தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

நயன்தாரா

202692313531166.jpg

ரஜினி நடிக்கும் தர்மன் படத்தில் சிம்ரன், ராஷிகண்ணா, ஸ்ரீலிலா ஆகியோர் இணைந்துள்ள நிலையில் இப்போது நயன்தாராவும் அந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். அவர்தான் இந்த கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பாராம்.

வரலட்சுமி

2026923191558167.jpeg

"சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மட்டும் முக்கியமல்ல, அதனுடன் வரும் எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் மனவலிமை இருக்கிறதா என்பதை முன்கூட்டியே யோசித்து இந்த துறைக்கு வர வேண்டும்" சினிமாவில் நடிக்க வரும் பெண்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் நடிகை வரலட்சுமி.

ராஷ்மிகா மந்தனா

2026923143702430.jpg

திருமணத்திற்கு பிறகு மீண்டும் போட்டோ ஷுட்டில் ராஷ்மிகா மந்தனா அந்தப் படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி

புரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஸ்லம் டாக் படப்பிடிப்பு நிறைவு இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் சம்யுக்தா, தபு, ஜரினா வஹாப் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் தமிழ், மலையாளம் இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

ஜெயிலர் 2

ஜெயிலர் படத்தில் இரண்டு பாகங்களிலும் ரஜினிகாந்த் மருமகளாக மிர்னாமேனன் நடித்திருக்கிறார். ஜெயிலர் 2 படம் திரைக்கு வந்த பிறகு அவரது ரசிகர்கள் ரகசிய தகவல் என்ற பெயரில் உங்கள் கணவரை கொன்றது உங்கள் மாமனார் தான் என்று ஜெயிலர் படகாட்சிகளின் அடிப்படையில் அவருக்கு தகவல் அனுப்பி இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்களாம். ரம்யா கிருஷ்ணனுக்கு அவரது ரசிகர்கள் "எல்லை மீறி போறீங்கப்பா " என்று கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள்.

கஜோல்

2026923144411748.jpg

"நமது வயதை வைத்து விமர்சிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. எனவே எந்த சூழ்நிலையிலும் நடிகைகள் அதில் சுணக்கமாக இருக்கக் கூடாது. நமது வயதை நமது குடும்பத்தார் தவிர வேறு யாரும் தெரிந்துக் கொள்ளக்கூடாது" என்று நடிகைகளை உஷார்படுத்துகிறார் நடிகை கஜோல்.

சந்தானம்

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இருபதாவது படத்துக்கு 'அதிசய பிறவி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடி கோபிகா ரமேஷ் நடிக்கிறார்.

தீபிகா படுகோனே

இரண்டாவது பிரசவத்துக்கு பிறகும் தீபிகா படுகோனே பிஸியாக இருக்கிறார். ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனா நடிக்கும் ராக்கா படத்தில் நடிக்கிறார். ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தில் நடிக்கிறார். இப்போது புதியதாக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜெயிலர் 2 வசூல்

2026923144018876.jpg

ஜெயிலர் 2 வசூல் உலக அளவில் ஆறு நாட்களில் 580 கோடியை எட்டி இருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 350 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. வெளிநாட்டில் முதல் நாளே 140 கோடி வசூலை தாண்டியது. இன்னும் இரண்டு நாளில் அது 700 கோடியை தாண்டும் என்கிறார்கள்.

வித்யா பாலன்

ஜெயிலர் 2 படத்தில் வில்லிவேடத்தில் நடிக்கும் வித்யா பாலனுக்கு ரஜினி, 'நான் குட் மார்னிங் குட் ஈவினிங் என்று மெசேஜ் அனுப்பினேன் ரிப்ளையே இல்லை ' என்ற வசனம் இப்போது பேசும் பொருளானது. இதனால் இன்ஸ்டாகிராமில் வித்யா பாலனுக்கு ரசிகர்கள் குட் மார்னிங் குட் ஈவினிங் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கீர்த்தி சுரேஷ்

2026923142615765.jpg

கீர்த்தி சுரேஷ் ராதிகா ஆப்தே ஆகியோர் நடிக்கும் வெப் தொடர்' அக்கா 'தொடரின் டீசர் கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது .

பூர்ணா

2026923193017408.jpeg

2026923142414148.jpg

ஜெயிலர் 2 படத்தில் 'அல போலலோ' பாடலுக்கு நடனம் ஆடியது, ஒரு கனவு போல் உள்ளது. ரஜினியுடன் நடிப்பது எனது பல வருட கனவு என்கிறார் நடிகை.

எஸ்.ஜே.சூர்யா

ஜெயிலர் 2 படத்தில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, " நான் உதவி இயக்குனராக பணி புரிந்த போது எனது இயற்பெயரான ஜஸ்டின் செல்வராஜ் என்ற பெயரை சினிமாவுக்காக தளபதி படத்தில் ரஜினியின் கதாபாத்திர பெயரான சூர்யா என்ற பெயரை வைத்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது" என்கிறார் ஜஸ்டின் செல்வராஜ் என்கின்ற எஸ்.ஜே.சூர்யா.

சாரா அர்ஜுன்

2026923141706223.jpg

குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்போது கதாநாயகியாக இருக்கும் சாரா அர்ஜூன் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் 'ரேப்வாக்' செய்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

ரம்யா பாண்டியன்

2026923141456257.jpg

ரெட்ரோ கெட்ப்பில் எடுத்த போட்டோ ஷூட் படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து ரம்யா பாண்டியன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.