கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குருவிலங்காடு என்ற ஊரில்
பிரமாண்டமாக ஒரு பெரிய மலைமேல் வீற்றிருக்கும் ஆலயம் தான் 'மார்த் மரியம் ' ஆலயம் .

இந்த ஆலயத்தின் சிறப்பே உலகத்தில் முதல் முறையாக அன்னை மரியாள் காட்சி கொடுத்தது இங்கு தான் என்பது ஆச்சிரியமான ஒன்று .
கிபி 105 ஆம் ஆண்டு உருவான ஒரு ஆலயம் .
புனித தாமசை பின்பற்றிய கிறிஸ்தவர்கள் இந்த ஆலயத்தில் இருந்து தான் கேரளாவில் கிறிஸ்தவத்தை உருவாக்கினார்கள்.
இங்குள்ள கிறிஸ்தவர்கள் நஸ்ரானிஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறார்கள் .
நாம் இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்தோம் .மிக அழகான பழமையான ஆலயம்.

ஆலயத்தின் உள் சென்று பார்க்க மெய்சிலிர்த்து போனோம் .
இங்கு உள்ள அன்னை மரியாளின் படம் புனித லுக் வரைந்தது என்று கூறப்படுகிறது இந்த படத்தை புனித தாமஸ் எடுத்துவந்து இந்த ஆலயத்தில் வைத்துள்ளார்.
இந்த ஆலயம் கி பி 105 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
அன்னை மரியாளின் முதல் காட்சி இங்கு தான் நடைபெற்றுள்ளது என்று கூறப்படுகிறது .
முதலாம் நூற்றாண்டில் இந்த மலை பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த சிறுவர்களுக்கு அன்னை மரியாள் காட்சி கொடுத்துள்ளார் .
இந்த சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டு இருக்கும்போது தாகம் பசியெடுக்க உணவு கிடைக்காமல் தவித்த பொழுது கைக்குழந்தையுடன் ஒரு பெண் வந்து என்ன வேண்டும் என்று சிறுவர்களிடம் கேட்க ."எங்களுக்கு பசியெடுக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டும்" என்று கேட்க அந்த பெண் சில கற்களை எடுத்து அவைகளை ரொட்டியாக மாற்றி கொடுத்துள்ளார் வறட்சியான அந்த பகுதியில் தன் விரல்களால் மண்ணை கீறி எடுத்து அதில் உற்று தண்ணீர் வரச்செய்து சிறுவர்களின் பசியும் தாகமும் தீர்த்துள்ளார் மரியாள் .
மாலைநேரம் ஆனவுடன் சிறுவர்கள் தங்களின் வீட்டிற்கு சென்று நடந்ததை கூற ஆச்சிரியத்தில் மூழ்கி அடுத்தநாள் சிறுவர்களுடன் பெற்றோரும் அந்த மலைக்கு சென்று பார்க்க வறட்சியான அந்த மலையில் வெள்ளியை போல அழகிய உற்று ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர். அந்த மலை பகுதியில் அது வரை தண்ணீர் உற்று என்பதே இல்லை என்பது தான் உண்மை.
(இந்த உற்று இன்றளவும் பளிச் என்று ஓடிக்கொண்டிருக்கிறது நாமும் அந்த ஊற்றில் இருந்து தண்ணீர் குடித்தோம். )
அந்த பெற்றோருக்கும் அன்னை காட்சி கொடுத்து ஆலயம் கட்டவேண்டும் என்று கூறியுள்ளார் .
மூன்று முறை அந்த சிறுவர்களுக்கு தோன்றி பேசியவர் அன்னை மரியாள் என்பது தெரியவந்து அந்த பகுதியே பரபரப்பாக மாறியுள்ளது .
அந்த சிறுவர்களும் அந்த பகுதி வாழ் மக்கள் அன்னை மரியாளை முத்தியம்மா என்று அழைக்க துவங்கியுள்ளனர் .
அன்னை மரியாள் காட்சி கொடுத்த பின் இங்கு ஆலயம் கட்டப்பட்டு புனித தாமசை பின்பற்றிய கிறிஸ்தவர்களின் தலைமையிடமாக உருவானது இந்த ஆலயம் .

