
தினமலர் 75
1 மாநிலம் தாண்டி வந்த மலர்
தினமலர் நாளிதழ் கேரள மாநிலத்தில் தொடங்கி, தமிழகத்துக்குள் நுழைந்து, தமிழகமக்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டது.
திருவனந்தபுரத்தில் தொடங்கி, திருநெல்வேலிக்கு மாற்றல் ஆகி வந்தது.
2 கிளையில் தொடங்கி தலைக்கு வந்த இதழ்
சென்னையில் தொடங்கிப் பிற மாவட்டங்களுக்குப் பத்திரிகைகள் வருவதுதான் வழக்கம். ஆனால் தினமலரோ திருவனந்தபுரத்தில் பிறந்து, திருநெல்வேலிக்கு மாறி வந்து, திருச்சிக்கு என விரிவாகி, 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி சென்னையில் மூன்றாவதுமதிப்பைத் தொடங்கியது. அதன் பின்னர் அடுத்தடுத்த பதிப்புகள் வெளிவரத் தொடங்கின.
3 நாகர்கோவிலுக்கு ரயிலைக் கொண்டுவந்த இதழ்
ரயிலையே காணாத நாகர்கோயிலுக்கு ரயிலை கொண்டு வருவதற்கு முனைப்பான முயற்சிஎடுத்து வென்றவர் டிவி ராமசுப்பையர். அவருக்கு உறுதுணையாக இருந்துகளப்பணியாற்றிய பங்களிப்பு தினமலர் நாளிதழையே சாரும்.
4 குமரியை மீட்ட இதழ்
கன்னியாகுமரியைத் தாய் தமிழகத்தோடு இணைப்பதற்கான போராட்டத்தில் களமிறங்கிவீறுகொண்ட டி வி ராமசுப்பையருடன் ஒருங்கிணைந்து போர்க்குரல் கொடுத்து வந்ததுதினமலர். இதன் மூலமாக வெற்றியும் கிட்டியது. குமரி மாவட்டம் தாழ்த்தமிழகத்தோடுஇணைக்கப்பட்டது.
5 நூற்றுக்கு நூறு கல்வி
இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தார் தான் 100 சதவீதம் கல்வி அறிவுகொண்டவர்கள் என்ற நிலை உருவாயிற்று. இதற்குக் காரணமான சிபி ராமசாமி ஐயர்உடன் கூட இருந்து பாடுபட்டவர் டிவி ராமசுப்பையர். அவரின் முயற்சிகளுக்குமுனைப்பான பரப்பரை வழங்கியது தினமலர்.
6 ஜெயித்துக் காட்டுவோம்
"ஜெயித்துக் காட்டுவோம்" என்ற கல்வித்துவ நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி, மாணவர்களின் கல்வி அறிவுத்திறனை மேம்படுத்தும் பணியில் முதன் முதலில் ஈடுபட்டுச்சாதனை புரிந்தது தினமலர்.
7 வழிகாட்டி
'வழிகாட்டி' நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி, "பள்ளிப் படிப்பிற்கு பிறகு மாணவர்கள்எத்தகைய மேற்படிப்பை அணுக வேண்டும்?" என்ற வழிமுறையை வகுத்து முதன் முதலில்வழங்கி, ஆண்டுதோறும் நடத்துவது தினமலர்.
8 வெப் ஆப்செட்
தமிழ் பத்திரிக்கை உலகில், முதன் முதலில் வெப் ஆப்செட் அச்சியந்திரம் மூலமாகபளபளப்பான, தத்ரூபமான படங்களோடு வெளிவந்த தமிழ் பத்திரிக்கை தினமலர். சென்னையில் தினமலர் 1979 ஆம் ஆண்டு முதல் தினமலர் பத்திரிக்கை வெப் ஆப்செட்அச்சு இயந்திரத்தில் அச்சாகி வெளியாகி வருகிறது.
9 குடிசைக் குழந்தைகளுக்கான ஜெயித்துக் காட்டுவோம்
ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் மாநகராட்சிப் பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். அவர்களின் கல்வி மேம்பாடு கருதி, "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியைச் சென்னைமாநகராட்சியின் ஒருங்கிணைப்போடு, சென்னையில் மாநகராட்சி மாணவர்களுக்காகவேதனிப்பட்ட முறையில், "ஜெயித்து காட்டுவோம்" நிகழ்ச்சியை நடத்தியதும் தினமலர் தான்.
10 நலிந்த மாவட்டங்களில் பொலிந்த கல்வி
1980 -களின் போது தென் ஆற்காடு, வட ஆற்காடு மாவட்டங்களில் மாணவர்களின்கல்வித்தரம் பாழடைந்து கிடப்பதாக, தினமலர் நாளிதழ் ஊழியர்களின் களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்கானஉழைப்பில் தினமலர் இறங்கியது. அந்த இரு மாவட்டப் பெருவாரியான மக்களின் இனத்தலைவராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பிரமணியத்துடன் தினமலர்ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி மூன்று மணி நேரம் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் தினமலர் நாளிதழில், "மாணவர் பக்கம்" என்ற பகுதி தொடங்கப்பட்டது. வாரந்தோறும் வெளியாகி வந்த அந்த பகுதியில், வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டப்பள்ளிக்கூடங்களில் இருந்த குறைபாடுகள் குறித்துத் தொடர்ந்து. படங்களோடுஎழுதப்பட்டு வந்தது. இதனால் அரசின் கவனம் ஈர்க்கப்பட்டு, அந்த மாவட்டங்களின்கல்வித்துவக் குறைபாடுகள் படிப்படியாகத் தீர்க்கப்பட்டு வந்தன. ஆகவே மாணவர்களின்கல்வித் தரம் பையப் பைய மேம்படத் தொடங்கியது.
11 டாக்டர் ராமதாஸ்
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக 45 ஆண்டு காலமாக வலம் வந்துகொண்டிருப்பவர் டாக்டர் ராமதாஸ். அவரிடம் முதன் முதலில் அரை பக்க அளவுக்கானபேட்டியை எடுத்து, பத்திரிக்கையில் பிரசுரம் செய்து, அவரைத் தமிழக மக்களிடையேகொண்டு போய்ச் சேர்த்தது தினமலர்.
