
மண்டாடி.
தமிழ் சினிமா என்றில்லை எந்த சினிமாவும், ஒரு விளையாட்டை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டால் அது நிச்சயம் ஜெயிக்கும் என்பதற்கு மண்டாடி ஒரு சிறந்த உதாரணம்.
முத்துக் காளிக்கும் சாட்டப் புலிக்கும் நடக்கும் படகு போட்டி தான் ஆதாரமான கதை களம்.
மண்டாடி அதிரடி காட்டும் காரணம் அந்த பிரம்மாண்டமான கடல் களமும், வித்தியாசமான படகு போட்டியும் தான்.
படகு போட்டியின் போது தெளிவில்லாத ஆடியோ யார் யார் முன்னே செல்கிறார்கள் ஜெயிக்கிறார்கள் என்று புரியவில்லை என்றாலும் சில கிராஃபிக்ஸ் கண்களை கொஞ்சம் சிரமம்படுத்தினாலும், மிக மிக அருமையான திரைக்கதையும், விறுவிறுப்பான காட்சிகளும் படத்தை துவக்கம் முதல் இறுதி வரை தீயாக சாரி கடல் அலையாக செல்கிறது.
சூரியின் விஸ்வரூபம் படத்தில் சிலிர்க்க வைத்திருக்கிறது. குறிப்பாக சில காட்சிகள், அம்மாக்களுக்கெல்லாம் லவ் இருக்க கூடாதா என்பதும், முத்துக் காளியின் மன்னிப்பு கேட்கும் காட்சியும்.
ஒவ்வொரு கடல் காட்சியும் சீட்டின் முனைக்கு கொண்டு வருகிறது உண்மை.
மண்டாடி வித்தியாசமான கதை களம்.
மதிமாறன் புகழேந்தி கொஞ்சமும் சூரியை வீணடிக்கவில்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சக்கையாக உபயோகப்படுத்தியிருக்கிறார். அப்படியே தான் சுஹாசுக்கும்.
இசையில் ஜி.வி. பிரகாஷும் சரி, அத்தனை துணை நடிகர்களும் சரி, சத்யராஜும் சரி, கன கச்சிதம்.
ஆறு பேர் டீம் என்றதும் கடைசியில் கிளைமாக்ஸ் திருப்பத்தில் சூரி களம் இறங்குவார் என்பதும் எதிர்ப்பார்த்த இடம் என்றாலும், ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் மண்டாடி சூரிக்கு ஒரு மைல் கல் தான்.

Leave a comment
Upload