம் விஜய் பேசாதது கவலை அளிக்கிறது தமிழிசை சௌந்தரராஜன்.
அவர் ஏதோ மற்ற எல்லார்கிட்டயும் , பேசிக்கிட்டே இருக்குற மாதிரி சொல்றாங்க அக்கா !!
சபரிமலையில் மண்டல பூஜை தொடங்கியது.
அடடா டாஸ்மாக்கிலும், மக்கள் கூட்டம் வருவது குறையுமே !!
உண்மைகளை கூறவே நான் புத்தகம் எழுதினேன் - சோனியா காந்தி.
ஆனா, போபர்ஸ் பற்றி பற்றி நீங்க எழுதி இருப்பது உண்மை இல்லை என்று ஒரு அக்கா சொல்றாங்க ?
தமிழக வெற்றிக் கழகமும் பாலியல் குற்றச்சாட்டுக்களும் என்று கூட ஒரு புத்தகம் எழுதலாம் .டிடிவி தினகரன்.
புத்தகம் ஓகே , அரசு நூலகங்கள் வாங்க மாட்டாங்க பரவாயில்லையா ?
தமிழக வெற்றிக் கழக ஆட்சி ஓராண்டு முடிந்த பிறகு ஒவ்வொரு துறைக்கும் ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் அண்ணாமலை.
பாவம், எப்படி இருந்தீங்க ! இப்படி ஆயிட்டீங்க !!
திரையில் கதாநாயகனாக நடித்து, நிஜத்தில் ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் இன்றைய முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின்.
நல்லா இருக்கு வசனம் நீங்க ஏன் சினிமா வசனம் எழுத போகக்கூடாது ? இப்ப சும்மா தானே இருக்கீங்க !!
சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டில் நாளை கனமழை வானிலை மையம் அறிவிப்பு.
அப்ப நாளைக்கு ஸ்கூல் கிடையாது அவ்வளவு தானே !!
எதிர்க்கட்சிகளின் சதி வலையில் சிக்கி விடாதீர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விஜய் அறிவுரை.
கூடவே, போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் என்று சுற்றாமல் வீட்டிலேயே இருங்கள் என்றும் சொல்லியிருக்கலாம் !!
சட்டம் ஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி.
அப்படி அடக்கினால் உடனே போலீஸ் அராஜகம் னும் சொல்லுவிங்க !!
பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாட அமெரிக்கா சொல்கிறார் ராகுல் காந்தி.
அங்க போய் மோடியையும் ஆர்எஸ்எஸ்யையும் திட்டணும் அதானே அந்தக் கலந்துரையாடல் ?

Leave a comment
Upload