12 ஏ என் சிவராமன்
"தினமணி" நாளிதழின் ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர்
ஏ என் சிவராமன். அவரின் உழைப்பையும், கணக்கன் என்ற தலைப்பிலான அவரின்கட்டுரைகளையும் மட்டுமே பொதுமக்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் அவரின் உருவத்தைவாசகர்கள் யாருமே பார்த்திருக்கவில்லை. இந்த நிலையில் தினமலர் ஆசிரியராக இருந்தமுனைவர் இரா கிருஷ்ணமூர்த்தி தனது முனைப்பான முயற்சியின் மூலமாக, தமிழ் எழுத்துச்சீர்திருத்த இயக்கத்தைத் தீவிரமாக நடத்தி வந்தார். அதன் சார்பாக ஒரு மாநாட்டைஎழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு எதிரே இருந்த தமிழ், வடமொழி, மற்றும் பிறஇந்திய மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டிடத்தில் அதன் இயக்குனர் ஆறுஅழகப்பனுடன் ஒருங்கிணைந்து நடத்தினார். ராஜா சர் முத்தையச் செட்டியார் துவக்கிவைத்த இந்த நிகழ்ச்சியில், அப்போதைய கல்வி அமைச்சர் அரங்கநாயகமும் கலந்துகொண்டார். இதில் தலைமை தாங்கியவர் தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன். அவரின்படத்தை எடுத்து, தினமலர் நாளிதழில் பிரசுரம் செய்து தமிழக வாசகர்களுக்கு முதன்முறையாக அவரின் உருவப் படத்தை காட்டியது தினமலர்.
13 எழுத்துச் சீர்மை
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை வெகுஜனப் பத்திரிகைகள் பயன்படுத்தாமல் இருந்தகாலத்திலேயே, முதன் முதலில் 1977 ஆம் ஆண்டு திருச்சி தினமலர் பதிப்பில் அப்போதையஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தியின் முயற்சியால் அமல்படுத்தப்பட்டது.
14 இனிய இல்லம்
சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமச் சீர்கேடுகள் காரணமாக, கட்டுமானப் பணிகளில்இருக்கின்ற ஏராளமான கோளாறுகள் குறித்துத் தொடர்ந்து வாரந்தோறும் எழுதுவதற்குவசதியாக, "இனிய இல்லம்" என்ற முழுப் பக்கப் பகுதியை ஒதுக்கித் தொடர்ந்துவாரந்தோரும் செய்தி எழுதி வந்தது தினமலர்.
15 டீக்கடை பெஞ்ச்
"டீக்கடை பெஞ்ச்" என்ற பெயரில் நகைச்சுவை நையாண்டியோடு கூடிய நயவுரைப் பகுதி தமிழ் பத்திரிக்கை உலகில் முதல் முறையாக தினமலரில் தொடங்கப்பட்டது.
16 வாரமலர்
"வாரமலர்" என்ற பெயரில் தினமலர் நாளிதழோடு இணைப்பு இதழ் வழங்கித் தமிழ்பத்திரிகை உலகில் புதிய புரட்சியைப் பிறப்பித்தது தினமலர்.
17 எழுத்தாளர் கிசு கிசு
தினமலர் பத்திரிக்கையுடன் சனிக்கிழமைகளில், "கதை மலர்" இணைப்பிதழும்விநியோகிக்கப்பட்டது. இதில் முதன்முதலாக, பிரபல எழுத்தாளர் விக்ரமன்ஆலோசனையின் பேரில், எழுத்தாளர்கள் பற்றிய கிசு கிசு பகுதியை, "கல்லுளி மங்கன்" எழுதுவதாகத் தொடங்கப்பட்டது.
18 வெப் ஆப்செட்
தினமலர் தான் முதன் முதலில் வெப் ஆப்செட் அச்சு இயந்திரம் மூலமாக முழுப் பக்கச் சினிமா புகைப்படங்களை வெளியிடுகின்ற புதிய பாணியை அறிமுகப்படுத்தியது.
19 ஆழிப் பேரலை
'சுனாமி' என்ற புதிய சொல் 2004 ஆம் ஆண்டு அறிமுகமானது. அந்த ஆங்கிலச்சொல்லுக்கு, "ஆழிப்பேரலை" என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்திய முதல் பத்திரிகைதினமலர்.
20 ஸ்ரீ லிபி
'ஸ்ரீ லிபி' என்ற பெயரில் "கிருஷ்ணமூர்த்தி டிசைன்ஸ்" எனும் எழுத்துருக்கள் உலகெங்கும்உலா வந்து கொண்டிருக்கின்றன. இவற்றைக் கண்டுபிடித்து வெளியிட்டது தினமலர்ஆசிரியராக இருந்த முனைவர் இரா கிருஷ்ணமூர்த்தி. அவர்களின் இந்த முயற்சிக்கானகளப்பணியை தினமலர் தான் செய்து கொடுத்தது.
21 தூர்தர்ஷன் திரைப்படம்
எண்பதுகளின் ஆரம்பத்தில் தூர்தர்ஷனில் ஞாயிறு தோறும் சிறப்புத் திரைப்படம்ஒளிபரப்பாகி வந்தது. "இது எந்த படம்?" என்பது மக்களிடையே அப்போதைய பரபரப்பானபேசுபொருளாக இருந்தது. சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கென்றே தனிநிருபரைப் போட்டு,
முன்னதாகவே அந்தப் படத்தின் பெயர், படம் மற்றும் கதைச் சுருக்கத்தை வெளியிட்டு,
வெற்றிக்கொடி நாட்டி வந்தது தினமலர்.