'மார்த் மரியம் ' சிரோ மலபார் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் 1,921 வருடங்களை கடந்த பழமையான ஆலயம் .
உலகத்தில் உள்ள மிக பழமையன ஆலயங்களில் இந்த ஆலயமும் ஒன்று ,இங்கு உள்ள மூன்று மணிகள் 1910 மற்றும் 1911ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் உள்ள ஹாம்பர்க் நகரில் தயாரிக்கப்பட்டு கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ளது இதன் விலை அப்பொழுது 30,000 மட்டுமே !.
இந்தியாவுக்கு இந்த மணிகளை எடுத்து வந்த குருக்கள் முனிச் நாட்டில் இருந்த போனிபேஸ் மற்றும் ஆப்ரகாம்.

ஆசியாவிலே இந்த மூன்று பிரமாண்ட மணிகள் தான் மிக பெரியது என்று கூறப்படுகிறது .இந்த மணிகள் வருடந்தோறும் நடைபெறும் ஆலய ஆண்டு விழாவின் போது அடிக்கப்படும் .அதே போல கிறிஸ்துமஸ் இரவு மற்றும் ஈஸ்டர் இரவு 12 மணிக்கு இந்த மணிகள் ஒலிக்க படும் .அதிலும் இந்த மணிகளை கயிறு கொண்டு இழுத்து அடிக்க முடியாது , காலால் பெடல் செய்து தான் அடிக்கப்படும் இதற்கு என்று பயிற்ச்சி பெற்ற நபர்கள் இருக்கிறார்கள் .

இந்த மணிகள் அமைந்துள்ள கூடாரம் 'மணிமாளிகை' என்று அழைக்கப்படுகிறது .
மூன்று மணிகளின் எடை முதல் மணி ஆறு அடி உயரம் கொண்டு பெரியது 1,660 கிலோ ,இரண்டாவது மணி 1,173 கிலோ, மூன்றாவது மணி 710 கிலோ . இந்த மணிகளின் பெயர் இம்மானுவேல், செயின்ட் மேரி மெஜோர் மற்றும் செயின்ட். ஜோசப்.
இந்த மணிகள் ஒலிக்கும் போது இறைவனின் புகழ் பாடல் இசைக்க படுகிறது.
அதில் மரியாளின் "ஆவே மரியா" என்ற ஒலியும் அடக்கம் !.
மற்றொரு பழைய ஆலய மணி தினமும் ஒலியெழுப்புவது அதன் மேல் சிரியாக் மொழியில் "Mother of God"என்று பொறிக்கப்பட்டுள்ளது .

இந்த ஆலயத்தின் மற்றொரு அதிசிய நினைவு சின்னம் இங்குள்ள 30 அடி உயரம் கொண்ட கல் சிலுவை கேரளா மாநிலத்தில் எங்குமே பார்க்க முடியாத உயரமான சிலுவை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது .

அதே போல ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட அன்னை மரியாளின் சுரூபம் மற்றும் பெரிய மரத்தால் வடிவமைக்க பட்ட கப்பல் இங்கு உள்ளது .
பைபிளில் ஜோனா திமிங்கலத்தினுள் சென்று மூன்று நாள் உயிரோடு இருந்து திரும்பி வந்ததை சித்தரிக்கும் வகையில் கப்பலோட்டம் விழா பவனி நடைபெறுவது ஒரு சிறப்பான ஒன்று .
உலகத்தில் மிக பழமையான மற்றும் முதல் முறை அன்னை மரியாள் காட்சி கொடுத்த இடம் இந்த ஆலயம் என்பது இந்திய நாட்டிற்கே பெருமையான விஷயம் என்று சொன்னால் மிகையாகாது .
கத்தோலிக்க மத தலைவரான போப் ஆண்டவரின் இருப்பிடமான வத்திக்கானில் இருந்து சற்று தொலைவில் ரோமாபுரியில் உள்ள 'Esquiline Hill ' என்ற மலை மேல் உள்ள ' MotherMajero 'பேராலயம் குருவிலங்காடு மாதாவின் முதல் காட்சியை முன் வைத்து கட்டப்பட்ட பேராலயம் என்பது குறிப்பிடத்தக்கது .

அன்னை மரியாள் முதன் முதலில் காட்சி கொடுத்த குருவிலங்காடு நகரை "இந்தியாவின் வத்திக்கான் " என்று அழைக்கிறார்கள் உலக கத்தோலிக்கர்கள் .

Leave a comment
Upload