தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

2026923193552334.jpeg

2027 மார்ச்சுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல் !!

ஆஸ்தான ஜோசியர் இப்ப வேணாம்னு சொல்லி இருப்பாரு !!

40,000 நீர்நிலைகள் சீரமைக்கப்படும் நிலத்தடி நீரை பாதுகாக்க !!

ஒன்னும் அவசரம் இல்லை பொறுமையா செய்யுங்க இப்படியே சொல்லிக்கிட்டே இருங்க !!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரியில் 150 படுக்கைகளுடன் இயங்கத் தொடங்கும் இன்பதுரை எம்பி தகவல் !!

அரசாங்கத்துக்கு இந்த தகவல் தெரியாது போல இருக்கு ?

அவர் முகத்தைப் பார்த்தாலே ஓட்டு போடுவார்கள் என்றார்கள். ஆனால் 30 இடத்தில் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டி இருந்தது எடப்பாடி பழனிச்சாமி.

தோற்றுப் போய் மூன்றாவது இடத்துக்கு வந்தாலும் தலைவருக்கு இன்னும் அந்த கம்பீரம் அப்படியே இருக்கு !!

மக்கள் நீதி மையத்தின் நிர்வாக செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது.

இன்னும் கட்சியை கலைக்கலயாம் அப்படியே தான் இருக்காம் !!

நீகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் 824 எம்பிபிஎஸ் இடங்கள்.

மக்கள் இப்ப யூடியூப் பார்த்து பாட்டி வைத்தியம் பண்ணலாம்ன்னு போயிட்டாங்க ?

திமுக ஆட்சியில் 30 சதவீதம் கமிஷன் வாங்கினார்கள் வைகோ குற்றச்சாட்டு.

அப்ப கூட்டணி தர்மம், எம் பி சீட்டு இதெல்லாம் உங்கள பேச முடியாம வெச்சிடுச்சு அப்படித்தானே தலைவரே ?

மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை தமிழக வெற்றிக்கழக அரசு எடுக்க கூடாது அன்புமணி ராமதாஸ்.

தவறான முடிவு எடுப்பாங்க தவறாமல் அதை வாபஸ் வாங்கு வாங்க !!

எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம் கனிமொழி எம்.பி.

அப்படியே அதே எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலை நம்பி தேர்தலிலும் போட்டி போடுகிறோம் ? சரிதானே அக்கா !!

பாஜக தலைவர் பதவி மேலிடம் அறிவித்தால் முடிவை அறிவிப்பேன் சரத்குமார்.

ஒருவேளை, வேணாம்னு சொல்லிடு வரோ ?

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் கைது !!

ஆமா, முதல்வர் விஜய் சுத்தி சுத்தி பிரச்சாரம் பண்ண வேண்டியது ஆயிடுச்சு ?

போதை உற்பத்தி மையமாகும் தமிழ்நாடு, தள்ளாடும் காவல்துறை திமுக தலைவர் ஸ்டாலின் சாடல்.

நல்லா எதுகை மோனையோடு பேசுறீங்க, ஆனால் ஜனங்க ஓட்டு போட மாட்டேன் என்கிறார்கள் என்னத்த சொல்ல ?