
குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது வாங்கிய தனுஷ் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் நிருபர்கள் " நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வருகிறது இது உண்மையா? " என்று கேட்டார்கள் கேள்வி கேட்ட நிருபரை பார்த்து ஒரு நிமிடம் நின்று கவனித்து சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டார். இது நடந்தது கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் இருக்கும்.
ஆனால், இப்போது அனைத்திந்திய தனுஷ் ரசிகர் மன்றத்தின் பெயரை தனுஷ் நற்பணி இயக்கம் என மாற்றி சிவப்பு வெள்ளை நிற பின்னணியில் அவரது ட்ரேட் மார்க் வெள்ளை நிற உடையில் அரசியல் தலைவர் போலதலைக்கு மேல் கையெடுத்து கும்பிடும் ஒரு லோகோ வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.
ஏற்கனவே கோவை மாவட்டத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் நற்பணி இயக்கத்தின் பணிகளை அவரது ரசிகர்கள் இல்லை இல்லை தொண்டர்கள் தீவிரமாக செய்து வருகிறார்கள். இது தவிர நற்பணி இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பது 234 தொகுதிகளிலும் அவரது இயக்க நிர்வாகிகள் தீவிரம் காட்டுகிறார்கள்.
அடுத்த கட்டமாக தனுஷ் நற்பணி இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது பற்றியும் தனுஷ் தற்சமயம் யோசித்து வருகிறார். தனுஷ் நற்பணி இயக்கம் என்ற பெயரே பரவாயில்லையா அல்லது வேறு பெயர் வைக்கலாமா என்றும் தனுஷ் ஆலோசனை செய்து வருகிறார். தனுஷ் இயக்கு நிர்வாகிகள் நாங்கள் தேசிய அரசியலில் இப்போதைக்கு கவனம் செலுத்த விரும்பவில்லை. தமிழக அரசியல் தான் எங்கள் இலக்கு. எனவே அண்ணன் இதை ஒரு மாநில கட்சியாக தான் பதிவு செய்ய விரும்புகிறார் என்கிறார்கள். சமீப காலமாக தனுஷ் நடிக்கும் படங்கள் இந்து கடவுள்கள் குலதெய்வங்களை முன்னிலைப்படுத்தி நடிப்பதிலும் தயாரிப்பதிலும் தீவிரம் காட்டுகிறார். இதன் மூலம் இந்துக்கள் வாக்கு வங்கியை கவருவது என்பதுதான் இவர் திட்டமோ என்ற சந்தேகம் வரத் தொடங்கி இருக்கிறது. அதேசமயம் தனுஷ் நம்முடைய இலக்கு 2031 சட்டசபை தேர்தல் அதற்கு ஏற்றபடி நமது இயக்கத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்கிறாராம். ஆனால் இயக்க நிர்வாகிகள் மாறுபட்ட கருத்துடன் இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் இவற்றிலும் நமது இயக்கம் போட்டி போட வேண்டும் என்கிறார்கள். விஜய் கூட கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சித் தேர்தல் போட்டியிட்டு சில இடங்களில் வெற்றியும் பெற்றது என்பதை உதாரணம் காட்டுகிறார்கள். ஆனால் 'தனுஷ் அவசரப்பட வேண்டாம் 'என்கிறார்.

Leave a comment
Upload