தொடர்கள்
விகடகவியார்
100 கோடி போதை பொருள் ..ஐ யாம் வெயிட்டிங் ..!-மெளனத்தில் முதல்வர்

2026923151857171.jpg

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்து முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்ற அன்று போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கவும் ஒழிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிகள் குழு அமைப்பதாக அறிவித்தார். அவரது கட்சி பிரமுகரே போரை பொருள் கடத்தில் ஈடுபட்டுள்ளது சர்ச்சையாக இருக்கிறது.

நூறு கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை கீழ் செயல் படும் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு அறிக்கை தெரிவிக்கிறது.

புலனாய்வு இயக்குனரகம் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தான் சொன்னதே தவிர ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் விவரங்களை வெளியிடவில்லை.

ஆதமிழக வெற்றிக்கழக நாகை மாவட்ட செயலாளர் எம். சுகுமாரன் வெளியிட்டிருந்த அறிக்கையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி பூபாலன் என்பவரை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்.

நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்த பூபாலன் மீது உயர்ரக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் அவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் மத்திய போதை பொருள் கட்டுப்பாட்டு உளவுத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கட்சியை விட்டு நீக்குவதற்கான காரணத்தையும் மாவட்ட செயலாளர் சுகுமாரன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

நாகை மாவட்ட கடற்கரைப்பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி மத்திய நிதித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வருவாய் புலனாய் இயக்குனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கிரிஸ்டல் மொத்தம் மைன் மொத்தம் 137 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இது என்றும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக இரண்டும் தமிழக வெற்றிக்கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது.

அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. துல்லியமான உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. வெள்ளி நிறத்தாள்களால் சுற்றப்பட்ட அதிக தூய்மை கொண்ட மொத்தாம் பெட்டமைன் என்று சந்தேகப்படும் வெண்ணிற படிகப் பொருள் 27 பொட்டலங்கள் அடங்கிய ஆறு பைகளில் கண்டெடுக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளர் என்று சந்தேகப்பட்ட பூபாலன் வீட்டில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதில் போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக கருதப்படும் 10 லட்சம் ரூபாய் கைப்பற்றியதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் செய்து குறிப்பில் தெரிவித்திருக்கிறார்கள்.

கைப்பற்றப்பட்ட போதை பொருள் மதிப்பு 100 கோடிக்கும் அதிகம் என்றும் மதிப்பிடப்பட்டு இருக்கிறது. போதைப் பொருளை ஒழித்த மாதிரி தெரியவில்லை உங்க கட்சி நிர்வாகி வீட்டில் ஒளித்து வைத்த மாதிரி தான் தெரிகிறது என்று கிண்டல் செய்கிறது.

அதிமுக ஐடி விங். புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஒரு காரை கைப்பற்றி இருக்கிறார்கள்.

அந்த கார் பூபாலனின் நண்பர் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தம். இப்போது அவரை அதிகாரிகள் தேடுகிறார்கள் அவர் தலைமறைவாக இருக்கிறார்.

புலனாய்வுத் துறை அதிகாரிகள் இது மிகப்பெரிய போதைப் பொருள் கைப்பற்றல். தமிழக கடற்கரை ஓரங்களில் இவ்வளவு மதிப்புள்ள போதைப்பொருள் நாங்கள் இதுவரை கைப்பற்றியது இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.

இவர்கள் மிகப்பெரிய போதை பொருள் நெட்வொர்க் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். .

ஜோசப் விஜய் இதற்கும் கப்சிப் தான்.