22 நாணயவியல் விழிப்புணர்வு
தொல்லியல், குறிப்பாக நாணயவியல் தொடர்பான விழிப்புணர்வு தமிழக மக்களிடையே1980 ஆம் ஆண்டுகளில் போது போதிய அளவுக்கு இல்லை. இதனால் நதியோரம் ஒதுங்கியபல்லாயிரக்கணக்கான பண்டைய காலத்து நாணயங்கள் திரட்டப்பட்டு, உருக்கலுக்குஅனுப்பப்பட்டு, பாத்திரங்களாக மாறி வந்து கொண்டிருந்தன. தினமலர் ஆசிரியர் முனைவர்இரா கிருஷ்ணமூர்த்தியின் ஆராய்ச்சி முயற்சிகளாலும், தினமலர் நாளிதழ் தொடர்ந்துநாணயவியல் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களைச் செய்திகளாகவும், படங்களாகவும் வெளியிட்டு வந்த காரணத்தாலும், அந்த நாணயங்கள் இப்பொழுதுஉருக்கலுக்குக் செல்லப்படுவதில்லை அதற்குப் பதிலாக அவை பண்டைய நாணயவிற்பனையாளர்கள் கைக்கோ, ஆராய்ச்சியாளர்களின் கைக்கோ வந்து சேருவது என்றஅளவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம்தினமலர்.
23 அணு ஆராய்ச்சி
"அணுசக்தி ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பண்டைய நாணயங்களின்ஆய்வுப் பணிகளையும் நடத்த முடியும்" என்று முதன் முதலில் நிரூபித்துக் காட்டியவர்தினமலர் ஆசிரியராக இருந்த முனைவர் இரா கிருஷ்ணமூர்த்தி. இதற்கு ஒத்துழைப்புவழங்கியவர் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனராக இருந்த முனைவர்ஃபிளாஸிட் ரோட்ரிக்ஸ் ஆவார். இந்தப் பணியில் தீவிர ஒத்துழைப்பை வழங்கியதுதினமலர்.
24 புதுவை தேர்தல் களப் புரட்சி
தேர்தலில் நிற்கின்ற பிரபலமான கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு மட்டுமேபடங்களையும், பேட்டிகளையும் என, பக்கம் பக்கமாக போடும் வழக்கம் நாளிதழ்களுக்குஉண்டு. ஆனால் தினமலர் முதல் முதலாக, புதுவைச் சட்டமன்றப் பொது தேர்தலின் போது, சுயேச்சை வேட்பாளர்களைக் கூட படம் எடுத்து, பேட்டி எடுத்து அரை பக்க அளவில்தொடர்ந்து வெளியிட்டு, பாமர நிலையில் இருந்த ஜனநாயக ஜனங்களைக் கூட ஜொலிக்கவைத்த சாதனையைப் பொறித்தது தினமலர்.
25 சிக்மகளூரில் இந்திரா காந்தி
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில்இந்திரா காந்தி போட்டியிட்டபோது, தினமலர் செய்தியாளர் குழு அங்கே முகாம் இட்டது. நேருக்கு நேர் தேடித் திரட்டிய செய்திகளும், படங்களும் தமிழகத்தில் விரிவாகவெளியாக்கிச் சாதனை புரிந்தது தினமலர்.
26 என்டிஆர் மாநாடு
என்டி ராமராவ் தலைமையில் தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கான்கிளேவ்' என்றசிறப்பு மாநாடு விஜயவாடாவில் நடந்தபோது, தினமலர் நாளிதழ் செய்தியாளர்களையும், புகைப்படக்காரர்களையும் அனுப்பி, விரிவான செய்திகளைத் தத்துரூபமானபுகைப்படங்களோடு வெளியிட்டது.
27 ஹிந்து நாளிதழுக்குதவி
ராஜீவ் காந்தி படுகொலையின் போது, புகைப்படங்களை எடுக்க ஹிந்து நாளிதழ் யாரையும்அனுப்பி வைக்கவில்லை. இதனால் அந்தப் படங்களை வெளியிட முடியாத சூழ்நிலையில்தவித்தனர். அப்போது இந்து நாளிதழ் நிர்வாகப் பொறுப்பாளர்களின் சார்பில், நள்ளிரவில்இந்து பத்திரிகையின் செய்தியாளர்கள் தினமலர் நாளிதழுக்கு வந்து வேண்டுகோள்விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட தினமலரின் ஆசிரியராக இருந்த முனைவர் இராகிருஷ்ணமூர்த்தி, இரண்டு புகைப்படங்களைக் கொடுத்து உதவினார். உலகப் பெரும்முக்கியத்துவம் கொண்ட ஒரு செய்தியைப் போடுவதற்குப் படங்கள் இல்லை என்றஅவமதிப்பு, பாரம்பரியப் பெருமைமிக்கப் புகழ் வாய்ந்த பத்திரிக்கைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு தினமலர் அந்த உதவியைச் செய்தது.
28 வர்மா கமிஷன்
"ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீபெரும்புதூரில், பாதுகாப்பு ஏற்பாடுகளில்குளறுபடிகள் இருந்தனவா?" என்பது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே எஸ் வர்மாதலைமையில் வர்மா கமிஷன் புது டெல்லியில் விசாரணை நடத்தியது. அந்த செய்தியின்முழு விவரங்களையும் தொகுத்து எழுதுவதற்காக சென்னையில் இருந்தே ஒருசெய்தியாளர் புது டெல்லியில் ஆண்டுக் கணக்கில் முகாமிட்டிருந்தார். தினமலரில் இந்தசெய்திகள் பக்கம் பக்கமாக தினந்தோறும் வெளியாகித் தமிழக மக்களிடையே பெரும்பரபரப்பைக் கிளப்பின. மற்ற பத்திரிகைகளில் இரண்டு மூன்று பத்திகளில் மட்டுமே வந்தசெய்திகள் இவை.
29 ஜெயின் கமிஷன்
" ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் இருந்த சதி என்ன?" என்பது குறித்துவிசாரணை நடத்த, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற மிலாப் சந்த் ஜெயின்தலைமையில், "ஜெயின் கமிஷன்" புதுடில்லியில் விசாரணை நடத்தியது. விக்யான் பவனில்நடந்த இந்த விசாரணைச் செய்திகளையும் தினமலர் சிறப்புச் செய்தியாளர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் சென்று முகாமிட்டு, பக்கம் பக்கமாக எழுதித் தமிழகமக்களை வியப்பில் ஆழ்த்தினார். இந்த செய்திகளும் மற்ற நாளிதழ்களில் இரண்டு அல்லதுமூன்று பத்திகளில் மட்டுமே வந்தவை என்பது எண்ணிப் பார்க்கத்தக்கது.
