தொடர்கள்
விகடகவியார்
அனிருத் காவ்யா மாறன் காதல் திருமணம் -லைட் பாய்

2026924063001583.png

ரஜினிக்கு பிடித்த இசையமைப்பாளர் அனிருத், சன் குழுமம் தலைவர் கலாநிதி மாறனின் ஒரே மகள் காவ்யா மாறன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை நிர்வகித்து வரும் ஒரு பிரபல தொழிலதிபர். இவர்கள் இருவருக்கும் காதல் விரைவில் திருமணம் என்று சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட இரண்டு வருடமாக சுற்றி வந்த செய்தி இப்போது உண்மையாகி விட்டது. கலாநிதி மாறன் பிரதமர் மோடி முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கு திருமண அழைப்பிதழ் தந்து அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

காவ்யா மாறன் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிகாம் படித்தார். அதன் பிறகு இங்கிலாந்தில் உள்ள வார்விக் பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து எம்.பி.ஏ பட்டம் பெற்றார். இசையமைப்பாளர் அனிருத் லயோலா கல்லூரியில் படித்த பி.காம் பட்டதாரி. இது தவிர சவுண்ட் இன்ஜினியரிங் டிப்ளமோ வாங்கி இருக்கிறார். லண்டனில் புகழ்பெற்ற டிரினிட்டி இசைக்கல்லூரியில் மேற்கத்திய கிளாசிக்கல் பயிற்சியுடன் பியனோ வாசிக்கவும் கற்றுக் கொண்டார் அதில் எட்டு கிரேடுகளையும் முடித்தார். கர்நாடக இசையிலும் முறையாக பயிற்சி பெற்றார்.

காவ்யா சன் ரைஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாகி என்பதால் ஹைதராபாத் அணி விளையாடும் போது மைதானத்தில் அமர்ந்து ஆட்டத்தை கவனித்து வருவார். அவருக்கென்று பல ரசிகர் கூட்டம் இருப்பதால் நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி கேமராக்கள் அவரையும் அடிக்கடி குளோசப்பில் காட்டி ரசிகர்களை மகிழ்விப்பார்கள்.

காவ்யா மாறன் அனிருத் திருமணம் கிரீசில் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு வருகிறேன் என்று ஒப்புதல் தந்து விட்டால் முக்கிய விஐபிகள் பயன ஏற்பாடு தங்குமிடம் எல்லாவற்றையும் கலாநிதி மாறன் பார்த்துக் கொள்வார் என்கிறார்கள். அம்பானி குடும்பம் திருமணம் கூட இப்படித்தான் நடக்கும். வருபவர்களுக்கு விமான சேவை நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி கவனித்துக் கொள்வதற்கு என்று தனியாக ஒரு குழு என்று ஒவ்வொரு விருந்தினர்களையும் அம்பானி குடும்பம் பார்த்துக் கொள்ளும். அதே போல் தான் சன் குழுமம் குடும்பமும் கவனிக்க இருக்கிறது. இந்த காதல் திருமணம் நவம்பர் 11ஆம் தேதி நடக்க இருக்கிறது. கலாநிதி மாறன் தயாநிதி மாறன் இருவருக்கிடையே கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வக்கீல் நோட்டீஸ் என்று பிரச்சனை இருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போல் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தயாநிதி மாறனை அழைத்து வரும் பொறுப்பை மாமா ஸ்டாலினிடம் ஒப்படைத்து இருக்கிறார் கலாநிதி மாறன்.

பதினோராம் தேதி என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

கடைசியில் ரஜினியும், ஸ்டாலினும் சொந்தக்காரர்களாகி விட்டனர்.

சமூக ஊடகங்களில் காவ்யா மாறனுக்கு பல்லாயிரம் கோடி சொத்து இருக்கிறது,

அனிருத் பிடித்தாலும் பிடித்தார் புளியங்கொம்பு இல்லை ஒரு புளியந்தோப்பையே பிடித்து விட்டார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

நமக்கு யாருக்கு என்ன சொத்து இருந்தால் என்ன ?

வாழ்த்தி விட்டு அடுத்த வேலையை பார்க்க போக வேண்டியது தானே ???