தொடர்கள்
விகடகவியார்
கரப்பான் பூச்சி ஹிட் அடிக்கும் உயர்நீதிமன்றம்.

2026923191144545.jpeg

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டெல்லியில் மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

பாதுகாப்பு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் இயங்குவது நிறுத்தப்பட்டது.

தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த அத்துமீறிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ் மற்றும் ஆசுதோஷ் ரன்கா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் காவல் நீட்டிப்புக்கு எதிராக எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கேட்ட கேள்விகள் உண்மையில் யோசிக்க வைக்க கூடியவை.

கைது செய்யப்பட்ட இருவரையும் பார்த்து ,"நீதிபதி சவுரவ் தாஸ் வயது 27, ஆசுதோஷ் ரன்கா வயது 31 நீங்கள் எப்படி உங்களை ஜென்ஸீ என்று சொல்லிக் கொள்கிறீர்கள் ?

நீங்கள் யார் ?

உங்கள் அமைப்பின் நோக்கம் என்ன ?

அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க போராட உரிமை உண்டு.

ஒரே கூட்டம் புது புது காரணங்களுக்காக போராட்டம் நடத்துகிறது.

பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் அவர்கள் பின்னணி நோக்கங்கள் பற்றி சந்தேகங்கள் வராதா ?

திடீரென ஆட்சி மாற்றம் தேவை என்ற கோஷத்தை முழங்கி வருகிறீர்கள்.

ஜனநாயக நாட்டில் வாக்குகள் மூலம் தானே ஆட்சி மாற்றம் நடக்கும்?

ஆட்சி மாற்றம் தான் போராட்ட நோக்கம் என்றால் என்ன அர்த்தம்?

முந்தையப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பின், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்த மாட்டோம் என்ற உத்தரவாதம் அளித்து நிபந்தனைப் பிணை பெற்றுள்ளீர்கள்.

அந்த நிபந்தனையை மீறி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டம் நடத்த முயற்சித்து இருக்கிறீர்கள்.

பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துவார்கள் என்பதால் கடும் நடவடிக்கை தேவை என்று தீர்மானிப்பதில் என்ன தவறு " என்று கேட்டிருக்கிறார் நீதிபதி.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் உயர் அதிகாரிகள் உட்பட 118 காவல்துறையினர் கரப்பான் பூச்சியால் தாக்கப்பட்டு காயம் அடைந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

கரப்பான் பூச்சியை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகள் இந்த வன்முறையை கண்டிக்கவில்லை.

கரப்பான் பூச்சி நடத்திய போராட்டத்தில் அமெரிக்கர்கள் அதிக அளவு கலந்து கொண்டது இன்னொரு சந்தேகம்.

கரப்பான் பூச்சி கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே அவர்களுக்கு சில நூறு கோடி நிதி எப்படி வந்தது ?

அரசியல் ரீதியாக பாரதிய ஜனதாவை எதிர்க்க முடியாது என்பதால் ஓட்டு அரசியலை விட நாச வேலை அரசியல்அந்தக் கட்சிக்கு எளிதாக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

வாக்காளர் சிறப்பு சீர்த்திருத்தம் என்பது பாரதிய ஜனதா கண்டுபிடித்தது அல்ல.

1960 தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.

கேரளா சட்டசபை தேர்தல் முடிந்ததும் கேரளத்தில் உள்துறை அமைச்சர் ரமேஷ் சொன்னித்தலா காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணம் எஸ் ஐ ஆர் என்று சொன்னார்.

கரப்பான் பூச்சி கட்சியினர் பார்லிமென்ட் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குருவை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பது புரியவில்லை.

கரப்பான் பூச்சி கட்சிக்கு மறைமுகமாகப் அமெரிக்காவிலிருந்து நிதி உதவி வருகிறது என்ற தகவல் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கும் அதன் நிறுவனர் அபஜித் தீப்கேவுக்கும் அமெரிக்க நன்கொடையாளர்கள் நிதி அளிப்பதாக அமெரிக்க பாடகி மேரி மில்பென் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த தீப்கே, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிட வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அந்த நிதி உதவி பற்றி அவர் எந்த கருத்தும் முதலில் சொல்லவில்லை.

மேரியும் மில்பன் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்.

அமெரிக்காவில் கல்வி பயின்ற இளைஞர்களை மூளை சலவை செய்து அவருக்குத் தேவையான நிதி ஆதாரங்களை ஏற்படுத்திக் கொடுத்து தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பச் செய்து அங்கு குழப்பத்தை உருவாக்குவது சில நன்கொடையாளர்களின் உலகளாவிய செயல் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இவை எல்லாமே அபிஜித் தீப்கேவின் நடவடிக்கைக்கு ஒத்துப் போகிறது.

முதலில் நீதித்துறை....

அடுத்தாற்போல இந்தியாவின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தேர்வு முறை,

அதைத்தொடர்ந்து தேர்தல் துறை ....

என்று இந்திய அரசமைப்பின் ஒவ்வொரு அமைப்பாக குறி வைத்து அவற்றின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்கும்.....

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நோக்கம் ஜனநாயகத்துக்கு எதிராக மக்களை வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் அவர்கள் மீது இப்போது வரத் தொடங்கி இருக்கிறது.

கரப்பான் பூச்சிக்கு ' ஹிட்' அடித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்