30 அரசியலில் ஜெ
தமிழக அரசியலில் ஜெயலலிதா பரபரப்பாகக் களமாடி வந்த காலகட்டத்தில், அவரை 'ஜெ' என்றே சுருக்கி தினமலர் தலைப்பு போடத் தொடங்கிற்று. இத்தலைப்பையே மற்றபத்திரிகைகளும் பின்பற்றும் அளவுக்கான புதிய பாணி அப்போது அரங்கேறிற்று.
31பருவ இதழ் பாணி
"பருவ இதழ்களின் பாணியே நாளிதழ்களிலும் பயணிக்க வேண்டும்" என்ற அந்துமணியின்கொள்கை முடிவை அமல்படுத்திய முதல் இதழ் தினமலர்.
32 செகண்ட் ஃபிரண்ட் பேஜ்
ஒரே நாளில் முதல் பக்கத் தலைமைச் செய்திக்குரிய முக்கிய தகவல்கள் கிடைத்துவருகின்றன. ஒரு செய்திக்கான முக்கியத்துவம் முதல் பக்கத்தில் கிடைத்துவிட்டால், மறுசெய்திக்கான சிறப்பு மங்கிப் போகிறது. இதனை மாற்றிக் காட்டவே, "செகண்ட் ஃபிரன்ட்பேஜ்" என்ற புதிய பாணியை அறிமுகப்படுத்தியது தினமலர்.
33 சொல்கிறார்கள்
'சொல்கிறார்கள்' என்ற தலைப்பில் புதிய அம்சம் தினமலரில் உண்டு. மற்ற பத்திரிகைகளில்வெளியாகி, ஓரளவுக்கு வாசகர்களிடம் சென்று சேர்ந்த முக்கியமான தகவல்களைக்கொண்ட பேட்டிகள், தினமலரின் 'சொல்கிறார்கள்' பகுதியில் தினந்தோறும் வெளியாகியவருகின்றன. இதனால், மூலச் செய்தியின் மூலமாகக் கிடைத்த வாசகர்களின்எண்ணிக்கையை விட தினமலர் மூலமாகக் கிடைத்த வாசகர்களின் எண்ணிக்கைபன்மடங்கு அதிகம்.
34 விமானத்தில் பறந்த
எம்ஜிஆர் படங்கள்
எம்ஜிஆர் மறைவெய்திய நாளில், சரித்திரச் சிறப்பு மிக்க புகைப்படங்களை, தினமலர்புகைப்படக் கலைஞர்கள் எடுத்தனர். இவற்றைச் சென்னையில் இருந்து தனி விமானம்மூலமாகத் திருச்சிக்கும், மதுரைக்கும் ஏந்திச் சென்று, அந்தந்த பதிப்புகளில், தினமலரில்வெளியிட வைத்து, புதிய புரட்சியை அரங்கேற்றியது தினமலர்.
35 சன்டேன்னா ரெண்டு
"சன்டேன்னா ரெண்டு" என்ற திட்டத்தை விளம்பரப்படுத்த வைக்கப்பட்ட அறிவிப்புப்பலகைகள், பார்வையாளர்களை சஸ்பென்ஸில் தவிக்க வைத்து, தமிழகத்தையே கலக்கவைத்தது தினமலர்.
36 ஊழியர் நலன
தினமலர் தலைமை நிருபர் ராஜா ராம் மறைவின்போது, அவரின் இறுதிச்சடங்குகள்செலவிலிருந்து, அவர் அடகு வைத்த நகைகளை மீட்டுத் தந்தது, 15 நாட்கள் வரைவந்தோரையெல்லாம் வீட்டில் உணவாட வைத்தது, அவரின் பெண் பிள்ளைகளின் பெயரில்சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தில் வைப்பு நிதித் திட்டம் உருவாக்கியது, ஒரு மகளுக்குதினமலரிலேயே வேலை கொடுத்தது, பெண் மக்களின் திருமணங்களின் போது உரியஉதவிகளைச் செய்தது என தொழிலாளர் நலத் திட்டங்களில் முன்னிலை வகித்ததுதினமலர்.
37 ஜெயலலிதா புகார்முறியடித்த தினமலர்
அசாதாரண அரசியல் சூழலின் போது, "28 பெட்டிகளோடு ஜெயலலிதா டெல்லி விஜயம்" என்று தினமலர் செய்தி வெளியிட்டது. ஜெயலலிதாவோ கடும் கண்டனத்துடன் அந்தசெய்தியை மறுத்தார். டில்லி ஓட்டலை காலி செய்துவிட்டு, ஜெயலலிதா சென்னைக்குக்கிளம்ப இருந்த சமயத்தில், அவரின் 28 பெட்டிகளும் ஹோட்டலின் போர்டிகோவில்கொண்டு வந்து வைக்கப்பட்டன. அதற்காகவே விடிய விடிய காத்திருந்த நம்செய்தியாளர்கள், அந்த 28 பெட்டிகளையும் படம் எடுத்து, தினமலரில் வெளியிட்டனர். ஜெயலலிதா பற்றிய தினமலர் செய்தியின் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்தி நிரூபிக்க, தினமலர் ஊழியர்கள் எத்தகைய அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள்என்பதற்கான சான்று இது.
38 பல்கலை சென்ட் ஹால்
சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் ஹால் தற்போது புதுப்பொலிவோடுசீரமைக்கப்பட்டுக் காட்சியளிக்கிறது. தினமலர் நாளிதழின் நேரடி முயற்சியால்திரட்டப்பட்ட நிதியின் மூலமாகத்தான் இந்த சீரமைப்புத் திட்டம் சிறப்பாக நிறைவேறியது.
39 எம்.ஏ. ஆன பி.ஜே.
சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் துறை உண்டு. பட்டப்படிப்பு மாணவர்களைச்சேர்த்துக்கொள்ளும் இந்த படிப்பில் தேர்ச்சி பெற்றோருக்கு, "பேச்சுலர் ஆஃப் ஜர்னலிசம்" என்ற அண்டர் கிராஜுவேட் பட்டம் தான் தந்துவந்தார்கள். தினமலர் ஆசிரியர் கிராமசுப்புவின் நேரடி நடவடிக்கையின் மூலமாக, "பேச்சிலர் ஆப் ஜெர்னலிசம்" என்ற யு ஜிபட்டம், பின்னர் பி ஜி பட்டம் என...எம். ஏ. என்ற போஸ்ட் கிராஜுவேட் தகுதியோடு திகழத்தொடங்கியது.
40 வங்கிக் கல்விக் கடன்
தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சியில், "வங்கிகளில் கல்விக் கடன் பெறுவது எப்படி?" என்பதுபற்றிய விரிவான சொற்பொழிவு நிகழ்த்த, வங்கிப் பொறுப்பாளர் ஒருவரைப் பேசவைத்தோம். அவர் பேசிய அந்த உரை, தினமலரில் விரிவாக வெளியாயிற்று. தமிழகம்எங்கும் இந்த செய்தியின் தாக்கம் வீரியமாகப் பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாகவங்கியை மொய்க்கத் தொடங்கினர். இதுவே அரசியல் பிரச்சினையாக மாறி, மத்தியஅரசின் கவனத்திற்குச் சென்றது. "வித்யாலட்சுமி போர்ட்டல்" என்ற ஒரு தனிஇணையதளத்தை மத்திய அரசு தொடங்கியது. "மேல்படிப்பு படிக்கச் செல்கின்ற யார்வேண்டுமானாலும் இதன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்" என்ற சிறப்பு உத்தரவைமத்திய அரசு பிறப்பித்தது. தற்போது அந்தத் திட்டம் மிகச் சிறப்பான நடைமுறையில்செயல்பட்டு வருகிறது. இதற்குக் காரண கர்த்தாவாக இருந்தது தினமலர்.
41 துணுக்கு மூட்டை
படப்பிடிப்பின் போது நடக்கும் காட்சிகளை மட்டுமே, "சினிமா செய்திகள்' என்று எழுதிவந்த காலம் ஒன்றுண்டு. படப் பிடிப்பையும் தாண்டிய பல்வேறு திரையுலக ருசிகரங்களைஎழுதி, வாசகர்களின் விழி நுகர் சிந்தனைகளை மாற்றியது தினமலர். இதற்கு உதாரணம்தினமலர் வாரமலரில் வெளியாகும், "துணுக்கு மூட்டை" பகுதி.
42 அங்கோர்வாட் கோயில்
உலகிலேயே மிகப்பெரிய சிவன் கோயில் இந்தோனேசியாவில் அன்கோர்வாட் என்றநகரில் இருக்கிறது. இது பற்றித் தமிழர்களுக்கு எந்த விதமான தகவலும் தெரியாத நிலைதான் இருந்தது. தினமலர் ஆசிரியராக இருந்த முனைவர் இரா கிருஷ்ணமூர்த்தியோ, "இந்தகோயிலைச் சுற்றி பார்த்து, தமிழக மக்களுக்குத் தகவலைத் தர வேண்டும்" என்றுமுனைந்தார். தன் இல்லத்தரசி யாருடன் சென்றார். அவருடன் வேண்டி விரும்பி உடன்பயணித்தவர் தமிழ்நாடு தொல்லியல் துறையின் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றமுனைவர் இரா நாகசாமி. கோயிலைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டினார். படங்களையும் எடுத்தார். விரிவான ஆய்வு நடத்தினார். அதனை தினமலர் நாளிதழில்கட்டுரைகளாக எழுதித் தமிழக மக்கள் இடையே அங்கோர்வாட் கோயிலைப் பற்றியபுரிதலை உண்டாக்கி கொடுத்தார். அவர்தான் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி. பரப்பியதுதினமலர்.
43 புலனாய்வின் நலனாய்வு
சிறந்த புலனாய்வுப் பத்திரிக்கைகளுக்கு டி வி ராமசுப்பையர் நினைவுக் கோப்பை பரிசுவழங்குகின்ற திட்டத்தை தினமலர் ஆசிரியராக இருந்த இரா கிருஷ்ணமூர்த்தியும், அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் மோகனும் வடித்தெடுத்தனர். தினமலரும், மயிலாப்பூர் அகடமியும் ஒருங்கிணைந்து இதற்கான பரிசளிப்பு விழாவைமயிலாப்பூர் பாரதி வித்யா பவனில் முதன் முறையாக நடத்தின. அப்போதைய மராட்டியமாநில ஆளுநரும், பின்னாளில் குடியரசுத் தலைவராக உயர்ந்தவருமான முனைவர் சங்கர்தயாள் சர்மா கலந்து கொண்டு, விருதுகளை வழங்கிகக் கௌரவித்தார்.
அடுத்த ஆண்டுக்குரிய பரிசளிப்பு விழா மியூசிக் அகடமியின் சிற்றரங்கில் நடந்தது. அப்போதைய ஆளுநர் குரானா பங்கேற்று, விருதுகளை வழங்கினார். ஜஸ்டிஸ் மோகன்தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று,
கர்நாடகத்திற்கு மாற்றலாகிச் செல்லும்வரை இத்திட்டம் நீடித்தது.
44 செய்திச் சுதந்திரத்தை மீட்டெடுத்த தினமலர்
பத்திரிக்கைச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் கொடும் சட்டம் ஒன்றை எம்ஜிஆர் கொண்டுவந்திருந்தார். அப்போது கொதித்தெழுந்த தினமலர் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி, இதரபத்திரிக்கை ஆசிரியர்களோடு ஒருங்கிணைந்து, களம் கண்டு போராடினார்.
இதற்கான வியூகக் களம் தினமலரிலேயே நிகழ்ந்தது. வீதியில் நின்று கொடி பிடித்துக்கோஷமிட்டார் தினமலர் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தி. இதனால் மனம் மாறிய எம் ஜிஆர், இந்த சட்டத்தைத் திரும்பப் பெற்றிட ஆலோசனைக் குழுவை அமைத்தார். அதில்தினமலர் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றுக் கடுமையான கண்டனக்கருத்துக்களைப் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த பத்திரிகைக் கட்டுப்பாட்டுச்சட்டம் திரும்பப் பெறப்படுவதாக எம்ஜிஆர் அறிவித்தார். ஈரோடு தினமலர் பதிப்புவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய எம் ஜி ஆர், இந்த தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறார்.
45 தொலைக்காட்சி இதிகாசம
தூர்தர்ஷன் மட்டுமே செயல்பாட்டில் இருந்த காலம் அது. ராமாயணம், மகாபாரதம் போன்றஇதிகாசங்கள் ஹிந்தியில் தொடர்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும்வெளியிடப்பட்டு வந்தன. அவற்றைப் பார்த்த தமிழக மக்கள், மொழியைப் புரிந்து கொள்ளமுடியாமல் லயிப்பில் தவித்தனர். அப்போது தொடர் வெளியாக இந்த நாளன்றே தினமலர்நாளிதழில் அந்தத் தொடர் உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டு வந்தன.
46 குற்றாலம் சீசன்
"குற்றாலம் சீசன்" என்ற பெயரில், வாசகர்களை அவ்வப்போது தெரிவு செய்து, தொடர்ந்துஆண்டுக் கணக்கில் அவர்களைக் குற்றாலத்திற்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சி முகாம்நடத்தியது தினமலர். வாசகர்களுடன் ஒருவராக லூஸ் மோகன் போன்ற பிரபலங்களையும்உடன அழைத்துச் சென்று சுற்றுலாவுக்குச் சுகம் கொடுத்தது தினமலர்.
47 சென்னையே உன்னை ஆராதிக்கிறேன்
"சென்னையே உன்னை ஆராதிக்கிறேன்" என்ற பெயரில் ஒரு தனிப் பகுதியை நாளிதழில்ஒதுக்கி, மாநகரின் மக்கள் பிரச்சனைகளைப் படங்களுடன் தினந்தோறும் பிரசுரித்து, அரசின் கவனத்தை ஈர்த்தது தினமலர்.
48 கையூட்டே கூடாது
'நவமணி' நாளிதழ் பயன்படுத்திய, மந்தை வெளியில் இருக்கும் அச்சுக்கூடம் மற்றும் இதரபணிகளுக்கான நிலம் மற்றும் கட்டிடம், நவமணியின் நலிவுக்குப் பிறகு, தமிழக அரசின்பொறுப்பில் கிடப்பில் இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அந்தசொத்தினை, ஒரு சில லட்சம் ரூபாய் விலைக்கு தினமலர் நாளிதழுக்குத் தர அரசாங்கமேமுன் வந்தது. ஆனால் தினமலர் நாளிதழ் ஆசிரியர் இரா கிருஷ்ணமூர்த்தியோ , "இதனைக்கையூடாகத்தான் கருத முடியும்" என்று கூறி, ஏற்க மறுத்து விட்டார். செய்தியின் நேர்மைபிறழ்ந்து விடக்கூடாது என்பதற்கான தினமலரின் முடிவு தியாகபூர்வமானது.
49 தமிழில் டெலி பிரிண்டர்
"தமிழில் இயங்கக்கூடிய டெலி பிரிண்டரை கண்டுபிடித்துத் தயாரித்துக் கொடுங்கள். தினமலர் நாளிதழுக்கு 100 டெலிபிரின்டர் களை வாங்கிக் கொள்கிறோம்" என்றுசென்னை கிண்டியில் உள்ள ஹிந்துஸ்தான் டெலிபிரண்டர்ஸ் நிறுவனத்தார் ரோடுபேச்சுவார்த்தை நடத்தி, அதற்கான திட்டத்தில் வெற்றி கண்டவர் இரா கிருஷ்ணமூர்த்தி. அந்தப் பெருமை தினமலரையே சாரும்.
50 மாநிலத் தோழமை
1979 ஆம் ஆண்டு ஏப்ரலில் தினமலர் நாளிதழ் வெளியீட்டு விழா அன்று இலவசமாகவிநியோகம் செய்வதற்காக தினமலர் நாளிதழின் தோற்றம் மற்றும் வளர்ச்சி தொடர்பானஒரு சிறிய நூல் அச்சிடப்பட்டிருந்தது. அந்த நூலின் நூற்றுக்கணக்கான பிரதிகள்நெல்லையில் அச்சாகி சென்னையில் குவிக்கப்பட்டன. கடைசி நேரத்தில், "அவற்றைவிநியோகிக்க வேண்டாம்" என்று தினமலர் நிறுவனர் டிவி ராமசுப்பையர் முடிவு செய்துஅறிவித்துவிட்டார். ஏன்? "கன்னியாகுமரியைத் தாய்த் தமிழகத்தோடு இணைப்பதற்கானகடும் போராட்டத்தில் தீவிரமாக இறங்கிச் செயல்பட்டது தினமலர். அதில் வெற்றியும்கிட்டியது. இதனால் திருவிதாங்கூர்- கொச்சின் சமஸ்தானம் மற்றும் கேரள வாசிகள் டிவிராமசுப்பையர் மீது, குறிப்பாக தினமலர் நாளிதழின் மீது கடுமையான கோபம்கொண்டிருந்தனர். இதனால் பல்வேறு அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இவை தொடர்பான விரிவான விளக்கங்கள் அந்த சிறு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. "ஐம்பதுகளின் தொடக்கத்தில் நடந்த இந்த சம்பவங்களை, எண்பதுகளில் வெளியிட்டு, இரு மாநில உறவுக்குப் பங்கம் தேடி விடக்கூடாது" என்ற சகோதரத்துவ உணர்வோடுஅந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
51 டீ கப் மூஞ்சி
"டீ கப் மூஞ்சி" என்ற ஒரு கற்பனா வடிவத்தை, உயிருள்ள உருவத்தோடு பிணைத்துவைத்துப் பிரபலப்படுத்தியது தினமலர். இன்றுவரையிலும் கூட, "யார் அந்த டீக்கப்மூஞ்சி?" என்று ஆவல் தாளாமல் அலைபாய்கின்ற வாசகர்களைக் காண முடியும்.
52 ஆலைக் கழிவுகள்
வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் கழிவு நீர், ஆற்றில்கலப்பதால் விவசாயம் பாழாவதுடன், மக்களின் ஆரோக்கியமும் பாதிப்புக்கு உள்ளாகிவந்தது. தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள் ஆற்றில்கலப்பது தொடர்பான விரிவான கட்டுரைகள் வாரந்தோறும் தொடர்ந்து மூன்றுமாதங்களுக்கு தினமலர், உரிய விளக்கப்படங்களோடு வெளியிட்டு வந்தது. இதுமிகப்பெரும் சமுதாயப் பிரச்சனையாகி, சட்டச் சிக்கலாகி, உச்ச நீதிமன்றம் வரைசென்றது. ஆற்று நீரை மாசு படுத்தியக் கழிவு நீரை வெளியிட்ட 440 தோல்தொழிற்சாலைகள் அதிரடியாகத் தடை செய்யப்பட்டன. அனைத்துப் பிரச்சனைகளுக்கும்ஒரே தீர்வாக, அரசாங்கத்தின் நேரடிப் பங்களிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்மதிப்பீட்டில், "பொதுச் சுத்திகரிப்பு மையம்" உருவாக்கப்பட்டது. அனைத்துத்தொழிற்சாலைகளிலும் இருந்து வெளிப்படுகின்ற கழிவு நீர், இந்த சுத்திகரிப்பு மையத்தின்மூலமாகச் சுத்தப்படுத்தப்பட்டு, பின்னர் ஆற்றில் கலக்க விடப்பட்டது. இதனைச்செயல்படுத்த அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தினமலர்.
53 ஹிந்தி பயிற்சி
தேசிய அளவில் பணியாற்றவும், பயணப்படவும் ஹிந்தி மொழி அவசியம் என்று தினமலர்கருதியது. அதன் விளைவாக சென்னை தினமலர் அலுவலகத்திலேயே ஒரு தனிப் பயிற்சிநடத்தி, ஊழியர்களுக்குக் காலை வேளைகளில் ஹிந்தி மொழி கற்றுத் தந்தது தினமலர்.
54 பஞ்சாங்க காலண்டர்
பஞ்சாங்கத்தோடு கூடிய காலண்டரை வடிவமைத்து, வருடந்தோறும் வழங்கி வருவதுதினமலர்
55 பட்டம்
'பட்டம்' என்ற கல்வித்துவப் பக்கங்களின் மூலமாகப் பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடமாகஇருப்பது தினமலர்.
56 குடியிருப்புத் திருவிழா
குடியிருப்புத் திருவிழாக்களைத் தொடர்ந்து தொய்வின்றி நடத்தி, வாசகர் இல்லங்களில்வசந்தத்தை வழங்கி வருவது தினமலர்.
57 சிறுவர் மலர்
சிறுவர்களுக்கென்றே தனியாக, "சிறுவர் மலர்" என்ற தனிப் புத்தகத்தை, தினமலர்நாளிதழோடு இணைத்து, இலவசமாகத் தொடர்ந்து வழங்கும் பாணியைத் தொடங்கிவைத்தது தினமலர்.
58 அரிச்சுவடி ஆரம்பம்
முதன் முதலில் கல்வி கற்க வருகின்ற குழந்தைகளை, விஜயதசமி நாளில்பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது தமிழ்ப் பாரம்பரியப் பண்பாடு. அதனை முன்னிட்டு, "அரிச்சுவடி ஆரம்பம்" என்ற பெயரிலான திட்டத்தை ஆண்டுதோறும் செயல்படுத்தி வருவதுதினமலர்.
59 பாடக்குறிப்புகள்
பள்ளிப்படிப்பில் உயர, பாடக்குறிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவது தினமலர்.
60 தேர்வுத் துணைவன்
அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடப்பதற்கு முன்னதாக, அவற்றில் வெற்றி பெறுவதற்குத்துணை புரியக்கூடிய வினா- விடை பகுதியைத் தொடங்கி, அவ்வப்போது வெளியிட்டுவருவது தினமலர்.
61 உலகச் செய்திகள்
அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, தென்கொரியா போன்ற 45 நாடுகளில் நிருபர்களைப் பணியமர்த்தி, நேரடியாகச் செய்திகளைத் திரட்டி வெளியிட்டுவரும் ஒரே தமிழ் நாளிதழ் தினமலர்.
62 முதல் பக்கம் முழுதும் விளம்பரம்
பத்திரிக்கையின் முதல் பக்கத்தை முற்றிலுமாக விளம்பரத்துக்கு ஒதுக்குவது என்ற புதியபாணியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய தமிழ்ப் பத்திரிகை தினமலர். இதன் மூலமாகஉற்பத்திப் பொருட்களின் தன்மை நுகர்வோருக்குப் பளிச்செனச் சென்று சேர்ந்தது. நிறுவனப் பொருட்களின் விற்பனை கூடியது. பத்திரிக்கைக்கும் வருமானம் பெருகியது. இவ்வாறான முத்தரப்புப் பணப்பயன் திட்டத்தை இதர பத்திரிகைகளும் நடைமுறைக்குக்கொண்டு வருவதற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது தினமலர்.
63 செல்லமே!
செல்லப் பிராணிகளின் செய்திகள் மற்றும் படங்களுக்கென்றே தனிப் பக்கத்தைவாரந்தோறும் ஒதுக்கி, பிராணிப் பிரியர்களின் அபிமானம் பெற்றது தினமலர்.
64 நீட் தேர்வு துணைவன்
நீட் தேர்வுகளை வெற்றிகரமாக எழுதி முடிக்கக்கூடிய குறிப்புகளை அவ்வப்போதுவெளியிட்டு வருவது தினமலர்.
65 வர்மா கமிஷன் வாக்குமூலம்
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அதுதொடர்பாக ஜே எஸ் வர்மா என்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில், "வர்மாகமிஷன்" அமைக்கப்பட்டது. "ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில்பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் இருந்தனவா?" என்பது குறித்து நடந்த விசாரணைஅது. அந்த விசாரணையில் பங்கெடுத்து வாக்குமூலம் தாக்கல் செய்யும்படி, தமிழகத்தின்அனைத்துப் பத்திரிகைகளுக்கும் நீதிபதி ஜே எஸ் வர்மா தன் செயலாளர் லூத்ரா மூலமாகநேரடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்குப் பதில் அளித்து வர்மா கமிஷனில்வாக்குமூலம் தாக்கல் செய்த ஒரே பத்திரிகை தினமலர்.
66 பன்மொழிப் பட விமர்சனம்
தமிழ்ச் சினிமா படங்களுக்கு விமர்சனம் எழுதுவது மட்டுமே தமிழக பத்திரிகைகளின்வழக்கம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய அனைத்துமொழிகளிலும் திரையிடப்படும் நல்ல படங்களின் விமர்சனங்களையும் வெளியிட்டு வரும்ஒரே நாளிதழ் தினமலர்.
67 ஆளுமைத் தலைமுறைகள்
இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி, ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன், பிரஸ் டிரஸ் ஆஃப்இந்தியா போன்ற தேசிய அளவிலான செய்திகள் சார்ந்த நிறுவனங்களின் தலைமைத்தகுதியை முனைவர் இரா லட்சுமிபதி மற்றும் அவரின் இரண்டாவது மகன் ஆதி மூலம்என்றவாறு இரண்டு தலை முறைகள் பெற்றுத் திகழும் அளவுக்கானச் சாதனையைச்செய்தது தினமலர்.
68 ஆய்வாளருக்கு ஆராதனை
இந்திய அரசின் தொல்காப்பியர் விருது, லண்டன் ராயல் நியூமிஸ்மேடிக் சொசைட்டிஃபெல்லோஷிப் விருது, சங்க கால நாணயங்களின் தந்தை எனும் பட்டம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது என்றவாறு நீளுயரும் பட்டியலைகொண்ட சாதனையாளரான முனைவர் இரா கிருஷ்ணமூர்த்தியை ஆசிரியராகக்கொண்டிருந்தது தினமலர்
69 'புதுமலர்' புறப்பாடு
பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்ற காலங்களில் தேர்தல் செய்திகளில்பொதுமக்களுக்கு அளப்பரிய ஈடுபாடு இருப்பதுண்டு. அவர்களின் உணர்வுகளுக்குஉதவுகின்ற வகையில், தேர்தல் காலங்களில் மட்டுமல்ல., தேர்தல் முடிந்து வாக்குஎண்ணிக்கை அறிவித்து முடிக்கும் நாள் வரையிலும், "புது மலர்" என்ற பெயரில், பத்திரிக்கையை டேப்லாய்டு அளவில் உருவாக்கி, நாளிதழோடு சேர்த்து வெளியிட்டுவருவது தினமலர்.
70 குடும்ப மலர்
பத்திரிக்கை ஏஜென்ட்களின் நலன் கருதி, அவர்களின் குடும்பங்களுடனான நல்லுறவைமுன்னிட்டு, அவர்களுக்கென்றே, "குடும்ப மலர்" என்ற தனி இதழ் அச்சிட்டு வெளியிடப்பட்டுவந்தது.
71 கோலப்போட்டி
மார்கழி மாதங்களில் வீட்டு வாசலில் கோலம் போடுவது, பளபளக்கும் பண்பாடாக, பண்டைத் தமிழர் முதற்கொண்டு, இன்றுவரையிலும் தொடர்ந்து, தொய்வின்றி அரங்கேறிவருகிறது.
இந்த கலாச்சாரம் களை கட்டுவதற்குத் துணை நிற்கும் வகையில், "கோலப்போட்டிகள்" நடத்தி, இல்லத்தரசிகளின் கோலக்கலைத் திறனைத் தரமுயர்த்தி வந்தது தினமலர்.
72 கவுன்சிலிங் பயிற்சி
தொழிற்கல்விக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முறைநடைமுறைக்கு வந்தபோது அதனை எப்படி அணுகுவது என்பதில் மாணவர்களுக்குகுழப்பம் இருந்தது. விருப்பமான பாடத்தை, பொருத்தமான ஊரை, நேர்த்தியானகல்லூரியை எப்படித் தேர்வு செய்வது என்பதற்கான சிறப்புப் பயிற்ச்சியை முதன் முதலில்வழங்க ஏற்பாடு செய்தது தினமலர்.
73 பல்கலையில் கட்டிடம்
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அறவாணன்துணைவேந்தராக இருந்த காலகட்டத்தில், இதழியல் துறைக்கான தனிக் கட்டிடத்தைமுனைவர் இரா கிருஷ்ணமூர்த்தி வாயிலாகக் கட்டித் தந்தது தினமலர்.
74 ஆக்கிரமிப்புத் தடுப்பு
"ஆயிரங்காணி ஆள வந்தார் அறக்கட்டளை" பெயரில், ஆயிரக்கணக்கான ஏக்கர்நிலங்கள் அறப்பணிக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆக்கிரமித்து, உரிமைபாராட்டிக் கொள்ளச் சில சமூக விரோதிகள் முனைந்து நுழைந்தனர். அப்போது, பக்கம்பக்கமாகச் செய்திகளையும், படங்களையும் போட்டு, தர்ம காரியங்களுக்கான அந்தசொத்தை மீட்டெடுத்ததுடன், அதைத் தொடர்ந்து பாதுகாக்கும் வண்ணம், உயர்நீதிமன்றத்தில் ஆணை பெறும் அளவுக்குச் சமுதாயத் தலைவர்களை ஊக்குவித்து வெற்றிபெற்றது தினமலர்.
75 மூன்றாம் பாலினம்
அலிகள் என்று கேலியும், கிண்டலுமாகச் சமுதாயத்தால் அலைக்கழிக்கப்பட்ட ஒருஇனத்தை, அரவானிகள் என்றும், திருநங்கையர் எனவும் குறிப்பிட வைத்தது, உச்சநீதிமன்றத்தில் மூன்றாம் பாலினம் என்ற முத்திரையைப் பெறச் செய்தது, திருச்சி சிவாவின்தனிநபர் தீர்மானப்படி, திருநங்கையருக்கெனத் தனி நலத்திட்டங்களை மத்திய அரசுகொண்டு வந்தது என அனைத்துக்கும் அடித்தளமாக இருந்தது தினமலர் நாளிதழ் எழுதியதொடர் கட்டுரை என்பது வரலாறு.
(இவற்றின் பெரும்பாலான அம்சங்களில் அடியேன் நூருல்லாவின் நேரடிப் பங்களிப்புகள்உண்டு.)
ஆர் நூருல்லா


Leave a comment
Upload